சமூக போராளி..தோழர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!

தினத்தந்தி

ஆர். நல்லகண்ணு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் டிசம்பர் 16, 1925 அன்று ராமசாமி - கருப்பாயி தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்.

மாணவப் பருவத்தில் அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்ட நல்லகண்ணு 1943-1944 காலகட்டத்தில் 'கலைத் தொண்டர் கழகம்' என்னும் அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராக செயல்பட்டார்.

18 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போதிலிருந்து தன்னலமின்றி மக்களுக்காக குரல் கொடுத்து வந்தார்.

இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர்.

ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை. இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார்.

கட்சி சார்பில் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியை கட்சியின் வளர்ச்சிக்காக மீண்டும் கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர் தோழர் நல்லகண்ணு;

தாமிரபரணியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை எதிர்த்து தனது 93 வயதில் வழக்குத் தொடுத்து அதற்கு தடை பெற்றார்.

2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதுடன் 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதனுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கே திருப்பி கொடுத்தார்.

துரியன் பழத்தை சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் தீரும்..!