சீசன் வந்தாச்சு..பலாப்பழம் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

தினத்தந்தி

பலாப்பழம் உடலுக்கு பல நன்மைகள் தரும் கோடைக்கால பழமாக இருந்தாலும், அதை சரியான முறையில் சாப்பிடுவது மிகவும் அவசியம். குறிப்பாக வெறும் வயிற்றில் பலாப்பழம் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும்.

அதிகமாக பலாப்பழம் சாப்பிட்டால் வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உணவு சாப்பிட்ட 1 முதல் 2 மணி நேரத்திற்கு பிறகு பலாப்பழம் சாப்பிடுவது நல்லது.

நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் ஒரு நாளுக்கு சுமார் 80 கிராம் அல்லது 3 முதல் 4 பலாப்பழ துண்டுகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்துடன் மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகளை சமநிலையாக பெற முடியும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் தினமும் 2 முதல் 2.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

பலாப்பழத்துடன் பச்சை காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது உடல் சூட்டை குறைக்க உதவும். இது உடலின் சமநிலையை பாதுகாக்கவும் துணைபுரியும்.

சர்க்கரை நோய், கொழுப்பு கல்லீரல் நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதற்கு முன் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது. கர்ப்பம் தரிக்க முயற்சி செய்பவர்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும்.

கோடையில் தினமும் மோர் குடிப்பதால் கிடைக்கும் அசத்தலான நன்மைகள்..!