பீட்ரூட் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை!

தினத்தந்தி

சளி மற்றும் இருமல் இருக்கும் போது பீட்ரூட்டை தவிர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டதல்ல. இருப்பினும், சிலருக்கு சாப்பிட்ட பிறகு சளி அதிகரிப்பது போல உணர்ந்தால் தவிர்க்கலாம்.

குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடக்கூடாது. இதில் உள்ள நைட்ரேட் ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கலாம்.

சிலருக்கு பீட்ரூட் ஒவ்வாமை இருந்தால், தோல் அரிப்பு அல்லது ரேஷ் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் அதை தவிர்க்க வேண்டும்.

பீட்ரூட்டின் கிளைசெமிக் குறியீடு மிதமான அளவில் தான் உள்ளது. இருப்பினும், நீரிழிவு உள்ளவர்கள் அளவோடு சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

பீட்ரூட்டில் ஆக்சலேட் உள்ளது. அதனால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

பீட்ரூட்டை ஜூஸாக குடிப்பதை விட சமைத்து அல்லது சாலட் வடிவில் சாப்பிடுவது சத்துக்களை சமநிலையாக பெற உதவும்.

அதிக அளவில் பீட்ரூட் சாப்பிட்டால், சிறுநீர் அல்லது மலத்தின் நிறம் சிவப்பாக மாறலாம்; இது சாதாரணமானது, கவலைப்பட தேவையில்லை.

கொளுத்தும் வெயிலிலும் கூலாக இருக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்!