கொளுத்தும் வெயிலிலும் கூலாக இருக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்!

தினத்தந்தி

குளிக்க வேண்டும்; உடலை நீருக்குள் மூழ்கவைப்பது குளிர்ச்சிக்கு வித்திடும். ஏரி, குளம், நீச்சல் குளம் போன்றவற்றில் நேரத்தை செலவிடலாம். நீச்சல் தெரிந்திருப்பது முக்கியமானது.

credit: freepik

கார்பனேட் பானங்கள்; மது, டீ, காபி மற்றும் உடலில் நீர்ச்சத்தை இழக்க செய்யும் கார்பனேட் பானங்கள் பருகுவதை தவிருங்கள்.

credit: freepik

நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்; தர்பூசணி, முலாம் பழம், ஆரஞ்சு, திராட்சை, வெள்ளரிக்காய், கீரை வகைகள் போன்ற நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

credit: freepik

மிதமான உணவு: எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். காரமான, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.

credit: freepik

அதிக தண்ணீர்: தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். இது உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும்.

credit: freepik

சரியான திரவங்கள்; உடலில் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓ.ஆர்.எஸ் கரைசல், எலுமிச்சை பானம், மோர் அல்லது இளநீர் அருந்துங்கள்.

credit: freepik

ஆடைகள்; இலகுவான, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள்; வெளியில் செல்லும் போது சன் கிளாஸ், தொப்பி அல்லது குடை பயன்படுத்துங்கள்.

credit: freepik

வெப்பத்தை தவிர்க்கவும்; வெப்பநிலை அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலான கால கட்டங்களில் வெளியே நடமாடாதீர்கள். முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருங்கள்.

credit: freepik
கோடைக்கால குளிர்ச்சி பானம் - பதநீரின் அற்புத நன்மைகள்!