வீட்டில் பல்லி வர காரணம் இதுதான்.. தவிர்க்க என்ன செய்யணும்?

தினத்தந்தி

பல்லிகள் வீட்டில் அதிகமாக வருவதற்கு முக்கிய காரணம் பூச்சிகள் தான். கொசு, ஈ, கரப்பான் பூச்சி போன்றவற்றை உணவாக தேடி பல்லிகள் வீட்டிற்குள் வருகின்றன. குறிப்பாக சமையலறை சுத்தமாக இல்லாமல் இருந்தால் பூச்சிகள் அதிகரித்து, அதனைத் தொடர்ந்து பல்லிகளும் அதிகமாக காணப்படும்.

வீட்டில் உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை திறந்து வைத்திருப்பதும் பல்லிகளை ஈர்க்கும் ஒரு காரணமாகும். சில நேரங்களில் பல்லிகள் பழங்களிலும் உணவுப் பொருட்களிலும் வாய் வைக்கும் அபாயமும் உள்ளது. எனவே உணவுகளை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்.

கதவுகள் மற்றும் ஜன்னல்கள் நீண்ட நேரம் திறந்து இருப்பதால் வெளியிலிருந்து பல்லிகள் எளிதாக வீட்டுக்குள் நுழைகின்றன. ஜன்னல்களுக்கு வலை அல்லது திரை பொருத்துவது பல்லிகள் வருவதை குறைக்க உதவும்.

சுவர்களில் உள்ள விரிசல்கள், சிறிய துளைகள் போன்ற இடங்களில் பல்லிகள் மறைந்து வாழத் தொடங்குகின்றன. எனவே வீட்டின் சுவர்களை சரியாக பராமரித்து அவற்றை அடைத்து வைப்பது நல்லது.

அதிகமாக பொருட்கள் குவிந்திருக்கும் வீடுகளில் பல்லிகள் எளிதாக ஒளிந்து கொள்ளும். பழைய பெட்டிகள், மரச்சாமான்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை ஒழுங்காக வைத்திருப்பது பல்லி தொல்லையை குறைக்கும்.

ஈரப்பதமான மற்றும் வெப்பமான இடங்களை பல்லிகள் அதிகமாக விரும்புகின்றன. மழைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் வெப்பம் தேடி வீட்டிற்குள் நுழைவது அதிகமாக இருக்கும்.

வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை மற்றும் புதர்கள் அதிகமாக இருந்தால் பூச்சிகள் அதிகரிக்கும். இதனால் பல்லிகளும் வீட்டை நோக்கி வர ஆரம்பிக்கும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

பல்லி தொல்லையை குறைக்க பூண்டு, வெங்காயம், மிளகு ஸ்ப்ரே போன்ற இயற்கை முறைகளையும் பயன்படுத்தலாம். சிலர் முட்டை ஓடு அல்லது நாப்தலின் உருண்டைகளையும் பயன்படுத்துகின்றனர்.

வீட்டை சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்துக் கொண்டு, பூச்சிகள் வராமல் தடுப்பதன் மூலம் பல்லி தொல்லையை பெரும்பாலும் தவிர்க்க முடியும்.

அஜீரணத்தையும் மலச்சிக்கலையும் போக்கும் நவ்காசனம்!