இந்த வார சமையல் டிப்ஸ்!

தினத்தந்தி

மிளகாய்த்தூள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காய கட்டியை போட்டு வைத்தால் போதும். மிளகாய்த்தூள் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.

வெஜிடபிள் கட்லெட் தயாரிக்கும்போது சிறிதளவு தேங்காய் சேருங்கள். கட்லெட் அதிக ருசி தரும்.

ஆப்பத்திற்கு மாவு கலக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேருங்கள். ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.

பளபளப்பான தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால், அந்த இடத்தில் சிறிதளவு அரிசி மாவு அல்லது வேறு தானிய மாவை தூவி, சிறிது நேரம் கழித்து பேப்பரால் துடைத்தால் எண்ணெய் தன்மை நீங்கிவிடும்.

உளுந்து வடை மாவு தயாரிக்கும் போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க வேண்டும். வடை முறுமுறுப்பாக இருக்கும். அதிக எண்ணெய் செலவாகாது.

ரவா உப்புமா தயாரிக்கும்போது இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை நெய்யில் போட்டு வதக்குங்கள். இவ்வாறு தயாரிக்கும் உப்புமாவை மிதமான சூட்டில் சாப்பிடுவது பிரமாதமான சுவையை தரும்.

சமையல் எண்ணெயை சூடாக்கும்போது சில நேரங்களில் திடீரென்று புகை கிளம்பும். அப்படி புகை ஏற்படாமல் இருக்க எண்ணெயில் சிறிதளவு புளி போடலாம்.

கறிவேப்பிலையை பொடியாக அரைத்து ரசம், சாம்பார் இறக்கும் போது ஒரு டீஸ்பூன் சேர்த்தால் வாசனையாக இருக்கும். கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிடலாம்.

தனியா, கடலை பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து பொரியல், கூட்டு போன்றவற்றில் பயன்படுத்தலாம். மிகவும் ருசியாக இருக்கும்.

நெத்திலி கருவாடு தொக்கு - கிராமத்து ஸ்டைல் ரெசிபி!