தினத்தந்தி
இரண்டு தவளைகள் தற்செயலாக ஒரு பெரிய பால் பாத்திரத்திற்குள் விழுந்தன.
பாத்திரத்தின் வழுக்கும் சுவர்களால் அவற்றால் மேலே ஏறித் தப்பிக்க முடியவில்லை.
முதல் தவளை "இனி நம்மால் தப்பிக்க முடியாது" என நினைத்து முயற்சியைக் கைவிட்டது.
எந்த முயற்சியும் செய்யாததால், அது பாலுக்குள் மூழ்கித் தன் உயிரை இழந்தது.
ஆனால், இரண்டாவது தவளை நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து கால்களை அடித்து நீந்திக் கொண்டே இருந்தது.
தொடர்ந்து கால்களை வேகமாக அசைத்ததால், பால் நன்றாகத் திரண்டு வெண்ணெய்யாக (Butter) மாறியது.
கெட்டியான வெண்ணெய் மீது ஏறி நின்று, ஒரே குதியா குதித்துப் பாத்திரத்தை விட்டு வெளியே தப்பியது.
சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள்! வழி தானாகப் பிறக்கும்.