உலகில் இருக்கும் வித்தியாசமான இயற்கை நிகழ்வுகள்!

தினத்தந்தி

வடதுருவ ஒளி – வானத்தில் பச்சை, ஊதா போன்ற நிறங்களில் ஒளி ஆடும் அற்புத காட்சி.

நீல நெருப்பு – சில எரிமலைப் பகுதிகளில் கந்தக வாயுக்கள் எரிவதால் நீல நிற தீப்பிழம்புகள் தோன்றும்.

பாடும் மணல் – சில பாலைவனங்களில் மணல் நகரும்போது விசித்திரமான இசை போன்ற சத்தம் உருவாகும்.

வட்ட வானவில் – குறிப்பிட்ட சூழ்நிலையில் வானவில் முழு வட்டமாகத் தோன்றும்.

லெண்டிகுலர் மேகங்கள் – மலைப்பகுதிகளில் உருவாகும் இம்மேகங்கள் சில நேரங்களில் பறக்கும் தட்டு போல காட்சியளிக்கும்.

எரிமலை மின்னல் – சில பெரிய எரிமலை வெடிப்புகளின் போது சாம்பல் மற்றும் மின்சாரத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால், எரிமலை மேகத்துக்குள் மின்னல் தோன்றும்.

பந்து மின்னல் – இடியுடன் கூடிய புயல்களில் அரிதாகக் காணப்படும் ஒளிரும் உருண்டை போன்ற மின்சார நிகழ்வு.

ஒளிரும் கடல் – சில கடற்கரைகளில் நுண்ணுயிரிகளால் இரவில் கடல் நீர் நீல நிறத்தில் ஒளிரும்.

கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நகரங்கள்!