தினத்தந்தி
🔹 அரிசி களைந்த இரண்டாவது நீரில் சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவற்றை வேகவைத்தால், அவற்றின் அரிப்புத்தன்மை குறையும்.
🔹 ஒரு ஸ்பூன் சட்னியை தட்டில் வைத்தபோது தண்ணீர் பிரியாமல் கெட்டியாக இருந்தால், அதுவே சட்னியின் சரியான பதமாகும்.
🔹 உப்புமா செய்யும்போது சிறிதளவு புளித்த தயிர் சேர்த்தால் அதன் சுவை மேலும் சிறப்பாக இருக்கும்.
🔹 முருங்கை இலையை எண்ணெயில் பொரித்து, அதனுடன் வறுத்த மிளகு, சீரகம், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொடியாக அரைத்து நெய் சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
🔹 எலுமிச்சை சாதம் செய்யும்போது சிறிதளவு துருவிய மாங்காய் சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.
🔹 அப்பத்திற்கு மாவு அரைக்கும் போது தேங்காய், வெல்லத்துடன் நான்கு துண்டு அன்னாசிப்பழம் சேர்த்து அரைத்தால் அப்பம் மேலும் ருசியாக இருக்கும்.
🔹 வேகவைத்த கொண்டைக்கடலையுடன் வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு, சாட் மசாலா, உப்பு, எலுமிச்சைச்சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து சுண்டல் செய்தால் சுவை மிகுந்ததாக இருக்கும்.
🔹 ஆரஞ்சுத் தோலை சிறு துண்டுகளாக நறுக்கி வற்றல் குழம்பு கொதிக்கும்போது சேர்த்தால், குழம்பிற்கு தனித்துவமான மணமும் சுவையும் கிடைக்கும்.