தினத்தந்தி
🔸 உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது அரை கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் சேர்த்து வதக்கினால் கூடுதல் சுவையும், மிருதுவான தன்மையும் கிடைக்கும்.
🔸 பொரி உருண்டை செய்வதற்கு முன் அவல் பொரியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, பிறகு வெல்லப்பாகில் கலந்து உருண்டை பிடித்தால் கரகரப்பாக இருக்கும்.
🔸 புதினா அதிகமாக கிடைக்கும் காலத்தில் வாங்கி நிழலில் உலர்த்தி சேமித்து வையுங்கள். மசாலா உணவுகளில் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்.
🔸 பொரித்த அப்பளம் மொறுமொறுப்பாக இருக்க, ஆறிய பிறகு ஸ்டீல் பாத்திரத்தில் போட்டு மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் இரண்டு நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
🔸 பக்கோடா மாவில் சிறிதளவு நெய் மற்றும் உப்பு கலந்த தயிர் சேர்த்து கலந்தால், பக்கோடா மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் வரும்.
🔸 முருங்கை இலையை நெய்யில் லேசாக வறுத்து நொறுக்கி தோசை மாவில் கலந்து சுட்டால் மணமும் சத்தும் நிறைந்த தோசை கிடைக்கும்.
🔸 இரவில் சப்பாத்தி அல்லது பூரி சாப்பிட்டால், ஒரு கரண்டி தயிரில் 3 ஸ்பூன் சர்க்கரை கலந்து சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுவதுடன் நெஞ்செரிச்சலையும் குறைக்கும்.
🔸 முள்ளங்கியை துருவி கோதுமை மாவுடன் சேர்த்து மிளகாய், உப்பு கலந்து சப்பாத்தி செய்தால் சத்தான மற்றும் சுவையான உணவாக இருக்கும்.
🔸 மென்மையான உளுந்து போண்டா வேண்டுமெனில், மாவு அரைக்கும் போது வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அரைத்தால் போண்டா பஞ்சுபோல் மென்மையாக இருக்கும்.