தினத்தந்தி
கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு செய்யும்போது ஒரு ஸ்பூன் கெட்டித் தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்தால், நெய் நீண்ட நாட்கள் நல்ல மணத்துடன் இருக்கும்.
பீன்ஸ், கொத்தவரங்காய் வேகவைக்கும் போது ஆரம்பத்திலேயே உப்பு சேர்க்காமல், இறுதியில் சேர்த்தால் விரைவாக வெந்துவிடும்.
வடை மாவில் சிறிதளவு சாதம் சேர்த்து பிசைந்து வடை சுட்டால், எண்ணெய் அதிகம் குடிக்காமல் மிருதுவான வடை கிடைக்கும்.
பால் பாயசத்தில் ஒரு கைப்பிடி பாதாமை அரைத்து சேர்த்தால், பாயசத்தின் சுவையும் மணமும் கூடுதல் சிறப்பாக இருக்கும்.
வாழைப்பூ நறுக்கும் முன் கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டால், கைகளில் கறை படிவதைத் தவிர்க்கலாம்.
குழம்புப் பொடி, ரசப்பொடி அரைக்கும் போது காய்ந்த கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்தால், பொடிக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.
ராஜ்மாவை நன்றாக வேகவைத்து, தாளிக்கும்போது கடுகு, இஞ்சி, மிளகாய் சேர்த்து இறுதியில் எலுமிச்சை சாறு பிழிந்தால் சுவை அசத்தலாக இருக்கும்.