தினத்தந்தி
கோடை காலத்தில் அதிகமாக விளையும் இந்த பழம், சுவை குறைவு என்றாலும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குகிறது.
கிரான்பெர்ரியை சாப்பிடுவதால், மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அசிடிட்டி போன்ற வயிறு பிரச்சினைகளில் இருந்து ஆரோக்கியமாக இருக்கலாம்.
கிரான்பெர்ரியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பிற நோய்களின் வீரியத்தை குறைக்க உதவி புரிகிறது.
இதில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் ஏற்படும் ரத்த பற்றாக்குறையை ஈடுசெய்யும் தன்மை வாய்ந்தது.
கிரான்பெர்ரியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் சோர்வின்றி சுறுசுறுப்பாக செயல்பட தூண்டும்.
கிரான்பெர்ரியை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுப்படுத்த முடியும்.
கிரான்பெர்ரி இதயம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
சிறுநீர் தோற்று பிரச்சினையை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக அடிக்கடி தொற்று ஏற்படுபவர்களுக்கு இது சிறந்தது.