இடதுசாரி – வலதுசாரி என்றால் என்ன?

தினத்தந்தி

அரசியல் செய்திகளில் அடிக்கடி “இவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர்” அல்லது “இது வலதுசாரி கட்சி” என்று கேள்விப்பட்டிருப்போம். இதன் அர்த்தம் என்ன? இந்த கருத்து (French Revolution) காலத்தில் உருவானது.

அப்போது நாடாளுமன்றத்தில் மன்னருக்கு வலது (Right) பக்கம் அமர்ந்தவர்கள், “மன்னராட்சி மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் தொடர வேண்டும்” என்று கூறினர்.

மன்னருக்கு இடது (Left) பக்கம் அமர்ந்தவர்கள், “மாற்றம் வேண்டும், மக்கள் ஆட்சி மற்றும் சமத்துவம் வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இடதுசாரி (Left Wing) : சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வேண்டும் என்று நம்புவார்கள்.

அரசு மக்களின் நலனுக்குப் பெரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கருதுவார்கள். மேலும் இலவச கல்வி, மருத்துவம் மற்றும் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆதரிப்பார்கள்.

வலதுசாரி (Right Wing) : நாட்டின் பண்பாடு, மதம் மற்றும் தேசிய உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அரசு வணிகத்தில் அதிகம் தலையிடக் கூடாது என்று கருதுவார்கள். தனியார் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

நடுநிலைவாதிகள் (Centrists) : பெரும்பாலான மக்கள் அல்லது அரசியல் கட்சிகள் முழுமையாக இடதுசாரி அல்லது வலதுசாரி ஆக இருக்க மாட்டார்கள். இரண்டிலும் உள்ள நல்ல கொள்கைகளை எடுத்துக்கொண்டு செயல்படுபவர்கள் நடுநிலைவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சிக்கனா.. மட்டனா..? அடிக்கடி சாப்பிட எது சிறந்தது?