சிலிண்டர் தட்டுப்பாடு முதல் இஸ்ரோ வரை... கடைசி 24 மணி நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது?

Vignesh

✦ சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; முன்னுரிமை அடிப்படையில் வணிக சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை!

✦ "தி.மு.க.வால் காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க.விற்கு அதிக தொகுதிகள் கொடுக்க முடிகிறது. ஆனால் எங்களுக்கு கொடுக்க முடியாது என சொல்வது நியாயம் அல்ல!" - மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி

✦ டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மே 31-ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

✦ கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு நாளை ஆஜராக உள்ள நிலையில், இன்று டெல்லி செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்!

✦ ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மறுதினம் வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✦ சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் பறக்கும் ரெயில் சேவை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

✦ "கேன்களில் பெட்ரோல் வழங்க மறுத்தால் மிரட்டுகிறார்கள். எனவே 7,000 பெட்ரோல் பங்குகளுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்!" - தமிழக டி.ஜி.பி.க்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடிதம்

✦ சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு; ஒரு சவரன் ரூ.1,18,080-க்கும், ஒரு கிராம் 14,760-க்கும் விற்பனை!

✦ நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனையின் முக்கிய சோதனையான கடல்மட்ட சோதனை வெற்றி; இஸ்ரோ தகவல்!

சமையலுக்கு சிறந்தது நாட்டு தக்காளியா? ஹைபிரிட் தக்காளியா?