மிசா சட்டத்தின் கீழ் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலும் மு.க. ஸ்டாலின், முரசொலி மாறன் உள்ளிட்டோர் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிட்டிபாபு சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில், பின்னர் 1977-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.