தினத்தந்தி
வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால் பதற்றப்படாமல் அமைதியாக செயல்படுவது மிகவும் முக்கியம். பாம்பை அடிக்கவோ, பிடிக்க முயற்சிக்கவோ கூடாது. முதலில் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்.
பாம்புக்கு வெளியே செல்லும் வழியாக கதவு அல்லது ஜன்னலை திறந்து வைத்து, அதற்கு அருகில் செல்லாமல் பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும். பாம்பு எங்கு நகர்கிறது என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.
விஷப்பாம்பா இல்லையா என்பதை தாங்களாகவே கண்டறிய முயற்சிக்க வேண்டாம். பாம்பை சீண்டுவது அல்லது துரத்துவது ஆபத்தை அதிகரிக்கலாம்.
வீட்டைச் சுற்றியுள்ள புதர்கள், குப்பைகள், தேவையற்ற பொருட்கள் மற்றும் எலி தொல்லைகளை அகற்றி சுத்தமாக வைத்திருப்பது பாம்புகள் வருவதை குறைக்க உதவும்.
பாம்பு வீட்டிற்குள் இருந்தால் உடனடியாக உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் அல்லது பாம்பு மீட்பு நிபுணர்களை தொடர்புகொள்வது பாதுகாப்பான வழியாகும்.
மழைக்காலங்களில் பாம்புகள் பாதுகாப்பான இடம் தேடி வீடுகளுக்குள் வரக்கூடும். எனவே கதவு, ஜன்னல் மற்றும் வடிகால் பகுதிகளை பாதுகாப்பாக மூடி வைப்பது நல்லது.
முக்கியமாக, பாம்பை கொல்ல முயற்சிப்பதை விட, பாதுகாப்பாக மீட்டு இயற்கை வாழ்விடத்திற்கு அனுப்புவதுதான் சிறந்த மற்றும் சட்டபூர்வமான நடைமுறையாகும்.