ஏன்? சும்மா தரை மேல தண்டவாளம் போட்டா ரெயில் ஓடாதா? எதற்காக இந்த கற்கள் என்ற கேள்வி நாம் அனைவருக்கும் இருக்கும். அதற்கான தீர்வை காணலாம்.
ஒரு ரெயில் பல ஆயிரம் டன் எடை கொண்டது. அந்த மொத்த எடையும் அந்த மெல்லிய இரும்புத் தண்டவாளத்தின் (Rails) மீதுதான் விழுகிறது.
வெறும் மண்ணின் மீது தண்டவாளம் இருந்தால், ரெயிலின் எடைக்குத் தண்டவாளம் அப்படியே பூமிக்குள் புதைந்துவிடும்.
இந்தக் கற்கள் தான், ரெயிலின் மொத்த எடையையும் பரவலாகப் பிரித்து, பூமிக்குள் புதையாமல் தாங்கிப் பிடிக்கிறது.
ரெயில் வேகமா போகும்போது மிகப்பெரிய அதிர்வு உண்டாகும். இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று இருக்கமாகப் பின்னிக்கொண்டு ஒரு ஸ்பிரிங் போலச் செயல்பட்டு, ரெயில் போகும்போது ஏற்படும் அதிர்வுகளை உறிஞ்சி, தண்டவாளம் விலகாமல் பார்த்துக்கொள்கிறது.
மழை பெய்தால் தண்ணீர் தேங்கி மண் சேறாகிவிடும். ஆனால், கற்கள் இருந்தால் தண்ணீர் உடனே வடிந்துவிடும்.
தண்டவாளத்துக்கு அடியில் புல், செடி வளர்ந்தால் வேர்கள் மண்ணைப் பிளந்துவிடும். கற்கள் இருப்பதால் செடிகள் வளர முடியாது.
தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் கற்களுக்குப் பெயர்- ட்ராக் பேலஸ்ட் (Track Ballast).