தினத்தந்தி
சமையல் கலையில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வெங்காயத்தை வெட்டும்போது கண்கள் கலங்கிடும். வெங்காயம் ஏன் உங்களை அழ வைக்கிறது தெரியுமா?
வெங்காயம் மண்ணுக்கு அடியில் விளையும் போது, எலி அல்லது பூச்சிகள் அதைச் சாப்பிடாமல் இருக்க, இயற்கை அதற்கு இந்த பாதுகாப்பு அமைப்பைக் கொடுத்துள்ளது.
வெங்காயத்தின் செல்களுக்குள் இரண்டு விஷயங்கள் தனித்தனியாக இருக்கும். (அமினோ ஆசிட் சல்பாக்சைடு),(அலினேஸ் நொதி).
நீங்கள் கத்தியை வைத்து வெங்காயத்தை வெட்டும்போது, அதன் செல்கள் உடையும். அப்போது தனியாய் இருந்த அந்த இரண்டு வேதிப்பொருட்களும் ஒன்றாகக் கலக்கும்.
அப்பொழுது ஒரு ரசாயன மாற்றம் நடந்து, "சின்-புரோப்பனேத்தியல்-எஸ்- ஆக்சைடு" " Syn-propanethial-S-oxide) என்கிற ஒரு வாயு (Gas) வெளியேறும்.
இந்த வாயு காற்றில் பரவி, நேராக நம் கண்ணுக்குள் போகும். நம் கண்ணில் இருக்கும் ஈரப்பதத்துடன் இந்த வாயு கலக்கும்போது, அது லேசான "சல்பியூரிக் அமிலமாக" (Sulphuric Acid) மாறும்.
நமது கண்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை. இந்த அமிலம் கண்களில் நுழையும்போது, கண்கள் எரிச்சலடையத் தொடங்குகிறது. இந்த எரிச்சலைக் குறைக்க, நமது மூளை கண் சுரப்பிகளுக்கு சிக்னல்களை அனுப்பி கண்களுக்குள் நுழைந்த அமிலத்தை வெளியேற்றுகிறது.
இந்த சிக்னல்கள் கண் சுரப்பிகள் அதிக கண்ணீரை உருவாக்குகின்றன. வெங்காயத்தை வெட்டும்போது நம் கண்களில் இருந்து வரும் கண்ணீர்தான் இவை.
வெங்காயத்தை வெட்டுவதற்கு முன் 10 நிமிடம் ப்ரிட்ஜில் (Fridge) வையுங்கள். குளிர்ச்சியில் அந்த வாயு வெளியேறாது. அல்லது தண்ணீருக்குள் வைத்து வெட்டலாம். வாயு காற்றில் பரவாது.