அனைவருக்கும் தியானம் ஏன் அவசியம்?

தினத்தந்தி

தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மனம் கிளர்ச்சியிலிருந்து விடுபட்டு, அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும்போது, ​​தியானம் நிகழ்கின்றது. தியானம் செய்வதன் மூலம், உங்கள் உடலை ஒரு ஆற்றல் மூலமாக உருவாக்குவதன் மூலம் உங்கள் உடலை ஒரு சக்தி நிறைந்த ஆற்றல்மய்யமாக மாற்ற முடியும்.

10 நிமிடம் தியான நிலையில் உட்கார்ந்து சுவாசிக்கும்போது தூய்மையான காற்று உள்ளே செல்கிறது. அதனால் மார்பு விரிவடைந்து நம் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

தியானம் கற்கும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

மூளையை சமச்சீராக செயல்பட வைத்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு இளமையையும் தியானம் தருகிறது.

தீய எண்ணங்களை விரட்டி, உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.

மது, சிகரெட் போன்ற தீய செயல்களில் இருந்து விடுபட உதவுகிறது. நம் கவனத்தை கூர்மைப்படுத்துகிறது.

பொறுப்புணர்வை அதிகரிக்கச்செய்து கவலையை போக்குகிறது மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரித்து, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

தியானம் செய்வதால் படிப்பு,வேலை என்று எந்த நிலையிலும் நம் கவனம் சிதறாது. இது நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறது.

கேரளா அருகே பார்க்க வேண்டிய அழகான மலைவாசஸ்தலங்கள்!