கீபோர்டில் F & J பட்டனில் மட்டும் கோடு ஏன்?

தினத்தந்தி

நம் தினமும் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் யூஸ் பண்றோம். ஆனால், அந்த கீபோர்டுல் இருக்கிற 'F' மற்றும் 'J' பட்டனில் மட்டும் ஏன் ஒரு சின்ன கோடு அல்லது மேடு (Bump) இருக்கிறது என்று யோசித்தீர்களா?

இந்தக் கோடுகள் இருக்கிறதுக்கு முக்கியமான காரணம் "டச் டைப்பிங்" (TouchTyping) அதாவது,கீபோர்டு பார்க்காமலே வேகமாகவும் சரியாகவும் டைப் பண்றதுக்காகத்தான் இந்த ஏற்பாடு.

நீங்கள் டைப் பண்ணத் தொடங்கும்போது, உங்கள் இரண்டு கை ஆள்காட்டி விரல்களும் (Index Fingers) இந்த 'F' மற்றும் 'J' மேல்தான் இருக்கணும். விரைவாக டைப் செய்ய இதுதான் "ஹோம் பொசிஷன்".

இந்த இரண்டு பட்டனை மட்டும் உங்கள் விரல்கள் அடையாளம் கண்டு பிடித்தால் போதும், மத்த எல்லா எழுத்துக்களும் எந்த இடத்தில் இருக்கிறது என்று உங்கள் மூளை தானாக கணிக்கக்கூடும்.

நீங்கள் இருட்டு அறையில் இருந்தாலோ அல்லது கீபோர்டைத் திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் வேகமாக வேலை செய்தாலோ, இந்த சிறிய கோடுதான் உங்கள் விரல்களுக்கு "வழிகாட்டி".

இந்த அருமையான ஐடியாவை June E. Botich என்ற பெண்மணி 1982-ல் கண்டுபிடித்தார்.

கண்டுபிடிப்புக்கு முன்னால் வரைக்கும் மக்கள் கீபோர்டைப் பார்த்துப் பார்த்து டைப் பண்ணி ரொம்பக் சிரமப்பட்டனர். பின் இவர் வந்த பிறகுதான் டைப்பிங் ஸ்பீடு முன்னேறியது!

இந்த 'F' மற்றும் 'J' கோடுகள், நீங்கள் கீபோர்டைப் பார்க்காமலேயே ஒரு "டைப்பிங் மாஸ்டராக" மாற உதவுகிற சீக்ரெட் கோடுகள்!

அனைவருக்கும் தியானம் ஏன் அவசியம்?