பெட்ரோல் பங்கில் “No Mobile” போர்டு ஏன்? அதற்குப் பின்னால் இருக்கும் உண்மை காரணம்!

தினத்தந்தி

பெட்ரோல் பங்கிற்கு சென்றால் “No Mobile” என்று எழுதப்பட்ட போர்டு நம் கண்களில் படும். போன் பேசினால் பெட்ரோல் பங்க் வெடித்துவிடுமோ என்று பலர் பயப்படுகிறார்கள். ஆனால் மொபைல் போனில் இருந்து வரும் ரேடியோ அலைகளால் பெட்ரோல் தீப்பிடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படியிருக்க, ஏன் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது?

உண்மையில் ஆபத்து மொபைல் போனில் இல்லை; நம் உடலில் உருவாகும் நிலை மின்சாரம் (Static Electricity) தான் முக்கிய காரணம். பைக்கிலிருந்து அல்லது காரிலிருந்து இறங்கும்போது, நம்முடைய உடை சீட்டில் உராய்வதால் உடலில் சிறிய அளவு மின்சாரம் உருவாகும்.

இந்த Static Electricity-யை நாம் பலமுறை அனுபவித்திருக்கலாம். சில நேரங்களில் யாரையாவது தொடும்போது “சட்” என்று ஒரு சிறிய ஷாக் அடிப்பதை பார்த்திருப்பீர்கள்; அதுவே அந்த நிலை மின்சாரம்.

நாம் போன் பேசிக்கொண்டே காரிலிருந்து இறங்கும்போது முழு கவனமும் அந்த பேச்சிலேயே இருக்கும். அந்த நேரத்தில் காரின் மெட்டல் கதவைத் தொடாமல் நேரடியாக பெட்ரோல் நிரப்பும் நாசில் (Nozzle) அருகே சென்றால், உடலில் இருக்கும் அந்தச் சிறிய மின்சாரம் ஒரு ஸ்பார்க் (Spark) உருவாக்கலாம்.

பெட்ரோல் பங்குகளில் கண்ணுக்குத் தெரியாத பெட்ரோல் ஆவி (Petrol Vapor) காற்றில் கலந்திருக்கும். அந்தச் சிறிய பொறி அந்த ஆவியுடன் சேர்ந்தால், அது பெரிய விபத்திற்குக் காரணமாகலாம்.

மேலும், பெட்ரோல் நிரப்பும் போது போன் பேசிக்கொண்டிருந்தால் எவ்வளவு பெட்ரோல் நிரப்பப்படுகிறது, டேங்க் நிரம்பிவிட்டதா என்பதைக் கவனிக்க முடியாது. பெட்ரோல் கீழே சிந்தினாலும் கவனிக்காமல் போகலாம்; அதுவும் ஆபத்தாகும்.

உலகத்தில் இதுவரை மொபைல் போனின் சிக்னல் காரணமாக பெட்ரோல் பங்க் வெடித்ததாக எந்தச் சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், போன் பேசிக்கொண்டிருந்ததால் கவனக்குறைவால் நடந்த விபத்துகள் பல உள்ளன.

அதனால், பெட்ரோல் பங்கில் “No Mobile” என்று கூறப்படுவது போன் வெடிக்கும் என்பதற்காக அல்ல; அங்கு இருக்கும் போது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த ஊருக்கு தேனிலவு போங்க.. வாழ்க்கையில் மறக்கவே மாட்டீங்க!