லேப்டாப் சார்ஜரில் இந்த உருளை ஏன்?

Subash

உங்க லேப்டாப் சார்ஜர் அல்லது சில மானிட்டர் கேபிள்களில், ஒரு முனையில் மட்டும் தடிமனான உருளை வடிவத்தில் ஒரு பிளாஸ்டிக் இருக்கும். அது எதற்கென்று தெரியுமா?
இதற்குப் பெயர் "பெரைட் பீட்" (Ferrite Bead) அல்லது "பெரைட் கோர்" (Ferrite Core). இதை உடைத்துப் பார்த்தால், உள்ளே இரும்புத் துகள்கள் கலந்த ஒரு காந்த வளையம் (Magnetic Ring) இருக்கும்.
எந்த ஒரு நீளமான வயரும் (Wire), ஒரு "ஆண்டெனா" போல செயல்படும் குணம் கொண்டது.
லேப்டாப்பில் உள்ள எலக்ட்ரானிக் பாகங்கள் வேலை செய்யும்போது, அது கண்ணுக்குத் தெரியாத ரேடியோ அலைகளை (Radio Frequency) வெளியிடும்.
இந்த அலைகள் சார்ஜர் வயர் வழியாகப் பயணித்து, வெளியிலிருக்கும் ரேடியோ, டிவி அல்லது வைஃபை (Wi-Fi) சிக்னலைக் குழப்பிவிடும்.
இந்த பெரைட் பீட் மின்சாரத்தை மட்டும் அனுமதிக்கும். அதேசமயம் தேவையற்ற ரேடியோ இரைச்சலை (Noise) உறிஞ்சி, அதை வெப்பமாக மாற்றி அழித்துவிடும்.
சுருக்கமா சொன்னால், உங்க லேப்டாப் சார்ஜர், வீட்ல இருக்கற டிவியையோ ரேடியோவையோ தொந்தரவு பண்ணாம இருக்கத்தான் இந்த செட்டப்!
லேப்டாப் சார்ஜர் மட்டுமல்ல, பழைய டிவி கேபிள்கள், பிரிண்டர் கேபிள்களிலும் இதைப் பார்க்கலாம். இது இல்லைனா உங்க ஸ்பீக்கர்ல "கிர்ர்ர்ர்"னு ஒரு சத்தம் வரும்!
Explore