நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் பலன்தரும்..வயிறு மற்றும் முதுகு தசை பயிற்சிகள், ஆரோக்கியமான உடல் எடை பராமரிப்பு அவசியம்..நீண்ட நேரம் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காருவது கூடாது. கனமான பொருட்கள் தூக்குதலைத் தவிர்க்கவேண்டும்..புகைப்பிடிப்பது முதுகுவலியின் அபாயத்தை அதிகரிப்பதால் அந்த பழக்கத்தை நிறுத்தவேண்டும். முதுகை அழுத்தும் அசைவுகளைத் தவிர்க்கவேண்டும்..எலும்புகள் வலுப்பெற பால், தயிர், பாலாடை கட்டி, புரக்கோலி, முட்டை, கடல் உணவுகள், இறைச்சி வகைகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.பாதாம், பிஸ்தா, கருப்பு உளுந்து, பேரீச்சை, அத்திப்பழம் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதுடன் ரத்தத்தில் சீரான வைட்டமின் டி அளவை பராமரிக்க வேண்டும்..வெந்தயக்கீரை, பாலக்கீரை, முடவாட்டுக்கால் கிழங்கு, பிரண்டைத் தண்டு ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்..Explore