மறக்க முடியாத அனுபவத்தை தரும் மகாபலிபுரம் சுற்றுலா!

Photo: Wikipedia
சென்னையை அடுத்த மகாபலிபுரம் பாரம்பரியமும், பண்பாடும் இணைந்த சர்வதேச பெருமை பெற்ற புராதன சின்னங்கள் அடங்கிய சுற்றுலாத்தலமாகும்.
Photo: Wikipedia
பரபரப்பான துறைமுக நகரமாக இருந்த மகாபலிபுரம் பல்லவ மன்னர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கி.பி நான்கு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருந்தது.
Photo: Wikipedia
கட்டிடக்கலையின் தொழில்நுட்பத்தில் உலகையே தங்கள் வசம் ஈர்த்த அதிசய திறன் படைத்தவர்களாக பல்லவர்கள் இருந்தார்கள். ஒரு முழுமையான கோவிலையே கல்லை குடைந்து செதுக்கக்கூடிய நுட்பமான திறமை அவர்களிடம் இருந்தது.
Photo: Wikipedia
தொழில்நுட்ப வசதிகள் எதுவுமே இல்லாத பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட கற்கோவிலை உருவாக்குவது என்பது கட்டிடக்கலை நிபுணர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Photo: Wikipedia
வரலாற்றின் சுவடுகளாக விளங்கும் மகாபலிபுர சிற்பங்களை போற்றும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக மகாபலிபுரத்தை அறிவித்துள்ளது.
Photo: Wikipedia
இங்குள்ள அர்ஜுனனின் தவம் என்று சொல்லப்படும் 29 மீட்டர் அகலமும் 13 மீட்டர் உயரமும் கொண்ட புகழ்பெற்ற கல்வெட்டு பகிரத மன்னன் கங்கை நதியை வானத்திலிருந்து பூமிக்கு கொண்டு வந்த புராணக் கதையை சித்தரிக்கிறது.
Photo: Wikipedia
மேலும் கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என்ற ஒரு பிரம்மாண்டமான பாறை உருண்டை வித்தியாசமான முறையில் புவி ஈர்ப்பு விசையின் சமநிலையை நிரூபிப்பது போல நின்று கொண்டுள்ளது.
Photo: Wikipedia
அத்துடன் கிபி 640 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான கலங்கரை விளக்கத்தையும் அங்கு சுற்றுலா செல்பவர்கள் பார்ப்பது அவசியம்.
Photo: Wikipedia
Explore