இப்படிலாம் கூட லவ் புரபோஸ் பண்ணலாம் ப்ரோ..!

தினத்தந்தி

லவ் புரபோஸ் என்றால் அது ஆண் பெண்ணுக்கு பண்ணுவது என்று தான் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது அந்த புரிதல் முற்றிலும் மாறியிருக்கிறது.

ஆண், பெண் இருவரில் யார் வேண்டுமானாலும் அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு புரபோஸ் செய்யலாம். எப்படி புரபோஸ் செய்கிறீர்கள், அது உங்கள் காதலரை எப்படி கவர்கிறது என்பதும் நீங்கா நினைவுகளாக இருக்கும்.

01 : நீங்கள் புரபோஸ் செய்யப் போகும் நபர் செல்லும் இடத்தில் ஒரு குறிப்புச் சீட்டை எழுதி வைத்து அதன் அடுத்தடுத்த குறிப்புகளை வெவ்வேறு அழகாக இடங்களில் வைத்து விடுங்கள்.

நீங்கள் சீட்டு வைக்கும் ஒவ்வொரு இடமும் ரசிக்கும்படி இருக்க வேண்டும். அதேசமயம் அருகருகே இருக்க வேண்டும். அலைய வைக்கும்படி இருக்கக் கூடாது. கடைசி குறிப்பு நீங்கள் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். கடைசியாக உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.

02 : உங்கள் ஊரிலேயே மிக அழகான இடம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அங்கே வரவழைத்து காதலை சொல்லலாம். இப்படி சொல்லுவது இருவருக்கு ரம்மியமான பொழுதாக இருக்கும்.

03 : நீங்கள் நேசிக்கும் நபர் ஏற்கனவே உங்களுக்கு பழக்கமான நபராக இருந்தால் நீங்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை ஆல்பம் போல் மாற்றுங்கள்.

கடைசி பக்கத்தில் உங்கள் இருவரின் படங்களை மட்டும் தனித்தனியே ஒட்டவைத்து இனி வாழ்க்கை முழுவதும் இருவர் ஒருவராகி சேர்ந்து வாழ்வோமா என்பது போல ஒரு குறிப்பு எழுதி சர்ப்ரைஸ் பண்ணுங்க.

04 : நீங்கள் நேசிக்கும் பெண்ணை பற்றியோ அல்லது அவர்களுடன் சேர்ந்தால் உங்கள் எதிர்காலம் எப்படி அழகாக மாறும் என்பது பற்றியும் கவிதையாக எழுதிக் கொடுத்து புரபோஸ் செய்யலாம். ஏனென்றால் பெண்களுக்கு கவிதை எழுதும் ஆண்களை மிகவும் பிடிக்கும்.

ரசனையோடு காதலை சொல்வது எவ்வளவு முக்கியமானதோ அதைவிட உண்மையாகவும் நேர்மையாகவும் சொல்லுங்கள்.

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருவது ஏன்?