தினத்தந்தி
தேவையான பொருட்கள்: பிரட் – 4 துண்டுகள், நெய் – 6 தேக்கரண்டி, தண்ணீர் – 1 கப், சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய் தூள் – ¾ தேக்கரண்டி, ரோஸ் எசென்ஸ் – ½ தேக்கரண்டி, பேரீச்சம்பழம் – 4 (விதை நீக்கி நறுக்கியது), பால் – 2 கப் (காய்ச்சி ஆறவைத்தது), முந்திரி – 10 (வறுத்தது), திராட்சை – 8 (வறுத்தது).
செய்முறை: பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி, பிரட் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை போட்டு கரைக்கவும்.
சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய் தூள் மற்றும் ரோஸ் எசென்ஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.
பாகு சிறிது கெட்டியானதும் பேரீச்சம்பழம் சேர்த்து 2–3 நிமிடம் கொதிக்கவிடவும்.
பின்னர் வறுத்த பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதில் பால் சேர்த்து, மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.
இறுதியாக நெய், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி, கெட்டியாகும் வரை சமைத்து இறக்கி பரிமாறவும்!