தினத்தந்தி
'தி.மு.க. பெண்களுக்கு எதிரான கட்சி. தற்போது குடிப்பழக்கம் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
பெண்களை பற்றி தமிழக அரசுக்கு கவலை இல்லை. முதல்-அமைச்சர் சாராயத்தில் வருமானம் வந்தால் போதும், அரசாங்கத்தை நடத்தி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இளைய தலைமுறையை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு போதை பொருட்கள் கிராமங்களில் கூட விற்பனையாகிறது. காசு கொடுத்தால் பெண்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என திராவிட முன் னேற்ற கழகம் நினைத்துக் கொண்டிருக்கிறது.
என் குடும்பத்தை பிரித்து இந்த நிலைக்கு கொண்டு வந்தது தி.மு.க. கட்சி தான். இனி நாம் சாதி வாரி கணக்கெடுப்பு என கூற வேண்டாம்.
சமூகநீதி கணக்கெடுப்பு என கூறுவோம். சாதி என கூறினால் ஏதோ தப்பாக எடுத்து விடுகிறார்கள். இது ஏதோ சாதி பிரச்சினை கிடையாது.
தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் பெண்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.
இதை நடத்த மாட்டேன் என பிடிவாதமாக தமிழ்நாட்டு மக்களுக்கும், பெண்களுக்கும் துரோகம் செய்யக்கூடிய முதல்-அமைச்சரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'