“விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளை அருவருக்கிறேன்” – சீமான் கடும் விமர்சனம்

தினத்தந்தி

நடிகர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை தாம் அருவருக்கிறேன், வெறுக்கிறேன் என்று சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளை நிறைவேற்ற தேவையான நிதி எங்கே உள்ளது என்றும், ஏற்கனவே கடன் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து இலவச திட்டங்களை அறிவித்தால் நாடு அடமானத்திற்கு செல்லும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறினார்.

மேலும், “நான் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பேன்” என்று விஜய் சொல்ல மறுக்கிறார் என்றும், அவருக்கு தனியான தத்துவம் அல்லது கோட்பாடு எதுவும் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

அதேபோல், அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம் அரை பவுன் வழங்கியதாகவும், தற்போது ஒரு பவுன் வழங்குவதாக கூறப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், ஸ்டாலின் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கியதாகவும், எடப்பாடி பழனிசாமி ரூ.2,000 வழங்குவதாக கூறியதாகவும், தற்போது ரூ.2,500 வழங்குவதாக அறிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு தொகையை அதிகரித்து கூறுவது ஒரு திரைப்படத்தில் வரும் ஏலக்காட்சியைப் போல இருப்பதாகவும், இறுதியில் அது தோல்வியாக மாறும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

தென்னக கயிலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை!