தினத்தந்தி
தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது பங்கேற்கவோ கூடாது.
தேர்தல் விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற எந்த ஊடகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.
பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு அல்லது பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது.
தொகுதியிற்கு வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாதோர் அனைவரும் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
கல்யாண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என்பது கண்காணிக்கப்படும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணி முதல் செயலிழந்ததாகிவிடும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கும் வாகனங்களை வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ வேட்பாளர் அல்லது அவரது முகவர்களுக்கு அனுமதி இல்லை.
இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியின் தேர்தல் அலுவலகம், வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம்; தேவையற்ற கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது.