தினத்தந்தி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நடிகர் சரத்குமார் பா.ஜனதாவில் இணைந்தார்.
அந்த நேரத்தில் தான் நடத்தி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியையும் கலைத்தார்.
தொடர்ந்து பா.ஜனதாவுக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் கண்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்.
இதற்கிடையில், பா.ஜனதாவில் இணைந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சரத்குமாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் சரத்குமார் தனது ஆதரவாளர்களில் சிலருக்கு போட்டியிட பா.ஜனதா தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார்.
ஆனால் அதற்கு பா.ஜனதா தலைமையிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பா.ஜனதா சரத்குமாரை புறக்கணிக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். மேலும், பா.ஜனதாவில் இருந்து விலக வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.