விஜயின் அரசியல் கனவு சாத்தியமா? தமிழிசை பதில்

தினத்தந்தி

தமிழகத்தில் “தமிழ்” என்ற சொல்லை மெல்ல மெல்ல மறைத்து, “திராவிடம்” என்ற சொல்லை திணிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இது தமிழுக்கு தி.மு.க. ஏற்படுத்தும் மிகப்பெரிய அநீதியாகும். தமிழக அரசியல் இன்று திசைமாறி வருகிறது.

வாழ்த்துச் செய்திகளில்கூட மொழி வேற்றுமையை விதைத்து, தமிழர்களின் அடையாளத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிதைக்கிறார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தும், யுகாதி திருநாள் வாழ்த்துகளில் கூட பிரிவினையை தூண்டும் வகையில் செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியது.

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத தி.மு.க. ஆட்சியைப் பற்றி வைகோ, திருமாவளவன் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் மௌனம் காக்கின்றன?

20-ந்தேதி (இன்று) எங்களது தேர்தல் அறிக்கையை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

த.வெ.க. தற்போது குழப்பத்தில் உள்ளது. தமிழகத்தில் தனித்து நின்று யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதே எதார்த்தம். அந்த வகையில், விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது.

கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோல் விஜய்யும் கனவு காண்கிறார்.

பெரம்பூர் தொகுதி விஜய்க்கு கை கொடுக்குமா?