மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற முடிவு - சசிகலா

தினத்தந்தி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் வந்தவர்கள் யார் என்பதை அனைவராலும் எளிதில் கண்டறிய முடியும்.

தி.மு.க.வை யார் உறுதியோடு எதிர்க்கிறார்களோ, தொண்டர்களை யார் அரவணைத்து செல்கிறார்களோ, எம்.ஜி.ஆரின் கொள்கைகளை யார் காப்பாற்றுகிறார்களோ, அவர்கள்தான் நம் இருபெரும் தலைவர்கள் வழியில் வந்தவர்கள்.

இதற்காகத்தான் நாம் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறோம். நாம் அவர்களின் வழியில் சரியாக பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

எத்தகைய சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நம் தொண்டர்களின் ஆதரவோடு தமிழக மக்களின் நலன் காப்போம்.

'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மனதில் வைத்து நாம் அனைவரும் களப்பணியாற்றுவோம்.

தமிழக மக்களின் பேராதரவுடன் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுத்து வெற்றிவாகை சூடுவோம்.

தமிழகத்தில் இருந்து தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு எடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைப்போம்.

‘தி.மு.க., பெண்களுக்கு எதிரான கட்சி !