தினத்தந்தி
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் புதிதாக 30,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பெண்கள் இலவசமாக பஸ்சில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
அரசு வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் எந்த நோயாக இருந்தாலும் சிகிச்சைக்காக அரசு உதவி வழங்கும்.
கவர்னர் ஆட்சி செய்வதை நாங்கள் ஏற்கவில்லை. புதுச்சேரியை மண்ணின் மைந்தர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு.
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. அதனை விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
எனவே, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.