விடுதலை சிறுத்தைகள் முடிவு மாற்றம் – ஒரே தொகுதியில் போட்டி!

தினத்தந்தி

புதுச்சேரியில் தி.மு.க.-காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் 4 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.

அதன்பின்னர் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் உழவர்கரை தொகுதியில் மட்டும் கூட்டணியில் போட்டியிடுகிறது. மற்ற 3 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பதை நிறுத்தியுள்ளோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. காட்டுமன்னார்கோவிலில் நான் போட்டியிடுவதாக இருந்தது. சட்டசபையில் இருந்தால் விளிம்பு நிலை மக்களுக்கு அதிகமாக சேவை செய்ய முடியும் என்று நினைத்தேன்.

மேலும் பல்வேறு வதந்திகள் பரவின. கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே, காட்டுமன்னார்கோவிலில் சமூக நீதிக்காக பாடுபட்ட இளையபெருமாளின் மகன் ஜோதிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, தமிழக பொறுப்பு கவர்னர் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மதவாத அரசியலுக்கு இடமில்லை.

“கூட்டணி வெற்றிக்காக முழு தமிழ்நாட்டிலும் பிரசாரம்”- அண்ணாமலை