"ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வலுவாகும்” - டி.கே. சிவக்குமார் பேச்சு!

தினத்தந்தி

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., தமிழ்நாட்டின் உரிமைக்காக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எந்த குரலும் கொடுக்கவில்லை.

ஆனால் மாநில உரிமைக்காக தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டுமே குரல் கொடுத்து வருகின்றன.

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்தார்.

அந்த அடித்தளத்தின் மீது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வளர்ச்சி என்னும் பிரமாண்ட கட்டிடத்தை கட்டியெழுப்பியுள்ளார்.

இன்று இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை யாரால் சரி செய்ய முடியும்? அனுபவமற்றவர்களால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய தலைவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார். அவரது தலைமையில் தமிழ்நாடு மேலும் வலிமையான மாநிலமாக மாறும்.

நாடாளுமன்ற கூட்டம் நிறைவடைந்ததும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே தமிழ்நாட்டிற்கு பிரசாரத்திற்காக வருவார்கள்.

இன்று பல புதிய கட்சிகள் அரசியல் களத்துக்கு வந்துள்ளன. அரசியல் களத் துக்கு வருவது என்றால் அனுபவம் தேவை. ஒரே நாளில், திரைப்படத்தில் எடுக்கப்படுவதை போல அரசின் முடிவுகளை எடுத்துவிட முடியாது.

விஜய்..தி.மு.க. எதிர்ப்பு பெயரில் வேறு அரசியல்? திருமாவளவன் விளக்கம்”