விஜய்..தி.மு.க. எதிர்ப்பு பெயரில் வேறு அரசியல்? திருமாவளவன் விளக்கம்”

தினத்தந்தி

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை; அது பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த மாநில தலைமைச் செயலாளரையும் தேர்தல் ஆணையம் மாற்றியதில்லை; இது அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும்.

மத்திய அரசு தேசிய அளவில் மது விலக்கு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான கொள்கைகளை வகுத்து, அதற்கான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே போட்டி நிலவுகிறது. பா.ஜனதா–அ.தி.மு.க. கூட்டணி மேற்கொள்ளும் மக்கள் விரோத அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம்.

ஆனால், விஜய் தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுக்கு சாதகமாக செயல்படுகிறார். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது அவரது சொந்த நிலைப்பாடாகும்.

தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, அதன் இடத்தில் யாரை அமர்த்தப் பார்க்கிறார்? அவர் தானே அந்த இடத்தில் அமர விரும்பினால், இந்த தேர்தலில் அது சாத்தியமா என்பது அவருக்கே தெரியும்.

தி.மு.க. ஆட்சியை அகற்றிய பிறகு தனது தலைமையில் ஆட்சி அமைக்க முடியாது என்பதையும், பா.ஜனதா–அ.தி.மு.க. கைகள்தான் வலுப்பெறும் என்பதையும் தெரிந்தும், அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

எனவே, அவரது தேர்தல் வியூகம் அ.தி.மு.க.–பா.ஜனதாவுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதனால், நண்பர் விஜயின் அரசியலை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம்.

தி.மு.க.வை அகற்றிவிட்டு பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதே தனது நோக்கம் என விஜய் மறைமுகமாக கூறுகிறார்.

ஊழல், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி -அண்ணாமலை விமர்சனம்!