அ.தி.மு.க. ஆட்சி மலருவது உறுதி!

தினத்தந்தி

மீண்டும் அ.தி.மு.க. வந்ததும், அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுத்தப்படும். ருசியான உணவு அம்மா உணவகத்தில் வழங்கப்படும்.

அ.தி.மு.க. ஆட்சி மலருவது உறுதி. முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம் இருக்கும். தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

மின் கட்டணம், வீட்டுவரி, வணிகவரி, குடிநீர் வரி உயர்த்திவிட்டார்கள். அது அ.தி.மு.க. ஆட்சியில் குறைக்கப்படும்.

இந்த ஆட்சியில் சிறுமி, பெண்கள், பாட்டிக்கும் பாதுகாப்பு இல்லை. போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 6,999. 18 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எங்கே பார்த்தாலும் கஞ்சா விற்பனை. கஞ்சாவால்தான் கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகள். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், 3 மாதங்களில் சென்னை மாநகரம் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்.

சட்டத்தின் ஆட்சி நடைபெறும். நம் அனைவரையும் கடன்காரனாக்கியதுதான் இந்த தி.மு.க.வின் ஆட்சி. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முக்கியமான தேர்தல். குடும்ப கட்சிக்கும், வாரிசு அரசிய லுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல். நல்ல ஆட்சி மக்களுக்கு வழங்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.

‘நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை’ - சீமான்