விஜய் கட்சியுடன் கூட்டணி பேசவில்லை -அமித்ஷா

தினத்தந்தி

தமிழ்நாட்டில் எங்களுக்கு வேலை குறைவு. அ.தி.மு.க. எங்களுக்கு முதன்மை கூட்டாளி.

அதனுடன் சிறு, சிறு கட்சிகளை சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.

அங்கு அ.தி.மு.க. எங்களுக்கு பெரிய அண்ணன். தி.மு.க. மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

அரசுக்கு எதிரான அலை அங்கு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நிச்சயமாக தேசிய ஜன நாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதுவும் வலுவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.

விஜய் கட்சியுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. நாங்கள் அதை முயற் சிக்கவில்லை.

அத்தகைய நடவடிக்கை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவர் எங்களுடன் வந்தால், எங்கள் வாக்கு வங்கியில் அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும் என்று நான் உணர்கிறேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்களும், அ.தி.மு.க.வும் தனித்தனியாக போட்டியிட் டோம். ஆனால் இப்போது அப்படியில்லை. ஒன்றாக இணைந்து போட்டியிடுகிறோம். இதனால் நாங்கள் வெற்றி பெறுவோம்"

மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம்.. ராமதாஸ் அறிக்கை வெளியீடு!