மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம்.. ராமதாஸ் அறிக்கை வெளியீடு!

தினத்தந்தி

குடும்ப சூழ்நிலையால் இடைநிற்றலை தடுக்க 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும்.

உயர்கல்வியான மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் போன்ற படிப்புகளை வங்கியில் கடன் பெற்று பயின்றவர்களின் கடன் தொகையை அரசே செலுத்தும்.

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்வதோடு, நுகர்வோருக்கு அடக்க விலையில் உணவு பொருள் கிடைக்க செய்து இடைத்தரகர்களின் இடையூறுகள் கட்டுப்படுத்தப்படும்.

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு சொட்டு மது இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவது பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியம், 38 மாவட்டங்களிலும் ஐ.டி. தொழில் நிறுவனம் உருவாக்கப்படும்.

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை ஒழிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசு நிறுவனங்களில் இடஒதுக்கீடு, தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக நலிவுற்ற நிலையில் வாழும் வன்னியர்களுக்கு உரிய தனி இடஒதுக் கீடு, அனைத்து சாதி மக்களுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும்- திருமாவளவன்