விஜய் ஏன் இரட்டைத் தொகுதியில் போட்டி?

தினத்தந்தி

விஜய், தனது முதல் தேர்தலிலேயே இரண்டு தொகுதிகளில் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதை 'தோல்வி பயம்' என்று விமர்சித்தாலும், த.வெ.க.வினர் அதனை ஒரு ராஜதந்திரம் என்று கூறுகின்றனர்.

அதாவது 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி முதல் முறையாக குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

அவர் வதோதராவில் தோல்வி அடைந்துவிடுவார் என்ற காரணத்திற்காக வாரணாசியில் போட்டியிடவில்லை. மாறாக இது மேற்கு மற்றும் வட இந்தியாவில் பா.ஜனதாவை வலுவாக வெற்றி பெற செய்வதற்கான வியூகம்.

அதேபோல இந்திரா காந்தியும், ராகுல் காந்தியும் வடமாநிலங்களிலும், தென்னிந்தியாவிலும் ஒரே நேரத்தில் போட்டியிடுவதன் மூலம், நாட்டின் இருப்பக்கமும் தங்களது கட் சியின் வெற்றியை பரவலாக்க முயற்சித்தனர்.

அதே பாணியில்தான் விஜய் களமிறங்கி இருக்கிறார். அவர் மட்டுமின்றி, அவரது த.வெ.க. கட்சியும் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி உறுதி.

இருந்தாலும் மற்ற த.வெ.க. வேட்பாளர்களை பரவ லாக வெற்றி பெற செய்வதற்காக தான் மாநிலத்தின் மையமான திருச்சி கிழக்கில் களம் இறங்கி இருக்கிறார்.

விஜய் இரண்டு முனைகளில் களம் காண்பது அந்தந்த மண்டலங்களில் உள்ள த.வெ.க தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தரும்.

இது அந்த மாவட்டங்களைச் சுற்றியுள்ள மற்ற தொகுதிகளிலும் கட்சியின் வெற்றியை பதிவு செய்ய உதவும். எனவே இது ஒரு திட்டமிட்ட "தேர்தல் மேலாண்மை" ஆகும்

விஜய் கட்சியுடன் கூட்டணி பேசவில்லை -அமித்ஷா