சிறப்புக் கட்டுரை

முதல்-அமைச்சர் விஜய் அணிந்து வந்த பெல்ட்டின் விலை என்ன தெரியுமா?
சென்னை,

சென்னையில் ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் விஜய் சென்றபோது, அவர் அணிந்திருந்த பெல்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் விலையும் பேசு பொருளாகியுள்ளது.

வெள்ளை நிற வேட்டி-சட்டை

தமிழக அரசியல்வாதிகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் வேட்டி-சட்டை அணிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். முதல்-அமைச்சர்களாக இருந்த காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அத்தனை பேரின் அடையாளமும் இதுதான்.

ஆனால், தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், அதில் இருந்து சற்று மாறுபட்டு கோட் சூட் அணிந்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி-சட்டையில் வருகிறார்.

ஆடை குறித்த ஆராய்ச்சி

அதுவும் திரைத்துறையில் இருந்து அவர் வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு நாளும் அவர் அணியும்  ஆடை பேசுபொருளாகிறது. இதனால், முதல்-அமைச்சர் விஜய் அணிந்து வரும் ஆடை குறித்து, அவருடைய ரசிகர்களும், நெட்டிசன்களும் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய், சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியிலும், சேத்துப்பட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திலும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பெல்ட்டின் விலை என்ன தெரியுமா?

அந்த வகையில், சேத்துப்பட்டுக்கு அவர் கள ஆய்வுக்கு வந்தபோது, நீல நிற சட்டையை  ‘டக்கிங்’ செய்து அணிந்திருந்தார். அந்த ஆடையைவிட, அவர் அணிந்திருந்த வித்தியாசமான பெல்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முதல்-அமைச்சர் விஜய் அணிந்திருந்த பெல்ட், பிரபல நிறுவனமான லூயிஸ் விட்டான் தயாரிப்பாகும். இந்த பெல்ட்டின் விலை குறித்து ரசிகர் ஒருவர் ‘க்ரோக்’ செயலியிடம் கேட்டபோது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 ஆயிரம் இருக்கும் என்று பதில் அளித்தது.

வழக்கமாக இந்த நிறுவனத்தின் பெல்டுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஆக்கி உலகக் கோப்பை 2026: சவால்களை கடந்து கம்பீரமாக நுழைந்த இந்தியா - ஒரு பார்வை
சென்னை,

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள 2026 மகளிர் ஆக்கி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் அணியின் கம்பீர பயணத்தை தற்போது பார்ப்போம்.

நூலிழையில் தவறியது

2025 மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட இந்திய அணி, அதன் பின் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் மூலம் உலகக் கோப்பை வாய்ப்பை உறுதி செய்தது.

சவால்களை கடந்து சாதனை

1. ஆசியக் கோப்பை 2025 - சவாலும் திருப்பமும்

2025 ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி, போட்டியை நடத்திய சீனாவிற்கு எதிராக தோல்வியடைந்து நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது. இந்த தோல்வி ஒரு பின்னடைவாக இருந்தாலும், அதை ஒரு திருப்புமுனையாக எடுத்துக்கொண்ட இந்திய அணி, அடுத்த வாய்ப்பை நோக்கி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.

2. ஐதராபாத் தகுதி சுற்று (மார்ச் 2026):

ஐதராபாத்தில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அரையிறுதியில் இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பை வாய்ப்பை உறுதி செய்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றாலும், இத்தொடரின் சிறப்பான ஆட்டம் உலகக் கோப்பைக்கான இடத்தை உறுதி செய்தது.

3.நேஷன்ஸ் கோப்பை சாம்பியன்

அதைத்தொடர்ந்து  நியூசிலாந்தில் நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பை தொடரில், தோல்வியே அடையாமல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

லீக் சுற்று:

அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 0-2 என பின்தங்கியிருந்த இந்தியா, அற்புதமாக கம்பேக் கொடுத்து 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் உருகுவே அணிகளை வீழ்த்தி பிரிவில் முதலிடம் பிடித்தது.

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி:

அரையிறுதியில் சிலியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில், போட்டியை நடத்திய நியூசிலாந்தை 2-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இது உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

உலகக் கோப்பை

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து இணைந்து நடத்தும் இந்த வரலாற்று சிறப்புமிக்க உலகக்கோப்பைத் தொடர், ஆகஸ்ட் மாதம் 15 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. ' டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, லீக் சுற்றில் சீனா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. லீக் சுற்றின் அனைத்து போட்டிகளும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீனில் உள்ள வேகனர் ஆக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணியின் லீக் சுற்றுப் போட்டிகள்:

ஆகஸ்ட் 16: சீனாவுக்கு எதிராக

ஆகஸ்ட் 18: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக

ஆகஸ்ட் 20: இங்கிலாந்துக்கு எதிராக

'பைலட்' ஆகி விமானத்தில் பறப்போமா..! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
புதுடெல்லி,

வானத்தில் பறக்கும் விமானத்தை தரையில் இருந்து அண்ணாந்து பார்ப்பதைவிட, பறக்கும் விமானத்தில் இருந்துகொண்டு கழுகுப்பார்வையில் தரையை பார்த்து ரசிப்பதில் எவ்வளவு ஆனந்தம்.

இன்றைக்கு நிறைய பேர் விமானத்தில் பறக்கிறார்கள். அதனால்தான், இந்தியாவில் விமான போக்குவரத்து துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது.

புதிய வேலைவாய்ப்புகள்

பல விமான நிறுவனங்கள், தங்களது விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. இது விமானியாக விரும்பும் நபர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை புதிதாக உருவாக்குகின்றன.

ஆனால், விமானியாக விரும்பும் பலர், அதற்கான படிப்பு மற்றும் பயிற்சியை மேற்கொள்ளும் முன்பே, அவ்வாறு படித்தால் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

பிளஸ்-2-ல் என்ன படிக்க வேண்டும்?

ஒரு விமானியின் சம்பளமானது, அவருடைய அனுபவம், பணிபுரியும் விமான நிறுவனம், வகிக்கும் பதவி மற்றும் விமானச் செயல்பாட்டின் வகை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது.

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாக, விமானியாக பயிற்சி பெறுவது எப்படி? என்பதை பார்ப்போம். இதற்கு பிளஸ்-2-ல் இயற்பியல் மற்றும் கணிதத்துடன் கூடிய பாடத்தை படித்திருக்க வேண்டும்.

விமான பயிற்சி பள்ளி

சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டும். தேவையான சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட விமானப் பயிற்சிப் பள்ளியில் விமானப் பயிற்சியை முடிக்க வேண்டும்.

வர்த்தக விமானி உரிமம் பெற்ற பிறகு, விமானியாக விரும்பும் நபர்கள் விமான நிறுவன ஆட்சேர்ப்பு, விமான நிறுவன கேடட் திட்டங்கள், வாடகை நிறுவனங்கள், சரக்கு விமான நிறுவனங்கள் அல்லது பெருநிறுவன விமானப் போக்குவரத்து அமைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு விமானியும் மூத்த விமானியாக முன்னேறுவதற்கு முன்பு, விமானத்தை இயக்கும் அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ThePilot.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் இது தொடர்பான முழு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு?

இந்தியாவில் விமானிகளின் சம்பளம், விமான நிறுவனம் அல்லது விமானப் போக்குவரத்து அமைப்பில் வகிக்கும் பதவியைப் பொறுத்து அமைகிறது. ஒவ்வொரு விமானியும் ஆரம்ப நிலையில் குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெற்றாலும், அனுபவம் வளர.. வளர.. சம்பளமும் கணிசமாக அதிகரிக்கிறது.

ஒரு ஜூனியர் விமானியாக விமான நிறுவனம் மூலம் அறிமுகமாகும்போது, பொதுவாக மாதத்திற்கு சுமார் ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற்றவுடன், சம்பளம் பொதுவாக மாதத்திற்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை அதிகரிக்கிறது. மூத்த விமானியாக முதல் இடத்திற்கு முன்னேறும்போது மாதத்திற்கு சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.

கேப்டன்களுக்கு அதிக சம்பளம்

அதே நேரத்தில், கேப்டன்கள் மற்றும் பயிற்சி கேப்டன்களே அதிக சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் இயக்கும் விமான நிறுவனம் மற்றும் விமானத்தைப் பொறுத்து, ஆண்டுக்கு ரூ.90 லட்சம் முதல் ரூ.1.2 கோடி வரை சம்பளம் கிடைக்கிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்
உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயத்தை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். அவற்றில் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது மிகச் சிறந்த ஒன்றாகும். உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மனநலம் சார்ந்த பிற வாழ்க்கை முறை மாற்றங்களும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில், இதய ஆரோக்கியத்திற்கான உணவுமுறை மாற்றங்களை பார்ப்போம்.

அதிகப்படியான கொழுப்பைக் கட்டுப்படுத்துங்கள்

தொப்பையில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற ரத்தக் கொழுப்பு அளவுகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி இதழில் வெளியான ஒரு ஆய்வு சொல்கிறது. இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு சேர்ந்தால், வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. குறைவான கலோரிகளை உட்கொள்வதும், உணவு அளவுகளைக் கவனமாகக் கவனித்து உண்பதும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

உணவில் நார்ச்சத்து அவசியம்

கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவானது, குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது "கெட்ட கொழுப்பின்" அளவைக் குறைக்க உதவும். பீன்ஸ், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள்கள், பேரிக்காய்கள் மற்றும் அவகேடோ ஆகியவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து நிறைந்த கீரை மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

காலை உணவுக்கு நேரம் ஒதுக்குங்கள்

ஒரு நாளின் முதல் உணவு மிகவும் முக்கியமானது என்பதால் காலை உணவுக்கு நேரம் ஒதுக்குவது முக்கியம். தினமும் சத்தான காலை உணவை உண்பது, ஆரோக்கியமான உணவு மற்றும் எடையைப் பராமரிக்க உதவும். ஓட்ஸ், முழு தானியங்கள் அல்லது முழு கோதுமை டோஸ்ட் போன்ற முழு தானியங்கள், சிறிதளவு நட்ஸ், அல்லது வேர்க்கடலை வெண்ணெய் போன்ற கொழுப்பற்ற புரதங்கள் உள்ள உணவுகளை சாப்பிடலாம்.

மீன் சாப்பிடுங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்வது இதய நோயைத் தடுக்கவும் உதவும். சால்மன், சூரை, மத்தி மற்றும் ஹெர்ரிங் போன்ற பல மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அசைவ பிரியர்கள் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது மீன் சாப்பிடுவது நல்லது.

நட்ஸ் வகைகள்

பாதாம், வால்நட், பெக்கான் மற்றும் பிற மரங்களில் விளையும் நட்ஸ் வகைகளில் இதய ஆரோக்கியத்திற்கு உகந்த கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்க உதவும். அதே சமயம், இவற்றைச் சிறிய அளவிலேயே உட்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட்  அசோசியேசன் அறிவுறுத்துகிறது. நட்ஸ் வகைகளில் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அவற்றில் கலோரிகளும் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உப்பின் அளவை குறையுங்கள்

உப்பின் அளவை குறைப்ப இதயத்திற்கு நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவு குறிப்பாக அதிகமாக இருக்கும். எனவே, துரித உணவை அதிகம் உட்கொள்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் வேண்டாம்

நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.  அதற்குப் பதிலாக, அவகேடோ (வெண்ணெய் பழம்), ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை போன்ற ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தேநீர் அருந்தலாம்

அமெரிக்க இதயச் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, தினமும் ஒன்று முதல் மூன்று கோப்பைகள் வரை தேநீர் அருந்துவது இதயப் பிரச்சனைகளுக்கான அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும். உதாரணமாக, இது நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு ஏற்படும் விகிதங்களைக் குறைப்பதற்கு உதவுகிறது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சுவையானது மட்டுமல்ல, இதில் இதய ஆரோக்கியத்திற்கு உகந்த 'பிளாவனாய்டுகள்' (flavonoids) எனும் சத்துக்களும் உள்ளன. இந்தச் சத்துக்கள், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன என்று 'நியூட்ரியண்ட்ஸ்' (Nutrients) எனும் ஆய்விதழில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே, அளவோடு சாப்பிடும்போது, ​​டார்க் சாக்லேட் உடலுக்கு நன்மை பயக்கும். அதிக இனிப்புள்ள மில்க் சாக்லேட் இதற்குப் பொருந்தாது.

சண்டே ஸ்பெஷல்: தித்திப்பான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-

பால் - ½ லிட்டர் (தண்ணீர் சேர்க்காதது)

சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்

இளநீர் - 2 (உள்ளே தேங்காய் இலகுவாக இருக்க வேண்டும்)

இளநீரில் உள்ள தண்ணீர் - ½ கப்

தேங்காய் - 1

ஏலக்காய் - 5

நெய் - 1 டீஸ்பூன்

முந்திரி பருப்பு - 10

செய்முறை:-

இளநீர் பாயாசத்திற்கு 4 பிரிவுகளாக தயார் செய்து, அதை ஒன்றாக சேர்க்கப் போகிறோம்.

முதலில் கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, பாலை ஒரு பாத்திரத்தில் வைத்து மிதமான சூட்டில் 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து வற்றவிடவும். பால் அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும். ½ லிட்டர் பால் பாதியாக குறைந்து ¼ லிட்டராக மாறும். அதன்பின்னர், அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிவிடவும். சர்க்கரை கரைந்ததும், அடுப்பை 'ஆப்' செய்து ஆறவிடவும்.

இளநீர் தேங்காய்

அடுத்து, இலகுவாக உள்ள 2 இளநீர் தேங்காயை எடுத்துக்கொள்ளவும். அதில் உள்ள தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு இளநீரில் இருபுறமும் உள்ள தேங்காயை மிக்சி ஜாரில் எடுத்துக்கொண்டு, அத்துடன் ¼ கப், இளநீரில் உள்ள தண்ணீரை ஊற்றி பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இன்னொரு இளநீரில் உள்ள தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.

தேங்காய் பால்

அடுத்து, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சி ஜாரில் போட்டு, ¼ கப் இளநீர் தண்ணீர் விட்டு, அத்துடன் ஏலக்காயையும் போட்டு நன்கு அரைத்து கெட்டியான தேங்காய் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து, கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, நெய்யை ஊற்றி உருகவிடவும். அதில், முந்திரி பருப்பை உடைத்து போட்டு,  பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு, அடுப்பை 'ஆப்' செய்து கொள்ளவும்.

வறுத்த முந்திரி

இதுவரை 4 பிரிவாக தயார் செய்து வைத்த பொருட்களை சேர்த்தால் இளநீர் பாயாசம் ரெடி. முதலில், வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த இளநீர் பேஸ்டை சேர்க்கவும். அத்துடன், சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்த இளநீர் துண்டுகளை சேர்க்கவும்.

தொடர்ந்து, காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்க்கவும். அடுத்து, கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். கடைசியாக வறுத்துவைத்த முந்திரி பருப்பை சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டால் தித்திப்பான இளநீர் பாயாசம் ரெடி. இதை அப்படியே  சாப்பிடலாம். அப்பது பிரிட்ஜில் வைத்தும் குளிர்ச்சியாக சாப்பிடலாம்.

அதிரும் ஆந்திரா அரசியல்களம்.. என்ட்ரி கொடுக்கும் ஜூனியர் என்.டி.ஆர்? நடிகர் விஜய்யின் வெற்றி காரணமா..?
தெலுங்கானா,

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பெயரில், ‘ரா என்.டி.ஆர்(RAW NTR)’ என்ற குழு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ‘ஊரு வாடா’ எனும் தலைப்பில் பிரம்மாண்ட பிரச்சாரத் தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தது. மேலும் அதை தீவிரமாகவும் விளம்பரம் செய்யத் தொடங்கியது. இதனால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் அவர் தனது அரசியல் வருகையை அறிவிக்கவுள்ளதாக உற்சாகமாகினர்.

என்.டி.ராமராவ்

இதற்கு முன்பு ஜூனியர் என்.டி.ஆரின் அரசியல் வருகை குறித்தான பேச்சுகள் பல முறை எழுந்துள்ளது. அதற்கு காரணம் அவர் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்பதால். இவர் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியவரும், முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரியுமான புகழ்பெற்ற நடிகர் என்.டி.ராமராவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு நாயுடு

இவரது தந்தை நந்தமுரி ஹரிகிருஷ்ணாவும் தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். அதேவேளையில், அவரது மாமாவும் நடிகருமான பாலகிருஷ்ணா, மூன்று முறை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இது போக தற்போதைய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அவருக்கு தாய்மாமா ஆவார்.

மக்களவைத் தேர்தல்

2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களின்போது தெலுங்கு தேசம் கட்சிக்காக ஜூனியர் என்.டி.ஆர் பிரசாரம் செய்திருந்தார். ஆனால் அதன் பிறகு பெரிதாக அரசியலில் அவர் ஈடுபடவில்லை. முழு மூச்சாக திரைத்துறையிலே கவனம் செலுத்தி வருகிறார்.

பவன் கல்யாண்

இதனிடையே தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். சந்தித்த முதல் தேர்தலிலேயே, தி.மு.க., -அ.தி.மு.க., போன்ற திராவிட கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு அவர் முதல்-அமைச்சராகி இருப்பது, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

குறிப்பாக, அண்டை மாநிலமான ஆந்திராவில், ஆளும் தெலுங்கு தேசம் - பா.ஜ.க, கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், தொண்டர்கள் மத்தியில் விஜய்யின் வெற்றி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் போலவே, பவன் கல்யாணும் மக்களின் அமோக ஆதரவு பெற்று, அடுத்த முறை முதல்-அமைச்சராக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக, பா.ஜ.க, துணையுடன், தெலுங்கு பேசும் மற்றொரு மாநிலமான தெலுங்கானா அரசியலிலும் பவன் கல்யாண் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார். இதனால், இரு மாநில அரசியல் களத்திலும் அனல் பறக்கிறது.

சமூகப் பணி

இந்த சூழலில், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராம ராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர்., ஆந்திர அரசியலில் களம் இறங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஓரிரு வாரங்களுக்குள் தன்னார்வ தொண்டு அமைப்பை ஜூனியர் என்.டி.ஆர். ஆரம்பிக்கவுள்ளார். இதன் மூலம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சமூகப் பணிகளில் ஈடுபட உள்ளார்.

விஜய்யின் நகர்வுகள்

திரைப்படங்கள் வாயிலாக அதிக ரசிகர்களை ஈர்த்துள்ள ஜூனியர் என்.டி.ஆர்., தமிழகத்தில் த.வெ.க., கட்சி தொடங்கி, தேர்தலை சந்தித்து, ஆட்சியை பிடித்தது வரை, முதல்-அமைச்சர் விஜய்யின் அனைத்து நகர்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

அதன் ஒரு கட்டமாக தொண்டு நிறுவனம் தொடங்கி, பின்னாளில் அதை அரசியல் கட்சியாக மாற்றி, தமிழக முதல்-அமைச்சர் விஜய் போலவே அரசியலில் வலுவாக கால் பதிக்கவும், அவர் காய்களை நகர்த்தி வருவதாக பேசப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆர்., அரசியலில் நுழைய உள்ளதாக வெளியாகும் தகவல்கள், ஆந்திராவில் உள்ள முக்கியமான அரசியல் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.

நீராவி, டீசல், மின்சார ரெயில்கள் வரிசையில் அதிநவீன ஹைட்ரஜன் ரெயில்: இயங்குவது எப்படி தெரியுமா?
அரியானா,

நீராவி, டீசல், மின்சார ரெயில்கள் வரிசையில் இப்போது அதிநவீன ஹைட்ரஜன் ரெயில் இந்தியாவில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. இந்த ரெயில் எவ்வாறு இயங்குகிறது? என்பதை பார்க்கப்போகிறோம்.

ஹைட்ரஜன் ரெயில்

ஆரம்ப கால ரெயில்கள் நீராவி என்ஜின் கொண்டே இயக்கப்பட்டன. பிறகு ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியில் நீராவி என்ஜின், டீசல் என்ஜினாக மாறியது. தற்போது, டீசல் என்ஜின்களும் மறையத் தொடங்கி, மின்சார என்ஜின்களாக மாறிவருகின்றன.

இதற்கிடையே, அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ஹைட்ரஜன் ரெயில், இந்தியாவில் முதல் முறையாக, அரியானா மாநிலத்தில் ஜிந்த் நகர் மற்றும் சோனிபட் இடையே (89 கி.மீ.) நேற்று தனது முதல் பயணத்தை தொடங்கியது.

சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டது

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் இயக்கத்தை பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முழுக்க.. முழுக்க.. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.

10 பெட்டிகள் கொண்ட இந்த ஹைட்ரஜன் ரெயிலில் 682 இருக்கைகள் இருக்கின்றன. என்றாலும், 2,600 பேர் வரை பயணிக்க முடியும். உலகின் நீளமான ஹைட்ரஜன் ரெயில் இதுதான். மணிக்கு 75 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 250 முதல் 350 கி.மீ. வரை இயங்கும்.

ஜெர்மனியில் ஓடிய முதல் ரெயில்!

ரெயிலில் ஹைட்ரஜன் வாயு நிரப்புவதற்காக, அரியானாவில் உள்ள ஜிந்த் நகரில் இதற்கென பிரத்யேக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

உலகில் முதல் ஹைட்ரஜன் ரெயில் 2018-ம் ஆண்டு ஜெர்மனியில் ஓடத் தொடங்கியது. தொடர்ந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பசுமை ரெயில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஹைட்ரஜன் ரெயிலை இயக்கும் 5-வது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஹைட்ரஜன் ரெயில் எவ்வாறு இயங்குகிறது?

இனி, ஹைட்ரஜன் ரெயில் எவ்வாறு இயங்குகிறது? என்பதை தொடர்ந்து பார்ப்போம். ரெயிலின் முதல் பெட்டியின் மேற்கூரையில் உள்ள சிலிண்டர்களில் ஹைட்ரஜன் வாயு உயரழுத்தத்தில் நிரப்பப்படுகிறது. ரெயில் இயங்கத் தொடங்கும்போது, சிலிண்டரில் உள்ள ஹைட்ரஜன் வாயு எரிபொருள் செல்லுக்கு அனுப்பப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது

அங்கு, ஹைட்ரஜன் வாயு, காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து மின்சாரத்தையும், தண்ணீரையும் உருவாக்குகிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒரு பகுதி பேட்டரில் சேமிக்கப்படுகிறது. எரிபொருள் செல் மற்றும் பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், மின்மோட்டாரை இயக்குகிறது. இதுவே ரெயிலை முன்நோக்கி நகர்த்துகிறது.

அதே நேரத்தில், தண்ணீர் கழிவு நிலையில் ஆவியாக மேல்நோக்கி வெளியேறுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது என்பதால், வருங்காலங்களின் ஹைட்ரஜன் ரெயில் இயக்கத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.4,149 கோடிக்கு ஏலக்காய் ஏற்றுமதி.. கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு
புதுடெல்லி,

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2023-24-ல் ரூ.1,253 கோடி  இருந்த இந்தியாவின் முழு ஏலக்காய் ஏற்றுமதி மதிப்பு, 2025-26-ல் ரூ. 4,149 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த இரண்டாண்டுகளில் மும்மடங்கு உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலக்காய் ஏற்றுமதி

இதன்படி கடந்த 2025-26ம் நிதியாண்டில் 4,149 கோடி ரூபாய்க்கு ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய 2023 - 24ம் நிதியாண்டின் 1,253 கோடி ரூபாயை விட மும்முடங்கு அதிகம். இதேபோல் 2023-24ல், 7,674 டன் ஏற்றுமதியான நிலையில், கடந்த 2025 - 26ல், 16,399 டன் ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்தாண்டில் சர்வதேச சந்தையில் ஏலக்காய்க்கு அதிக தேவை ஏற்பட்டது.

அதேபோல், நம் நாட்டின் ஏலக்காய்க்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. தரம், மணம் ஆகியவற்றில் நம் நாட்டின் ஏலக்காய்க்கு சர்வதேச வர்த்தகர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி

நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, சீனா, எகிப்து மற்றும் ஈரான் போன்ற நாடுகளும் இந்தியாவிலிருந்து இந்த நறுமணப் பொருளை இறக்குமதி செய்கின்றன.

இந்தியாவில் ஏலக்காய் சாகுபடி முக்கியமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் 'சிறிய ஏலக்காய்' (small cardamom) மற்றும் இமயமலை அடிவாரத்தையொட்டிய வடகிழக்கு பிராந்தியத்தில் பயிரிடப்படும் 'பெரிய ஏலக்காய்' (large cardamom).

கேரளா, தமிழகம்

சிறிய ஏலக்காய் உற்பத்தியில் கேரளா முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது; நாட்டின் மொத்த உற்பத்தியில் 56-58 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை இது கொண்டுள்ளது. இடுக்கி, வயநாடு மற்றும் பாலக்காடு ஆகியவை இங்கு ஏலக்காய் பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும்.

தொடர்ந்து தமிழகம், கர்நாடகாவில் ஏலக்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2025-26ல், 24,715 டன்னும் முந்தைய 2023-24ல், 25,230 டன்னும் உற்பத்தியானது. கடந்தாண்டில் 1 கிலோ ஏலக்காய் விலை 2,470 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், 2023 - 24ல், 1,763 ரூபாய்க்கே விற்பனையானது. கடந்த 2025-26ல் உற்பத்தி, விலை இரண்டும் சாதகமாக இருந்தது. நடப்பு சீசனில் போதுமான மழை இல்லாததால், விளைச்சல் குறையும் என நறுமண பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

ஏலக்காய் - உற்பத்தி - ஏற்றுமதி

ஆண்டு - உற்பத்தி - ஏற்றுமதி - மதிப்பு

2023-24 - 25,230 -  7,674 - 1,253

2025-26 - 24,715 - 16,399 - 4,149

இந்தியாவின் ஐஸ்கிரீம் தலைநகரம் எது தெரியுமா?
ஐஸ்கிரீம் தலைநகர்

பொதுவாக ஐஸ்கிரீம் என்பது கோடைகால உணவாகவே கருதப்படுகிறது. ஆனால் கர்நாடகாவின் மங்களூரு நகரத்தில் அது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே மங்களூரு, 'இந்தியாவின் ஐஸ்கிரீம் தலைநகர்' என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இந்த நகரத்தில், பில்டர் காபி, பிரியாணியைப் போலவே ஐஸ் கிரீமிற்காக மக்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் இரவு நேரம் வந்துவிட்டாலே போதும் வண்ண விளக்குகளால் இந்த நகரமே திருவிழா போல் காட்சி அளிக்கும்.

இரவு உணவுக்குப் பிறகு ஐஸ்கிரீம்

இங்கு மக்கள் ஆண்டு முழுவதும், குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. பல பிரபல ஐஸ்கிரீம் நிறுவனங்கள் மங்களூருவிலிருந்தே உருவாகியுள்ளன. மேலும், பழங்கள், ஜெல்லி, நட்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் அடுக்குகளால் தயாரிக்கப்படும் 'கட்பட்' (Gadbad) என்ற சிறப்பு ஐஸ்கிரீம் இந்நகரின் அடையாளமாகவே விளங்குகிறது.

20-ம் நூற்றாண்டில் தொடக்கம்

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐஸ்கிரீம் மங்களூருவுக்குள் நுழைந்தது. இருப்பினும், உள்ளூர் மக்கள் அதை எவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டு, தங்களின் அன்றாட விருப்பமான ஒன்றாக மாற்றிக்கொண்டார்கள் என்பதுதான் அந்த நகரத்தைத் தனித்துவமாக்கியது.

உலகளாவிய போக்குகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நகரங்களைப் போலல்லாமல், மங்களூரு தனது ஐஸ்கிரீம் கலாசாரத்தை உள்ளூர் சுவைகளை மையமாகக் கொண்டு வடிவமைத்துள்ளது.

சாதாரண பொதுமக்களும் ருசிக்கலாம்

ஒரு காலத்தில் உயர்குடிமக்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த ஐஸ்கிரீம், விரைவில் சாதாரண பொதுமக்கள் ருசிபார்த்து சாப்பிடுவம் தெருவரை வந்தடைந்தது. கட்டுப்படியான விலை மற்றும் பரவலான கிடைக்கும்தன்மை ஆகியவை ஐஸ்கிரீமை அனைவருக்கும் கிடைக்கச் செய்து, அது அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பி உண்ணும் ஒரு பிரதான இனிப்புப் பண்டமாக மாற்றியது.

'காட்பாட்' (Gadbad) போன்ற பிரத்யேகமான சுவைகள் மற்றும் ஆண்டு முழுவதும் நீடிக்கும் ஐஸ்கிரீம் கலாசாரத்திற்கு இது புகழ்பெற்றது. உலகின் தலைசிறந்த ஐஸ்கிரீம் இடங்களில் ஒன்றாக அறியப்படும் 'பப்பாஸ்' (Pabba's) பார்லர் உட்பட ஏராளமான பிராண்டுகள் இங்கு உள்ளன.

ஐஸ்கிரீமை ஒரு இனிப்பாக மட்டுமல்லாமல், கலாசாரமாக மாற்றிய நகரம் என்ற பெருமையை மங்களூரு பெற்றுள்ளது.

பிறக்கப்போகும் ஆடி.. தொடங்கியாச்சு ஆடித் தள்ளுபடி: எப்படி வந்தது தெரியுமா?
சென்னை,

ஆடி மாதம் பிறக்க இருப்பதையொட்டி, ஜவுளிக் கடைகளில் ஆடித் தள்ளுபடி விற்பனை எப்படி தொடங்கியது? என்ற சுவாரஸ்ய தகவலை பார்க்கப்போகிறோம்.

ஆடித்தள்ளுபடி விற்பனை

பொதுவாக, ஆடி மாதம் அம்மனை தரிசிக்க உகந்த மாதமாக கருதப்படுகிறது. மற்றபடி, திருமணம், சுப நிகழ்ச்சிகள் எதுவும் இம்மாதத்தில் நடைபெறாது. புது மணத்தம்பதிகளை கூட பிரித்து வைக்கும் சம்பிரதாயங்களும் உண்டு.

இப்படிப்பட்ட ஆடி மாதம் பிறக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருக்கிறது. ஜூலை 17-ந் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. ஆனால், அதற்கு 15 நாட்களுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஜவுளிக் கடைகளில் ஆடித் தள்ளுபடி விற்பனை தொடங்கிவிட்டது.

சுவாரஸ்ய பின்னணி

அதுவென்ன, ஆங்கிலத்தில் 12 மாதங்கள் இருப்பது போல், தமிழிலும் 12 மாதங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, ஆடி மாதத்தில் மட்டும் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது ஏன்?  என்ற கேள்வி பலரது மனதில் எழலாம். அதற்கு சுவாரஸ்ய பின்னணியும் இருக்கிறது.

இப்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில், அனைவரது கையிலும் எப்போதும் பணப்புழக்கம் இருக்கிறது. பணம் இல்லை என்றாலும், ஒரு பொருள் தேவையென்றால், மாதத் தவணையில் வாங்கிவிட முடியும். அதற்கான வசதிகளை வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்கின்றன.

ஆடிப் பட்டம் தேடி விதை

ஆனால், முந்தைய காலத்தில் அப்படி எந்த கடன் வசதியும் கிடையாது. குறிப்பாக, ஆடி மாதத்தில் விவசாயிகள் கையில் பணம் இருக்காது. "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று பழமொழி ஒன்று சொல்வார்கள். அதாவது, ஆடி மாதத்தில் கரும்பு, நெல் நடவுப் பணிகளுக்காக விவசாயிகள் தங்கள் கையில் உள்ள பணத்தை எல்லாம் செலவு செய்துவிடுவார்கள்.

இதுபோக, ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட எந்த சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்பதால், ஜவுளிக் கடைகளில் விற்பனையே இருக்காது. அதாவது, அந்த மாதத்திற்கான சம்பளத்தைகூட ஊழியர்களுக்கு கொடுக்க முடியாமல், பல ஜவுளிக்கடை உரிமையாளர்கள் கஷ்டப்பட்டுள்ளனர்.

கடை உரிமையாளர்கள் வியூகம்

ஒவ்வொரு ஆண்டும் இதேநிலை தொடர்ந்ததால், ஆடி மாதத்தில் ஜவுளி விற்பனையை அதிகரிக்க கடை உரிமையாளர்கள் வியூகம் வகுத்தனர். அதன்படி, ஆடிக்கழிவு என்ற பெயரில், கடைகளில் விற்பனையாகாமல் நீண்ட நாள் தேங்கிக்கிடந்த துணிகளை சற்று லாபம் குறைத்து, தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் மத்தியிலும் விளம்பரப்படுத்தப்பட்டது. ஜவுளிக்கடை உரிமையாளர்கள் எதிர்பார்த்தது போல, அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஆடி மாதத்தில் தள்ளுபடி விலையில் ஜவுளியை வாங்க பொதுமக்கள் ஓடோடி கடைகளுக்கு வந்தார்கள். லாபம் சற்று குறைவு என்றாலும், விற்பனையாகாமல் தேங்கிக்கிடந்த ஜவுளிகளும் விற்பனையானதால், அடுத்து வரும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு புத்தம் புதிய துணிமணிகளை கடைகளில் வாங்கி வைக்க இது வசதியாக அமைந்தது.

விற்பனை ஜோர்

"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்று சொல்வார்களே, அதுபோல, ஆடி மாதத்தில் ஜவுளி விற்பனையும் நடந்தது. தேங்கிக் கிடந்த துணிகளும் விற்பனையாகி காலியாகின. இப்படித்தான் ஆடித்தள்ளுபடி ஜவுளி விற்பனை தொடங்கியது. இன்றைக்கு 5 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி என்று தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துவிட்டது. எல்லா கடைகளிலும் ஜவுளி விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது.

வயதான பக்தர்களுக்கு குட் நியூஸ்.. திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்: நடைமுறை என்ன?
திருப்பதி,

வயதான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர். விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுவதால், தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

30 நிமிடங்களில்..

இந்த நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசிக்க, இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடைமுறை என்ன?

இனி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் எவ்வாறு இலவச தரிசனத்திற்கு செல்வது என்பதை பற்றி பார்ப்போம்.

அதாவது, 65 வயதிற்கு மேலான பக்தர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் எஸ்-1-ல் காட்ட வேண்டும். பின்னர், கோவிலின் வலது சுவரையொட்டி, பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்லாம்.

இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால், எளிதாக நடந்து செல்லலாம். தரிசன வரிசைக்கு சென்றவுடன் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடித்து வெளியே வரலாம்.

சூடான சாப்பாடு

தரிசனத்திற்கு பிறகு முதியோர் அனைவருக்கும் இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் வழங்கப்படும். மேலும், பேட்டரி கார்கள் மூலம் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கவுண்டருக்கும், பிறகு அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் செல்ல வசதி உள்ளது.

சண்டே ஸ்பெஷல்: சுவையான சவ் சவ் கூட்டு செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:-

சவ் சவ் - 1 (பெரியது)

பாசி பருப்பு - ½ கப்

சின்ன வெங்காயம் - 7

பூண்டு - 5 பல்

மிளகாய் - 2

தேங்காய் - ½ மூடி

சீரகம் - ½ டீஸ்பூன்

மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க..

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் - 2

கடுகு - ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில், பாசி பருப்பை நன்கு தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் அந்த பாத்திரத்தை வைக்கவும்.

அத்துடன் 3 கப் தண்ணீர், வெட்டி வைத்த 5 சின்ன வெங்காயம், 4 பல் பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவிடவும்.

மற்றொரு பக்கம், சவ் சவ் காயை தோலை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும். தேங்காயையும் பல் பல்லாக வெட்டி மிக்சி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.

அத்துடன் 2 சின்ன வெங்காயம், ஒரு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பாசி பருப்பு வெந்தவுடன் அத்துடன் வெட்டிவைத்த சவ் சவ்வை சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து, நன்கு கிளறிவிட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

அத்துடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு மீண்டும் 5 நிமிடம் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.

அடுத்து தாளிக்க, சட்டியில் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடாகியதும், சிறிதளவு வெட்டிவைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.

வெங்காயம் பொன் நிறமாக வந்தவுடன் காய்ந்த மிளகாய், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். எல்லாம் பொறிந்ததும், அதை அப்படியே சவ் சவ் கூட்டின் மீது ஊற்றி கிளறிவிடவும். சுவையான சவ் சவ் கூட்டு ரெடி.

உலக மக்கள் தொகை தினம் 2026... முக்கிய நோக்கம் என்ன?
உலகெங்கும் வாழும் மக்களின் உரிமைகள், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 'ஜூலை 11' அன்று உலக மக்கள் தொகை தினம்  கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ‘உலக மக்கள் தொகை தினம்’ இன்று (ஜூலை 11) கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் இந்த தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "இன்றைய மற்றும் எதிர்கால இளைஞர்களின் நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை நனவாக்குதல்" என்பதாகும்.

கருப்பொருள் உணர்த்துவது என்ன?

இந்த கருப்பொருள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில்,  "உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு பல்வேறு வகைகளில் முன்வந்து செயல்படுகின்றனர். அவர்களின் உறுதிப்பாட்டிற்கு ஈடுகொடுக்கும் வகையில் நாமும் கல்வி, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், எதிர்பார்ப்பை உள்ளடக்கிய கண்ணியமான வேலைவாய்ப்பு, முடிவெடுக்கும் செயல்முறைகளில் உண்மையான பங்களிப்பு ஆகியவற்றுக்கான கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

வரலாற்று பின்னணி

கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை 500 கோடியைத் தொட்டது. இந்த மைல்கல் உலக நாடுகளிடையே பெரும் விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. இந்த வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது '1989' ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் ஆளும் குழு இந்தத் தினத்தை ஆண்டுதோறும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நிரந்தர நாளாக அறிவித்தது. அதன்படி, 1990 ஜூலை 11 முதல் உலக மக்கள் தொகை தினம் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

830 கோடியை தாண்டிய மக்கள் தொகை

2026 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் '830 கோடியை' கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சமீபத்திய மக்கள் தொகை கணிப்புகளின்படி, தற்போதிலிருந்து வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் ஏற்படப்போகும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வெறும் 8 நாடுகள் மட்டுமே வழங்க உள்ளன. அதில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, தான்சானியா, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

மக்கள் தொகை தினத்தின் நோக்கங்கள்

2026-ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை தினமானது, மக்கள் தொகை தொடர்பான சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அனைவருக்கும் சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதன் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, உலகளாவிய மக்கள் தொகை சவால்கள் மற்றும் சமூகத்தின் மீது அவற்றின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கட்டுரை எழுதுதல், குழு விவாதங்கள், வினாடி-வினா மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இலவச மருத்துவப் பரிசோதனைகள், குடும்பக் கட்டுப்பாடு குறித்த ஆலோசனை, தாய்மைக்கால மருத்துவப் பராமரிப்பு மற்றும் பிரசவ கால சுகாதாரச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

கோயம்புத்தூரில் இருந்து லெய்ப்ஜிக் வரை.. ஒரு ரேசரின் பயணம்
ஒரு இந்திய கண்டுபிடிப்பாளர் பொறியியல் பட்டம்கூட இல்லாமல், நாட்டிலேயே முதல் முறையாக மின்சார ரேசரை, உருவாக்கி அதற்கு ஜெர்மனியில் கைத்தட்டலையும் பெற்றார்.

கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஜிடி நாயுடு அறிவியல் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்தால் அந்த ஹாலின் அளவுதான், நாம் முதலில் கவனிக்கும் விஷயமாக இருக்கும். அதில் உள்ள பொருட்கள் ஒரு தொழில் முன்னோடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் எவ்வளவு படாடோபமாக வைக்கப்பட்டிருக்க வேண்டுமோ அப்படி இருக்காது. வெல்வெட் விரிப்புகள் இருக்காது. வண்ணமயமான விளக்குகளும் இருக்காது. அந்த ஷோகேஸ்கள் மிகவும் பழையதாக காட்சியளிக்கும்.

அதில், மின்சார மோட்டார், மண்ணெணெயில் இயங்கும் காற்றாடி உள்ளிட்ட விதவிதமான பொருட்களின் நடுவே சற்றும் முக்கியத்துவம் அற்ற வகையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு பொருளை காணலாம். மிகவும் ஒல்லியாக, கையால் தயாரிக்கப்பட்டு கூர்தீட்டப்பட்டிருக்கும் ஒரு ரேசர் (சவரக் கருவி) இருக்கும். அதின் ஸ்டீல் பகுதியில் அந்த ரேசரை உருவாக்கியவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

ரேசரின் பின்னால் உள்ள மனிதர்

ஜி.டி. நாயுடு என நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு, 1893 இல் இன்று உள்ள கோயம்புத்தூரில் சில மணி நேர பயண தொலைவில் இருக்கும் கலங்கல் என்ற பகுதியில் பிறந்தார். சிறுவயதில் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். இதற்கு அவரை குறித்து வெளியான சுயசரிதைகளில் பல காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் பொறுமையற்று இருந்தார். அந்த கல்விக் கட்டமைப்பு அவருக்கு பொருந்தவில்லை. பேனாவை விட தன் கைகளே சிறந்ததாக அவருக்கு பட்டது. எனவே அவர் வேலைக்கு சென்றார். முதலில் பண்ணை வேலைக்கும் பின், ஜவுளி ஆலையிலும் பணியாற்றினார். அதன்பின் சொந்தமாக பஸ் ஒன்றை வாங்கி, மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள சிறிய வழித்தடத்தில் அதை அவரே டிரைவராக இருந்து ஓட்டி வந்தார்.

அதன் பின் ஒரு சில ஆண்டுகளில் அந்த டிரைவர், ஒரு பஸ் அதிபராக உருவெடுத்தார். அவரின் 20களின் பிந்தைய பகுதியில் யூனியன் மோட்டார் சர்வீஸ் என்ற போக்குவரத்து நிறுவனத்தை நடத்தினார். தென் இந்தியாவிலேயே மிகவும் ஆரம்பகட்டத்தில் இயங்கி வந்த போக்குவரத்து நெட்வொர்க் அவருடையது ஆகும். பஸ் தொழில் அவருக்கு இன்ஜின்களை பற்றிய அறிவை தந்தது. இன்ஜின்கள்,  பொருட்களை வரையும் கருவி மேலான ஆர்வத்தை தூண்டியது. அந்த கருவி பின்னர் தொழிற்பட்டறைக்கு இட்டுச் சென்றது. அந்த தொழில்பட்டறை 1920களின் பிற்பகுதியிலும், 1930களின் முற்பகுதியிலும் மிகசிறந்த ஒன்றாக பரிணமித்தது. ஒரு நபர் தொழில்பட்டறையான அது, பெரிய படிப்பு எதுவும் தேவைப்படாத உள்ளூர் பொறியியலை மையமிட்டு இயங்கியது. கோயம்புத்தூர் ஒரு உற்பத்தி தலைநகரமாக மாறும் என்று அப்போது யாரும் கற்பனை செய்திருக்க முடியாது.

தன் தொழில் வாழ்க்கை முழுக்க நாயுடுவுக்கு இருந்த அந்த உள்ளுணர்வு  மிகவும் எளிமையுடன் இருந்தது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளையும் பார்த்து அவருக்கு ஒரு கேள்வி தான் எழுந்தது, "இதை ஏன் இந்தியாவிலேயே செய்யக்கூடாது?” என்ற கேள்விதான் அது. ஏன் ஜவுளி இயந்திரத்தை லான்சசைரில் (இங்கிலாந்து) இருந்து இறக்குமதி செய்யவேண்டும், அதை கோயம்புத்தூரிலேயே ஏன் செய்ய கூடாது? ஒரு மின்சார மோட்டாருக்காக ஏன் வெளிநாட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும்? 1937இல் வளர்ந்து வரும் இந்திய தொழில்சாலைகள் பயன்படுத்துவதற்காக கோயம்புத்தூரிலேயே தொழிற்பட்டறையில் உருவாக்கப்படும் பொருட்களை வைத்து ஏன் அதை உருவாக்க கூடாது?

இதுபோல அவருக்கு இருந்த இந்த தீராத தேடல் தான், 1930களின் பிற்பகுதியில் அவரது ஆர்வத்தை ஒரு சிறிய பொருளை நோக்கி நகர்த்தியது. அவரது கழிவறையில் இருந்த ஒரு சேஃப்டி ரேசர் அது.

நாயுடு கண்ட பிரச்சனை என்ன?

1930 மற்றும் 40களில் இந்திய வீடுகளில் இருந்த ஷேவிங் ரேசர் என்பது இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருள். அதிலும் அமெரிக்காவில் இருந்து வரும் ஜில்லெட், இங்கிலாந்தில் இருந்து வரும் வில்கின்சன் சுவார்ட், ஜெர்மனியில் இருந்து வரும் ராட்பார்ட் ஆகிய சிறந்த ரேசர்கள், ஒரு சராசரி இந்தியனுக்கு எட்டாக்கனியாவே இருந்து வந்தது. மலிவு விலையில் கிடைத்தவை மிகவும் கரடுமுரடாக, பாதுகாப்பு இன்றி, மொன்னையாக இருந்தது. ஒவ்வொரு குடிமகனும் வீட்டில் தினமும் சவரம் செய்துகொள்ளும் ஒரு நாட்டில், கடன்வாங்கப்பட்ட பிளேடும், மிகச்சிறிய ரேசரும் ஒரு கசப்பான பொருளாதார உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியது. இந்தியா அப்போது சொந்தமாக தயாரிக்கத் தொடங்கவில்லை.

எனவே அவர் எலக்ட்ரிக் பிளேடை கண்டுபிடித்தார். அது மிகவும் சிறியது. இருப்பினும் சரியான அளவில் கச்சிதமாக இருந்தது. இந்திய வாழ்க்கைமுறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள், இந்தியரின் கைகளால், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வாங்கக்கூடிய விலையில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டால் அது எப்படி இருக்கும் என்று அவர் சிந்தித்தார். அந்த சிந்தனையின்மீது நம்பிக்கை வைத்து அவர் செயல்பட்டார். அவரின் நம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் அந்த ரேசர் தான்.

ரேசன்ட் ரேசர் கண்டுபிடிப்பு

1935-36 இல் நாயுடுவின் தொழிற்பட்டறையில் இருந்து உருவான ரேசர், அதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட வேறெதையும் போன்றது அல்ல. அந்த மின் ரேசரை அவர் ரேசன்ட் என அழைத்தார். அந்த பெயர் அதற்கு ஏற்ற கச்சிதமாக, அதன் வேகத்தையும், துல்லியத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. அதற்கு போட்டியாக இருந்தவை மிகவும் பளுவாக இருந்த நிலையில் அது மிகவும் மெலிதாக இருந்தது, கையடக்கமாக இருந்தது. நாயுடுவால் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்களால், அது உற்பத்தி செய்யப்பட்டது.

ரேசன்ட் உடைய முக்கிய பகுதி அதன் பிளேடும், சட்டகமும் தான். UMS பிளேட் என அழைக்கப்படும் பிளேட் தான் எல்லா ரேஸர்களிலும் முக்கியமான ஒன்று. எந்த கோணத்தில் வெட்ட வேண்டும், பயனர்களின் பாதுகாப்பு, சவரம் செய்வதற்கு சௌகர்யமாக இருப்பது என அனைத்தையும் அது தான் தீர்மானிக்கிறது.

நாயுடு தயாரித்த பிளேடு, அப்போதும் சரி இப்போதும் சரி, ஆசியாவில் உற்பத்தி செய்யப்பட்டதிலேயே மிகவும் மெல்லியதாகும். அது கைகளாலேயே துல்லியமாக செய்யப்பட்ட நேர்த்தியை ஐரோப்பாவில் இருந்து வந்து அதை சோதித்தவர்களே வியந்தனர்.

கோயம்புத்தூர் தொழிற்பட்டறையிலேயே செய்யப்பட்ட ரேசரின் சட்டகம் (பாடி), எடை குறைவாக, சமன்பாட்டுடன், குறிப்பாக அதை அசெம்பிள் செய்ய ஜெர்மனியில் உள்ளது போன்ற பெரிய தொழில்நுட்ப குழுவெல்லாம் தேவைப்படாத வகையில் உள்ளூர் தொழிலாளர்களே எளிதில் செய்துமுடிக்கும் வகையில் இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் ரேசர் என்று நினைத்துப் பார்ப்பதே பெரிய விஷயமாக இருந்த அந்த காலத்தில் மின்சார சவரக் கருவியை வடிவமைத்து தயாரித்தது எல்லாம் வியக்கத்தக்க விஷயம். மோட்டார்களையும், மின்சாதனகளையும், தன் பழக்கவழங்களில் புதுமைகளையும் கூட வெளிநாட்டில் இருந்து பெறும் ஒரு நாட்டில் சத்தமே இல்லாமல் சொந்த தயாரிப்பு ஒன்று நிகழ்ந்தது, அதுவும் கோயம்புத்தூரில்.

ரேசன்ட்டை பொறுத்தவரை ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அப்படி ஒன்று இந்தியாவில் முதல் முறை உருவானது என்பதை விட, அது சிறப்பாகவும் இருந்தது என்பதுதான்.

லெய்ப்ஜிக்  தலைவணங்கிய தருணம்

லெய்ஜிகர் மெஸ்ஸே எனப்படும் ஜெர்மனியின் லெய்ப்ஜிக் நகரில் நடக்கும் வணிக பொருட்காட்சி, 8-க்கும் மேற்பட்ட நாடுகளை கொண்ட மத்திய ஐரோப்பாவிலேயே நடக்கும் மிகப்பெரிய தொழிற் காட்சி ஆகும். ஐரோப்பிய காலண்டர்படி, 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடக்கும் அந்த மிக முக்கியமான வணிக ஒன்றுகூடலில் ஐரோப்பிய கண்டம் முழுதும் இருக்கும் உற்பத்தியாளர்கள், தங்களின் சிறந்த பொருட்களை உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து பெருந்தொகை கொடுத்து வாங்குபவர்களுக்காக காட்சிப்படுத்துவர். எனவே லெய்ப்ஜிக்கில் ஒரு பொருளை காட்சிப்படுத்துவது என்பது மிகப்பெரிய விஷயம். லெய்ப்ஜிக்கில் வெற்றி பெறுவது என்பது, ஜெர்மன் பொறியியல் பாரம்பரியத்தில் நன்மதிப்பு பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் சிறு சமூகத்திற்குள் இடம்பிடிப்பதை குறிக்கிறது.

1936, லெய்ப்ஜிக்கில், ஜிடி நாயடு தனது ரேசன்ட் ரேசரை அதன் பிளேடுடன் எடுத்துச் சென்று காட்சிப்படுத்தி கவனம் பெற்றார். ஜிடி நாயடு அறக்கட்டளை ஆவணகளின்படியும், வாய்மொழியாக 3 தலைமுறைகளாக கூறப்பட்ட வரலாற்றின் படியும் அந்த மின்சார ரேசர் அதன் ஒல்லியான, துல்லியமான நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட பிளெடுக்காக அங்கு போற்றப்பட்டது. இந்திய தொழில்துறைக்கு வெளிநாட்டில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. லெய்ஜிக் மியூசியம் மற்றும் லெய்ப்பிஜர் கண்காட்சி ஆவண காப்பகத்தில் உள்ள ஆவணங்களை ஆராய்ந்ததன் மூலம் இந்த கண்டுபிடிப்பு அது காட்சிப்படுத்தப்பட்ட அதே ஆண்டில் கௌரவிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த காட்சியை சற்று கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஹால் முழுக்க ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெரிய உற்பத்தியாளர்கள், தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துபவர்கள், அதை வாங்குபவர்கள் என நிறைந்திருக்கும், சுற்றிலும் ஜெர்மன் பாரம்பிய தொழில் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில், மேடையில் இருப்பவர்களிடம் விருதுக்கு தேர்வான பொருள் குறித்த குறிப்பு செல்கிறது. அந்த குறிப்பில் உள்ள கண்டுபிடிப்பாளரின் ஊர் பெயரை கூட அங்கிருப்பவர்கள் இதன் முன் கேட்டிருக்க மாட்டார்கள். ஒரு மிகச்சிறிய இந்திய கருவி. கச்சிதமான முனைகளை கொண்ட ஒரு பிளேட். அறிவிப்பை கேட்டதும் ஜெர்மானியர்கள் எழுந்து நின்று கைத்தட்டும் அளவுக்கு ஒரு கண்டுபிடிப்பை கோயம்புத்தூரை சேர்ந்த அந்த கண்டுபிடிப்பாளர் வழங்கியிருந்தார்.

அந்த தருணம் சுதந்திரத்திற்கு பின்னான இந்தியாவின் தொழில் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மாறியது. அதை நாம் கற்றுத் தருவதில்லை. அதை நாம் பாடப்புத்தகத்தில் சேர்க்கவில்லை. அதை மெய்ப்பித்து காட்டிய மனிதனுக்கு ஒரு பாரத ரத்னாவோ, பத்ம விபூஷனோ வழங்கப்படவில்லை. நாடு தழுவிய ரசிகர்கள் அவருக்கு இல்லை. தமிழ்நாடு அவரை நினைவுகூர்கிறது. கோயம்புத்தூர் நினைவுகூர்கிறது. ஜெர்மனி அந்த பிளேடை கௌரவித்தது. ஆனால் இந்தியா வெறும் மௌனத்தையே பரிசாக தந்தது.

ஜிடி நாயுடுவின் நம்பிக்கை

UMS ரேசர் பிளேடை பாராட்ட ஐரோப்பா வரிசைகட்டி வந்தது. ஆனால் இந்தியா மறந்தது. இந்த முரண்பாடு வெறும் தற்செயலானது அல்ல, அது ஒரு தொடர்ச்சி.  இந்தியா, சுதந்திரத்திற்கு பின் உலகின் உற்பத்தி தேசங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை போலல்லாமல் உள்நாட்டு பொறியியல் வளர்ச்சிக்கு காட்டிய பாராமுகத்தின் வலிமிகுந்த தொடர்ச்சி அது.

ரேசன்ட் பிளேட் சிறியது தான். பொருட்செலவை பொறுத்தவரையும் அது மலிவானது தான். ஆனால் அதன் சிக்கனமான தன்மை தான் அது பெருமளவில் உற்பத்தி செய்யப்படுத்தலுக்கும், உள்ளூரில் பொருளை சந்தைப்படுத்துதலுக்கும் சிறந்தது என தற்போதைய இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் மெச்சக்கூடிய ஒன்றாக உள்ளது. அதுவும் கோயம்புத்தூரில், பொறியியல் பட்டமே பெறாத ஒருவரால் அது கண்டுபிடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் இன்று இந்தியாவின் தற்சார்புள்ள தொழில் சங்கிலி கொண்ட நகரங்களில் ஒன்று. அதன் ஜவுளி சிறு குறு தொழில்கள் உலகுக்கே ஆடைகளை வழங்கி வருகிறது. அதன் சிறு உற்பத்தியாளர்கள் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் தானே இயங்கும் விநியோக சங்கிலியை உருவாக்கியுள்ளனர்.

அதன் பொறியியல் கல்லூரிகள், இந்தியாவுக்கு தேவையான திறமையான பொறியியலாளர்களை உருவாக்கி வருகிறது. இது எல்லாம் அதுவாக நடந்த ஒன்று அல்ல. இது ஜிடி நாயுடுவின் நம்பிக்கையால் உருவானது. நம்பிக்கை வைத்து மதித்தால் இந்திய தொழில்துறையும் உலக நாடுகளுக்கு ஈடாக உயரும் என்று அவர் வைத்த நம்பிக்கையின் நிழலில் விளைந்தவை இவை.

அருங்காட்சியகத்தில் ரேசன்ட்

உங்களால் இன்னும் அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்க்க முடியம். கோவையில் உள்ள ஜிடி நாயுடு அறிவியல் அருங்காட்சியகத்தில் அவர் கண்டுபிடித்த அசல் ரேசன்ட் ரேசர் இன்னும் இருக்கிறது. அவர் கண்டுபிடித்த மற்ற சிறிய சிறிய அதியசங்களுக்கு நடுவே அது உள்ளது. 1937இல் அவர் கண்டுபிடித்த மின் மோட்டார், மண்ணெண்ணையில் இயங்கும் விசிறி, யுஎம்எஸ் ரேடியோ, வாக்குப்பதிவு இயந்திரம், ஜவுளி சாதனம் ஆகியவற்றின் நடுவே அந்த ரேசரும் இருக்கிறது. 1960 முதல் இந்த அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்கு திறந்தே உள்ளது.

நாட்டில் உள்ள வித்தியாசமான தொழில்துறை அருங்காட்சியகங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. பகுதியளவு அவரின் வாழ்க்கை வரலாற்றை  காட்சிப்படுத்துவதாகவும், பகுதியளவு அவர் கண்டுபிடித்த பொருட்களை காட்சிப்படுத்துவதாகவும், உயிரோடு இருக்கும்போது நாடு மதிப்பளிக்க மறந்துவிட்டுட்ட ஒருவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் அந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

ஜிடி நாயுடுவின் வாழ்க்கைக் கதையின் பகுதிகளை சொல்லும் படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு...  https://events-dailythanthi.com/gdn/

கோவை மண்ணின் வரலாற்றுச் சாதனை: 1937-ல் உருவான இந்தியாவின் முதல் உள்நாட்டு மின்சார மோட்டார்!
இன்று நாம் பெருமையுடன் பேசும் "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) என்ற திட்டத்திற்கு, சுமார் 89 ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் மண்ணில் அடித்தளமிட்டு சாதனை படைத்துள்ளார் 'மறைந்த மாமேதை' ஜி.டி.நாயுடு

1937 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார சாதனத் தேவைகளும் பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலத்தில், எவ்வித முறையான பொறியியல் கல்வியும் பயிலாத ஜி.டி.நாயுடு, கோவையில் உள்ள தமது "யுனைடெட் மோட்டார் சர்வீஸ்" பட்டறையில் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஒரு மின்சார மோட்டாரை உருவாக்கினார்.

சவால்களை வென்ற தமிழன்:

அக்காலகட்டத்தில் ஆங்கிலேய அரசின் தொழில்துறைக் கொள்கைகள் இந்தியர்கள் சொந்தமாகத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இருந்தன. குறிப்பாக, மோட்டார் தயாரிப்பிற்கு மிக முக்கியத் தேவையான மின்சாரத் தரம் வாய்ந்த செப்பு கம்பிகள் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்தன. இருப்பினும், ஜி.டி. நாயுடு பின்வாங்கவில்லை. தனது சொந்தப் பட்டறையிலேயே செப்புப் பொருட்களை உள்ளூர் வளங்களைக் கொண்டு கம்பி இழைத்து, இரும்புப் பாகங்களைச் செதுக்கி, உலகத் தரத்திற்கு இணையாக இந்த மோட்டாரை வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார்.

இது வெறும் மாதிரி அல்ல..

இந்த மின்சார மோட்டார் வெறும் காட்சிப் பொருள் அல்லது ஒரு சோதனை முயற்சி மட்டுமல்ல; அது கோவையின் அன்றைய ஜவுளி ஆலைகள் மற்றும் அச்சுக்கூடங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட ஒரு முழுமையான வணிகத் தயாரிப்பாகும். இந்திய மின்சார மோட்டார் உற்பத்தித் துறையின் முன்னோடியாக ஜி.டி.நாயுடு திகழ்வதற்கு இந்தத் தயாரிப்பே மிக முக்கியச் சான்றாகும்.

இன்றும் அழியாத பாரம்பரியம்:

அவர் அன்று விதைத்த விதைதான், இன்று கோயம்புத்தூரை இந்தியாவின் முன்னணி ஜவுளி, மோட்டார் பம்ப் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு மையமாக மாற்றியுள்ளது. "யுனைடெட் மோட்டார் சர்வீஸ், கோயம்புத்தூர்" என்று பொறிக்கப்பட்ட அந்த சிறிய உலோக மோட்டார், இன்றும் கோவையில் உள்ள "ஜி.டி. நாயுடு அறிவியல் அருங்காட்சியகத்தில்" கண்ணாடிப் பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அது இன்றும் இயங்கும் நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.டி.என். திரைப்படம்

தொழில்நுட்ப வரலாற்றில் தமிழர்களின் சுயசார்புத் திறமைக்கு மகுடமாய் விளங்கும் இந்த மின்சார மோட்டாரின் கதை,  ஜி.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் மூலமாக உலகறிய வரவுள்ளது. ‘ஜி.டி.என்.’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு...  https://events-dailythanthi.com/gdn/

இந்தியா உருவாக்க மறுத்த அந்த இரண்டாயிர ரூபாய் கார்!
1952-ல், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு கண்டுபிடிப்பாளர், சாமானிய இந்தியர்களும் வாங்கும் விலையில் ஒரு வாகனத்தில் இரண்டு இருக்கை கொண்ட பெட்ரோல் காரை உருவாக்கினார். ஆனால், இந்திய அரசு அதற்கு உற்பத்தி உரிமம் வழங்க மறுத்துவிட்டது. தனக்கென ஒரு சொந்த கார் வருவதற்கு இந்த நாடு மேலும் முப்பத்தொரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

1952-ஆம் ஆண்டின் ஒரு நாள், கோயம்புத்தூரின் புறநகர்ப் பகுதியில் இருந்த ஒரு பட்டறையில், ஒரு சிறிய இரண்டு இருக்கைகள் கொண்ட கார் தனது சொந்த ஆற்றலில் மெதுவாக உருண்டு வெளியே வந்தது. அதன் இதயம் ஒரு பெட்ரோல் எஞ்சின். அதன் சேசிஸ் கைகளால் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டது. அதன் பாடி  மிகவும் எளிமையாக இருந்தது. பெருமளவில் உற்பத்தி செய்தால், அதற்கு ஆகும் என்று அந்தக் கண்டுபிடிப்பாளர் கணக்கிட்ட விலை வெறும் இரண்டாயிரம் ரூபாய்!

இரண்டாயிரம் ரூபாய்.  அந்தத் தொகையை ஒரு கணம் உங்கள் மனதில் நிறுத்திப் பாருங்கள். எழுபது ஆண்டுகால பணவீக்கம், மக்களின் வாங்கும் சக்தி, மற்றும் காலப்போக்கில் ஏற்பட்ட அதன் மதிப்பின் சரிவு ஆகியவற்றிற்கு ஏற்ப அதைச் சரிசெய்து பாருங்கள். பிற்காலத்தில் மற்றொரு தலைமுறை இந்தியர்கள் தங்களின் முதல் காருக்காகச் செலுத்தவிருந்த பெரும் தொகையுடன் அதை ஒப்பிட்டுப் பாருங்கள். 1950-களின் முற்பகுதியில் இருந்த சர்வதேச கார் விலைகளுடன் அதை ஒப்பிட்டுப் பாருங்கள். எந்தவொரு நியாயமான அளவுகோலின்படி பார்த்தாலும், 1952-ல் தமிழ்நாட்டில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தக் கார், உலகிலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதிலேயே மிக மிக மலிவான மோட்டார் காராக இருந்திருக்கும்.

ஆனால், அது ஒருபோதும் விற்பனைக்கு வரவில்லை.  அதைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான தொழிற் உரிமத்தை வழங்க இந்திய அரசு மறுத்துவிட்டது. அதன் முன்மாதிரி கார் ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திறக்கப்பட்டிருக்க வேண்டிய தொழிற்சாலை ஒருபோதும் திறக்கப்படவே இல்லை.

நாடு மேலும் முப்பத்தொரு ஆண்டுகள் காத்திருந்தது. அதன் பிறகு, 1983-ல் தான் இந்தியாவின் முதல் பிரபலமான உள்நாட்டு காரான 'மாருதி 800', சுமார் நாற்பத்தேழாயிரத்து ஐநூறு ரூபாய் விலையில் இந்தியச் சாலைகளுக்கு வந்தது.  முப்பத்தொரு ஆண்டுகள்... இருபத்து மூன்று மடங்கு அதிக விலை... ஆனாலும், இதைத்தான் நாம் இன்றும் நமது வாகனத் துறையின் தொடக்கம் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்!

இது, இந்தியா என்றோ பெற்றிருக்க வேண்டிய காரின் கதை; அதை உருவாக்கிய அந்த மனிதனின் கதை; அதைச் சுற்றித் திறந்தும் மூடியும் போன அதிகாரத்துவக் கதவுகளின் கதை; மற்றும் நாம் ஒரு நல்வாய்ப்பை மறுத்ததால் நம் தேசம் கொடுத்த விலையின் கதை.

அந்த பட்டறை மனிதர்..

1952-ல் என்ன நடந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கு முன் கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பவர் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் ஏதோ தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு இளம் கண்டுபிடிப்பாளர் அல்ல. அவர் ஒரு 59 வயது தொழிலதிபர். அன்றைய பல அரசு அமைச்சகங்கள் எல்லாம் சேர்ந்து செய்ததை விட, இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பிற்காகத் தனி ஒரு மனிதனாக அவர் அதிகமாகச் சாதித்திருந்தார்.

1920-களில்: மெட்ராஸ் மாகாணத்தின் மிக ஆரம்பகால மோட்டார் போக்குவரத்து வணிகங்களில் ஒன்றான 'யுனைடெட் மோட்டார் சர்வீஸ்' நிறுவனத்தைத் தொடங்கினார்.

1937-ல்: இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மின்சார மோட்டாரை  உருவாக்கினார்.

மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு: மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் விசிறியை  அறிமுகப்படுத்தினார்.

UMS ரேடியோ: ரேடியோ பெட்டிகள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலத்தில், கோயம்புத்தூரிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோக்களைக் கொண்டு வந்தார்.

வாக்குப்பதிவு இயந்திரம்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி நாடே விவாதிப்பதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பே, ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்துச் செய்து காட்டினார்.

"ரசண்ட்" ஷேவிங் ரேசூர்: கையாலேயே நேர்த்தியாகச் செய்யப்பட்ட இந்த பிளேடிற்காக ஜெர்மனியின் லீப்ஜிக் வர்த்தகக் கண்காட்சியில்  அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், அப்போது அவரது சொந்த நாடே அவரை மதிக்கக் கற்றிருக்கவில்லை.

அந்த கார்..

1952-ல் நாயுடுவின் பட்டறையிலிருந்து வெளிவந்த கார் ஒரு ஆடம்பர வாகனமோ அல்லது அந்தஸ்தைக் காட்டும் ஒரு பொருளோ அல்ல. அது மிகக் குறைந்த செலவில் இயங்கும் ஒரு சிறிய இரண்டு இருக்கை பெட்ரோல் கார். ஆரம்பத்திலிருந்தே அது ஒரு நடுத்தர இந்திய நுகர்வோரைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டது. அதாவது, 1952-ல் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட காரின் ஸ்டீயரிங்கைப் பிடித்து அமர்ந்திராத ஒரு சாதாரண மனிதனுக்காக அது செய்யப்பட்டது.  அதன் தொழில்நுட்ப அமைப்பு மிகவும் எளிமையானது மற்றும் நடைமுறைக்கு ஏற்றது.

வடிவமைப்பு: ஒரு சிறிய பெட்ரோல் எஞ்சினைக் கொண்டு எளிதாக இயக்கும் அளவுக்குக் குறைந்த எடை கொண்டது. ஒரு இளம் பட்டதாரி அல்லது ஒரு சிறு தொழிலதிபர் வாங்கும் அளவுக்குச் சிக்கனமானது.

சேசிஸ் மற்றும் பாகங்கள்: சேசிஸ் முழுக்க முழுக்க அவரது பட்டறையிலேயே செய்யப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக நாயுடுவின் பொறியாளர்கள் அவரது மோட்டார் மற்றும் இயந்திரப் பட்டறைகளில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு மற்ற பாகங்கள் வடிவமைக்கப்பட்டன.

மாடுலர் கட்டமைப்பு : காரின் பாகங்களை முழு காரையும் பிரிக்காமல், எளிதாக மாற்றவோ, பழுதுபார்க்கவோ அல்லது மேம்படுத்தவோ முடியும்.

1952-ல் நம் நாட்டுச் சாலைகள் இன்று நாம் சாலை என்று அழைக்கும் தகுதியில் கூட இல்லாத ஒரு காலம். அப்படிப்பட்ட கரடுமுரடான சாலைகளுக்கு இந்த வடிவமைப்பு ஒரு சிறந்த பொறியியல் சான்றாக அமைந்ததே தவிர, செலவைக் குறைப்பதற்கான சமரசம் அல்ல.

காரை முடக்கிய 'தொழில் உரிமம்'..

சுதந்திரத்திற்குப் பிறகு வந்த 'தொழில்துறை சட்டம் 1951' ன் படி, கார் தயாரிக்க மத்திய அரசின் உரிமம் கட்டாயமயமாக்கப்பட்டது. இந்த சட்டம், கார் தயாரிக்கும் உரிமை இந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ் போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்களின் குழுவில் இல்லாததால், அவர் விண்ணப்பித்த உற்பத்தி வராமல் போனது. அதன் முன்மாதிரி கார் ஒரு முறை ஒரு மூலையில் முடக்கப்பட்டது. இந்தியா பெற வேண்டிய ஒரு வரலாற்றுப் புரட்சி, தமிழ்நாட்டின் அறியப்படாத ஒரு கதையாகவே சுருங்கிப்போனது.

ஒருவேளை நடந்திருந்தால்? — இந்தியா எப்படி மாறியிருக்கும்?

"ஒருவேளை அப்படி நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்?" என்று யோசிப்பதை வெறும் கற்பனை அல்லது பத்திரிகையாளர்களின் பொழுதுபோக்கு என்று எளிதாகப் புறந்தள்ளிவிடலாம். ஏனென்றால், வரலாறு என்பது 'என்ன நடந்திருக்கலாம்' என்பதைப் பற்றியது அல்ல, 'என்ன நடந்தது' என்பதைப் பற்றியதுதான். ஆனால், அன்று மறுக்கப்பட்ட ஒரு வாய்ப்பிற்கும், அதற்குப் பல ஆண்டுகள் கழித்து நமக்குக் கிடைத்ததற்கும் இடையே இருக்கும் இடைவெளி இவ்வளவு பெரியதாக இருக்கும்போது, அந்த மாற்று வரலாற்றை யோசிப்பது வெறும் கற்பனை அல்ல; நாம் இழந்தவற்றின் மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிடும் ஒரு வழி.

1952-ல் அந்தத் தொழில் உரிமம் ஜி.டி. நாயுடுவுக்குக் கிடைத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.

ஜி.டி. நாயுடுவின் கார் உரிமம் 1952-ல் மறுக்கப்பட்டிருக்காவிட்டால், 1950-களிலேயே இந்தியாவில் சொந்த கார் தயாரிப்புத் தொழில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு மலர்ந்திருக்கும். இது மாருதி 800 வருவதற்கு முன்பே மலிவு விலை இந்தியக் கார்களை உருவாக்கியிருக்கும், ஆனால் இந்த 30 ஆண்டு முன்னுரிமை மறுக்கப்பட்டு இந்தியா பின்தங்கியது.

1952-ல் அனுமதி கிடைத்திருந்தால், நாயுடுவின் கார்கள் 50-களிலேயே உற்பத்தியாகி, இந்தியப் பொறியியல் மற்றும் வாகன வடிவமைப்புத் துறையை மேம்படுத்தியிருக்கும். இது 1980-களுக்குள் சிறிய கார்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியாவை உயர்த்தியிருக்கும், ஆனால் உரிமம் மறுக்கப்பட்டதால் ஒரு தலைமுறை பொறியாளர்கள் தாமதமாகவே உருவானார்கள்.

மாருதி 1983-ல் வந்தது. நாயுடு 1952-லேயே தயாராக இருந்தார். நாம் முப்பத்தொரு ஆண்டுகளை இழந்தோம்.  1952 லேயே ஜி.டி. நாயுடு கார் தயாரித்திருந்தாலும், மாருதி கார் 1983 ல் வந்ததால் 31 ஆண்டுகள் தாமதமானது, ' தொழில்மயமாக்கலை இழந்ததற்கான செலவு' என பொருளாதார வல்லுநர்களால் கருதப்படுகிறது. இந்தத் தாமதத்தால் இந்தியா இழந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பத் திறமைகள் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவை மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும், இதன் விளைவாக இன்றும் வாகனத் துறைக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை நீடிக்கிறது.

ஜெர்மனி அத்தியாயம்..

இந்தக் கதையிலேயே நம் நெஞ்சை அதிகம் வலிக்கச் செய்யும் பகுதி இதுதான். இந்திய அரசு ஜி.டி. நாயுடுவுக்கு அனுமதி மறுத்துக் கொண்டிருந்த நேரத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களை உருவாக்கிய ஜெர்மனி நாட்டின் பொறியியல் உலகம் அவரை உன்னிப்பாகக் கவனித்து வந்தது. ஏற்கனவே அவரது 'ரசண்ட் பிளேடு' ஐரோப்பியக் கண்காட்சியில் பாராட்டைப் பெற்றிருந்ததால், ஜெர்மனியில் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது.

அக்காலகட்டத்தில், புகழ்பெற்ற 'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம் ஜி.டி. நாயுடுவுடன் இணைந்து கோயம்புத்தூரிலேயே ஒரு கார் உற்பத்தி ஆலையை அமைக்கத் தீவிர ஆர்வம் காட்டியதாகத் தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் ஒரு செய்தி உண்டு. ஜெர்மன் பொறியாளர்கள் அவரது பட்டறைக்கு நேரில் வந்து, அவரது உழைப்பையும் சிக்கனமான வடிவமைப்பையும் பார்த்து வியந்து, தங்களுக்கு ஏற்ற பார்ட்னர் இவர்தான் என்று நம்பினர்.

ஆனால், இந்த முயற்சியும் கார் உரிமக் கதையைப் போலவே அதே வேதனையான முடிவைத்தான் சந்தித்தது. நாயுடுவுக்குச் சொந்தமாகக் கார் தயாரிக்க அனுமதி மறுத்த 1950-களின் அதே இந்திய அரசின் கடுமையான கட்டுப்பாடுகள், இந்த ஜெர்மன் கூட்டு ஒப்பந்தத்திற்கும் முட்டுக்கட்டையாக அமைந்தன.  நவீன காரைக் கண்டுபிடித்த ஜெர்மனி தேசம் ஜி.டி. நாயுடுவைத் தங்களுக்கு இணையாக மதித்து பார்ட்னராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது. ஆனால், நாயுடு பிறந்து உழைத்த சொந்த நாடோ அவருக்கு ஒரு கார் தயாரிப்பதற்கான உரிமத்தைக் கூட வழங்கவில்லை. இந்த முரண்பாடுதான் இந்த ஒட்டுமொத்த கதையின் மிகப்பெரிய சோகம்!

ஸ்டட்கார்ட் கோயம்புத்தூருக்கு வரத் தயாராக இருந்தது. புது தில்லி தயாராக இல்லை.

இது இப்போது ஏன் முக்கியம்?

இந்தக் கதையை நாம் வெறும் ஒரு சோகக் கதையாக மட்டும் பார்க்கக் கூடாது; இது நமக்கான ஒரு எச்சரிக்கை. சுதந்திரம் கிடைத்து முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும், இன்று நாம் 'மேக் இன் இந்தியா' என்று முழங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், புதிய கண்டுபிடிப்புகளுக்கு முட்டுக்கட்டை போடும் அதே பழைய அரசு அதிகாரத்துவ மனப்பான்மை இன்றும் ஏதோ ஒரு வடிவில் நம்மிடம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.  ஜி.டி. நாயுடுவின் கார் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவென்றால்—ஒரு புதிய கண்டுபிடிப்பின் கோப்பு அரசு அதிகாரி ஒருவரின் மேசைக்கு வரும்போது, அதைத் தாமதப்படுத்துவதன் மூலம் அந்த அதிகாரி இந்த நாட்டின் ஒரு தலைமுறை வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்பதுதான். அவர்கள் தங்களின் கடமையைச் செய்வதாக நினைத்துக் கொண்டு எடுக்கும் முடிவுகள், தேசத்தின் பல ஆண்டுகால உழைப்பை வீணடித்துவிடுகிறது.

ஜி.டி. நாயுடுவிடம் ஒரு பட்டறை இருந்தது, ஓடக்கூடிய ஒரு கார் மாதிரி இருந்தது, மக்களுக்கான மலிவு விலை இருந்தது, அதை உலகத் தரம் வாய்ந்த ஜெர்மனி நிறுவனமே பாராட்டியது. ஒரு இளம் தேசத்திற்குத் தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருந்தன; அவரிடம் இல்லாதது எல்லாம் அந்த அரசுப் படிவத்தில் இட வேண்டிய ஒரே ஒரு அதிகாரப்பூர்வ கையெழுத்து மட்டும்தான்!

இன்று மிச்சமிருப்பது என்ன?

ஜி.டி. நாயுடு மறைந்து அரை நூற்றாண்டுக்குப் பிறகு, பாடப்புத்தகங்கள் சொல்லத் தவறிய இந்த வரலாற்றுச் சோகத்தை ஒரு திரைப்படத்தின் மூலமாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் இப்போது நடந்து வருகின்றன. ஒரு திரைப்படம் நாட்டின் கொள்கைகளை மாற்றிவிடாது என்றாலும், நாம் எதை இழந்தோம் என்பதை ஒரு பெரிய திரையில் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அது உணர்த்தும்.

இனி நீங்கள் கோயம்புத்தூர் சாலைகளிலோ அல்லது ஷோரூம்களிலோ புத்தம் புதிய இந்தியக் கார்களைப் பார்க்கும்போது, அதன் நீண்ட பரம்பரைத் தொடக்கம் 1952-ல் ஒரு சிறிய பட்டறையில் உருவானது என்பதை நினைவுகூருங்கள். அதேபோல, அடுத்த முறை ஏதேனும் ஒரு புதிய இந்தியக் கண்டுபிடிப்புக்கான விண்ணப்பம் அரசு கோப்புகளில் சிக்கித் தவிக்கும் போதெல்லாம்—அந்த இரண்டாயிர ரூபாய் காரையும், இந்தியாவிற்கு வரத் தயாராக இருந்த ஜெர்மன் பொறியாளர்களையும், நாம் இழந்த முப்பத்தொரு ஆண்டுகளையும் இந்தத் தேசம் நினைத்துப் பார்க்க வேண்டும்!

ஜி.டி.என். திரைப்படம்

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையும் சாதனைகளும் ‘ஜி.டி.என்.’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது.  ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு... https://events-dailythanthi.com/gdn/

ஒரு தேசத்தையே வரவேற்ற தொழிற்கூடம்: ஜி.டி.நாயுடுவின் வரலாற்றுச்சுவடுகள்!
கோயம்புத்தூரில் உள்ள ‘ஜி.டி.நாயுடு அறக்கட்டளை’ அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பழைய பார்வையாளர்கள் புத்தகம், இந்திய வரலாற்றின் மிக முக்கிய ஆளுமைகள் பலரின் கையெழுத்துகளைத் தாங்கி ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் பொறியாளர்களின் கையெழுத்துகளுக்கு இடையே, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்த மாபெரும் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சான்றுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு, ஜி.டி.நாயுடுவின் தொழிற்கூடத்திற்கு வருகை தந்து, அவரது உள்நாட்டுத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பாராட்டிய முக்கியப் பிரபலங்களை பற்றி காணலாம்.

அறிவியல் அறிஞர்களின் பார்வையில் ஜி.டி.நாயுடு:

சர் சி.வி.ராமன்:

இந்தியாவின் முதல் அறிவியல் நோபல் பரிசு பெற்றவரான சர் சி.வி.ராமன், 1933-1937 காலகட்டத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநராக இருந்தபோது கோவைக்கு நேரில் வந்து ஜி.டி.நாயுடுவைச் சந்தித்துள்ளார். முறையான கல்விப் பின்னணி இல்லாத நிலையிலும், ஜி.டி.நாயுடுவிடம் இருந்த அசாத்தியமான உற்றுநோக்கல் மற்றும் செய்முறைத் திறனைக் கண்டு வியந்த சி.வி.ராமன், அவரை "A man in a million" என்று மனதாரப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான முதன்மை ஆதாரங்களை ராமன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அறக்கட்டளைக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சர் எம்.விஸ்வேஸ்வரய்யா:

மைசூர் சமஸ்தானத்தின் திவானும், நவீன மைசூரின் சிற்பியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ஜி.டி.நாயுடுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வரைபடங்களை விடவும் நேரடியாகக் கட்டமைக்கப்படும் உள்கட்டமைப்புகளையே மதிக்கும் விஸ்வேஸ்வரய்யா, நாயுடுவின் மோட்டார்கள், மின்விசிறிகள், ரேடியோக்கள் மற்றும் கார்களின் துல்லியத் தன்மையைக் கண்டு அவரைத் தனது சமகாலப் பொறியாளராக ஏற்றுக்கொண்டு பாராட்டினார்.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்:

இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மைச் சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், கோயம்புத்தூரில் உள்ள ஜி.டி.நாயுடுவின் தொழிற்கூடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், ஜி.டி.நாயுடுவை ஒரு "உண்மையான பொறியியல் மற்றும் தொழில் துறை மேதை" என்றும், இந்திய உழைக்கும் வர்க்கத்திலிருந்து உருவான ஒரு "பிராமணர் அல்லாத மேதை" என்றும் நேரடியாகக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். இக்கடிதத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பெருந்தலைவர் காமராஜர்:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான காமராஜர், ஜி.டி.நாயுடுவின் நிறுவனத்திற்குத் தொடர்ந்து வருகை தந்து அவரது பணிகளை ஊக்குவித்தவர். கல்வி மற்றும் தொழில்துறையில் இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பங்களைச் சாராமல், சாதாரண உழைக்கும் மக்களிடம் நாட்டின் அதிகாரமும் தொழில்நுட்பமும் செல்ல வேண்டும் என்ற காமராஜரின் சிந்தனைக்கு ஜி.டி.நாயுடுவின் செயல்பாடுகள் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தன.

பேரறிஞர் அண்ணாதுரை:

திமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான சி.என்.அண்ணாதுரை, ஜி.டி.நாயுடுவை தமிழ்நாட்டின் பொறியியல் மனசாட்சியாகக் கருதினார். திராவிடப் பெருமையையும், தமிழ் அடையாளத்தையும் மீட்டெடுக்கப் போராடிய அண்ணாதுரை, இரும்பு மற்றும் லேத் இயந்திரங்கள் வழியே உலக அளவில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஒரு மெக்கானிக்காக ஜி.டி.நாயுடுவைப் போற்றினார். அரசியல் ரீதியாக மாறுபட்ட காமராஜர் மற்றும் அண்ணாதுரை ஆகிய இருவருமே ஜி.டி.நாயுடுவின் தொழிற்திறனை ஒருமித்த குரலில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி மற்றும் பிரதமர் இந்திரா காந்தி:

தொழிற்சங்கத் தலைவராக இருந்து இந்தியாவின் 4-வது குடியரசுத் தலைவராக உயர்ந்த வி.வி.கிரி, தொழிலாளர்களைத் கண்ணியத்துடன் நடத்திய தொழில் அதிபரான ஜி.டி.நாயுடுவை மிகவும் மதித்தார். அதேபோல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்திலும் ஜி.டி.நாயுடுவின் சாதனைகள் மத்திய அமைச்சகங்களின் கவனத்திற்குச் சென்றன. 1967-ல் இவருக்கு இந்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது.

நாட்டின் அறிவியல், அரசியல் சாசனம் மற்றும் அரசியல் துறையின் மிக உயர்ந்த தலைவர்கள் அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு சாதாரணத் தொழிற்கூடத்திற்குத் தேடி வந்து பாராட்டியதே ஜி.டி.நாயுடுவுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை கோவையில் உள்ள 'ஜி.டி.நாயுடு தொழில்முறைக் கண்காட்சியில்' இன்றும் மக்கள் காணலாம். மேலும், அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகளைத் தழுவி, வருகிற ஜூலை மாதத்தில் ஒரு புதிய திரைப்படம் வெளியாக உள்ளதால், இந்த வரலாற்றுப் பக்கங்கள் உலக அரங்கிற்கு மீண்டும் வரவுள்ளன.

ஜி.டி.என். திரைப்படம்

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையும் சாதனைகளும் ‘ஜி.டி.என்.’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது.  ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு... https://events-dailythanthi.com/gdn/

முதுமையான தோற்றம் ஏற்படுகிறதா..? இந்த உணவுகளை குறைப்பது நல்லது
வயது அதிகமாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயல்பானதுதான். ஆனால் இளம் வயதிலேயே பலரும் முதிய தோற்றத்திற்கு ஆளாகிறார்கள். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு விரைவில் முதுமையான தோற்றம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதற்கு உணவுப்பழக்கமும் ஒருவகையில் காரணமாக அமைகிறது. ஏனெனில் நீர்ச்சத்து குறையும்போது சருமம் வேகமாக பொலிவிழந்து வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கிவிடுகிறது. அதற்கு காரணமாகும் உணவுப்பொருட்கள் பற்றியும், அவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பார்ப்போம்.

1. சர்க்கரை பானங்கள்- இனிப்புகள்

அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பொருட்கள் கொலாஜனை கடினமாக்கி சரும சுருக்கங்களை விரைவுபடுத்த துணை புரியும். சர்க்கரை பானங்களை பொறுத்தவரை சர்க்கரையுடன் அதிக கலோரிக ளையும் கொண்டிருக்கும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த சர்க்கரையை அமிலங்களாக சிதைக்கும். அந்த அமிலங்கள் பற்களின் எனாமலை பாதிப்படைய செய்து வயதானவர் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும்.

2. பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள் ஆரோக்கியமானவை. இவை உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கினாலும், அவற்றின் தாக்கம் ஒவ்வொருவரின் உடலமைப்புக்கு ஏற்ப மாறுபடும். அளவுக்கு அதிகமான பால் மற்றும் பால் பொருட்கள் சிலருக்கு பருக்கள் அல்லது அரிப்பு  போன்ற பிரச்சனைகளைத் தூண்டலாம். கொழுப்பு நிறைந்த வெண்ணெய், சீஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே, பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் குறைவாக உள்ள உணவுமுறை, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாக்கும்.

3. அதிக வெப்பத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி உணவுகள்

கிரில், வறுத்தல், சுடுதல் என அதிக வெப்பத்தில் தயார் செய்யப்படும் இறைச்சி வகைகளை உட்கொள்வது சருமத்திற்கு பாதகமாகவே அமையும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை அதிக வெப்பத்தில் வறுத்தோ, சுட்டெடுத்தோ உட்கொள்வது மேம்பட்ட கிளைசேஷனை உற்பத்தி செய்யும். இந்த சேர்மங்கள் ஆன்டிஆக்சிடென்ட் அழுத்தத்தை ஊக்குவித்து, சருமத்தை பொலிவிழக்க செய்து அதன் நெகிழ்வுத்தன்மையையும் குறைக்கும். இதனால் சருமம் விரைவில் வயதான தோற்றப் பொலிவுக்கு மாறும். இதனை தவிர்க்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவிடும் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

4. சுத்திகரிக்கப்பட்ட மாவு

மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களில் முழு தானியங்களில் காணப்படுவது போல் நார்ச்சத்தோ, ஊட்டச்சத்துக்களோ போதிய அளவில் இருப்பதில்லை. இவை இன்சுலின் அளவை வேகமாக உயர்த்தி உடல் முழுவதும் அழற்சியை உண்டாக்கி, சருமம் விரைவில் முதிர்வுத்தன்மைக்கு மாற வழிவகை செய்கின்றன.

5. அரிசி பிஸ்கெட், கேக்குகள்

அரிசியில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட், கேக்குகள் சிறந்த சிற்றுண்டிகளாக கருதப்பட்டாலும் அவை அதிக கிளைசெமிக் குறியீடுகளை கொண்டுள்ளன. அதனால் குளுக்கோஸை திடீரென அதிகரிக்க செய்துவிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் வேகமாக உயர்த்தக்கூடும். மேலும் சருமத்தில் எண்ணெய் பசைத்தன்மையை சீரற்றதாக்கி, சருமத்தை மந்தமான தன்மைக்கு மாற்றிவிடும். சருமத்தின் பொலிவையும் குறைய செய்து விடும். இதனை தவிர்க்க புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட குறைந்த கிளைசெமிக் குறியீடுகளுடைய முழு தானியங்களை உட்கொள்ளலாம்.

ஜி.டி. நாயுடுவும் ரோல்ஸ் ராய்ஸ் காரும்- இப்படியொரு சம்பவம் இருக்கா?
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின்  வாழ்க்கையில் பல்வேறு சிறப்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால், அவருக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது பலருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு தான்.

அந்தக் காலகட்டத்தில் (பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்) இந்த ஆடம்பர வாகனத்தை இந்தியாவில் ஒரே ஒருவராக அவர் மட்டுமே சொந்தமாக வைத்திருந்தார்.

ஜி.டி. நாயுடு 1893ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வி மட்டுமே பெற்ற அவர், சுயமாக பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை செய்து ‘மிராக்கிள் மேன்’ என்று அழைக்கப்பட்டார்.

பரிசாக கிடைத்த ரோல்ஸ் ராய்ஸ் கார்

இந்தியாவில் முதன்முதலாக மின்சார மோட்டாரை உற்பத்தி செய்தவர் ஜி.டி. நாயுடு. ஆட்டோமொபைல் துறையில் முன்னோடியாக திகழ்ந்த அவர், யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ் (UMS) என்ற நிறுவனத்தை தொடங்கி, இந்தியாவின் மிகப்பெரிய பொது போக்குவரத்து வாகன சேவையை வெற்றிகரமாக நடத்தினார்.

அவரது அசாதாரண சாதனைகள், தொழில் வளர்ச்சி மற்றும் திறமையால் ஈர்க்கப்பட்ட சிலர், அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்தனர். அந்த காலத்தில் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற ஆடம்பர கார்கள் இந்திய அரசர்கள், பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் மற்றும் மிகவும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானவை. ஆனால் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த ஜி.டி. நாயுடு அதை வைத்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தொழில்முனைவோருக்கு உத்வேகம்

1944ஆம் ஆண்டில் தனது ஆட்டோமொபைல் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பல தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இன்றளவும் ஜீடீ கார் மியூசியத்தில் (Gedee Car Museum) பல விண்டேஜ் கார்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது அவரது வாகன ஆர்வத்தையும், தொழில் மரபையும் பிரதிபலிக்கிறது.

ஜி.டி. நாயுடுவின் பங்களிப்புகள் கோயம்புத்தூரை தென்னிந்தியாவின் முக்கிய தொழில்துறை மையமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தன. அவரது நினைவு இன்றும் பல இளம் தொழில்முனைவோருக்கு உத்வேகமாக திகழ்கிறது.

இந்த வரலாற்று உண்மை, ஜி.டி. நாயுடுவின் அசாதாரண வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குகிறது.

அவரது சாதனைகள் இன்றும் நினைவுகூரப்படுகின்றன!

ஜி.டி.என். திரைப்படம்

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையும் சாதனைகளும் ‘ஜி.டி.என்.’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு... https://events-dailythanthi.com/gdn/

பூரி ரத யாத்திரையை காண செல்கிறீர்களா..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை வரும் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அலங்கரிக்கப்பட்ட புதிய தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி யாத்திரையை தொடங்குவார்கள். தேர்கள் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை (குந்திச்சா கோவில்) சென்றடைந்ததும் அங்கு ஒரு வார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் ரத யாத்திரை நிறைவுபெறும்.

ரத யாத்திரையைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் ஒன்றுகூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த வைபவத்தை காண பூரி நகருக்கு அதிக அளவில் வருகை தருவார்கள்.

எனவே, பூரி ரத யாத்திரையில் பங்கேற்பதற்காக புறப்படும் பக்தர்கள், அங்குள்ள வசதி வாய்ப்புகளை அறிந்து அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுவது நல்லது. பக்தர்கள் பயணத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை பார்ப்போம்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒடிசா அரசாங்கம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரிக்கு வருகை தரும் பக்தர்கள், அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

கோவில் நுழைவு விதிமுறை

இந்துக்கள் அல்லாதவர்கள் ஜெகநாதர் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை. இருப்பினும், அனைவரும் ரத யாத்திரையை கண்டுகளிக்கலாம், பிரமாண்ட ரத யாத்திரையின்போது ரதங்களை இழுப்பதிலும் பங்கேற்க முடியும்.

வெயிலுக்கு ஏற்ற உடை

பூரி நகரில் இந்த மாதத்தில் பொதுவாக வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, ரத யாத்திரையின்போது நாள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் வசதிக்காக மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. மேலும், வெயில் அதிகமாகும்போது நீரிழப்பு ஏற்படும் என்பதால், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். எனவே, கையில் குடிநீர் வைத்திருப்பது அவசியம்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

கோவிலை சுற்றி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், பெல்ட்கள், பர்சுகள் மற்றும் பைகள் போன்ற தோல் பொருட்களையும், செல்போன்கள், கேமராக்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.

போக்குவரத்து மாற்றம்

பாதுகாப்பு கருதி, ரத யாத்திரையின்போது ரதங்கள் செல்லக்கூடிய பிரதான சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும். எனவே, பக்தர்கள் தங்கள் வாகனங்களை, ஆங்காங்கே உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப, நகரம் முழுவதும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

பூரி ஜெகநாதர்

உணவு

பூரி கோவிலின் புகழ்பெற்ற 'மகா பிரசாதம்' பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். மகாபிரசாதத்தைத் தவிர, டால்மா (Dalma), பாரா குக்னி (Bara Ghugni), சென்ன போடா (Chhena Poda) மற்றும் காஜா (Khaja) உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய ஒடியா உணவுகளும், உள்ளூர் டிபன்களும் பக்தர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தெருவோர உணவகங்கள் முதல் பெரிய உணவகங்களில் உணவருந்தலாம்.

தங்கும் வசதிகள்

ரத யாத்திரையை காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால், பெரும்பாலும் பூரியில் உள்ள ஓட்டல் அறைகள் மற்றும் தங்கும் விடுதிகள் விரைவாக முன்பதிவு செய்யப்பட்டுவிடும். எனவே, பூரி செல்வதாக இருந்தால் தங்குமிடத்தை முடிந்தவரை முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்வது நல்லது.

கோவிலை ஒட்டிய பகுதிகளில் குறைந்த கட்டணத்தில் அறைகள் உள்ள ஓட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன.  தர்மசாலைகளும் உள்ளன. சற்று வசதியான தங்குமிடத்தை விரும்பும் பக்தர்கள், கடற்கரையோரம் உள்ள ஓட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்யலாம்.

போக்குவரத்து வசதி

பூரி ரெயில் நிலையத்திற்கு நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, ரத யாத்திரைக்கு செல்பவர்கள் ரெயிலில் பயணம் செய்வது மிகவும் வசதியாக இருக்கும். சாலை வழியாக செல்ல நினைப்பவர்கள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற இணைப்பு நெடுஞ்சாலைகள் மூலம் பூரியை அடையலாம்.

பூரிக்கு விமானத்தில் செல்பவர்கள், பூரியில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் புவனேஷ்வரில் அமைந்துள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் சென்று, அங்கிருந்து ப்ரீ-பெய்ட் டாக்ஸி மூலமாகவோ அல்லது பேருந்து மூலமாகவோ பூரியை அடையலாம்.

ஆரோக்கியத்தை கெடுக்கும் அன்றாட பழக்கங்கள் என்னென்ன தெரியுமா?
வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு, அன்றாட வாழ்வில் ஒருசில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. இந்த பழக்கவழக்கங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை தக்கவைக்கும்.

ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பெரும்பாலானோர் தங்களை அறியாமலேயே ஆரோக்கியத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். இத்தகைய பழக்கவழக்கங்களையும், அவை உடல்நலனில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளையும் பார்ப்போம்.

இறுதி கட்டத்தை எட்டிய 'தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்' இன்று நடக்கும் முக்கிய நிகழ்வு
கோவை,

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக ஜி.டி. நாயுடு குழுமமும், தினத்தந்தி குழுமமும் இணைந்து நடத்தும் 'தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்' மாநில அளவிலான புத்தாக்கப் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி வரை பதிவு நடைபெற்று, தமிழகம் முழுவதும் உள்ள 165 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து 779 புத்தாக்கத் திட்டங்கள் (Projects) பெறப்பட்டன.இதில் முதல் கட்டத் தேர்வில் தகுதி பெற்ற 36 அணிகள், ஜூலை 2-ஆம் தேதி கோவையில் உள்ள ஜி.டி. அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பங்கேற்றன. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற திட்ட விளக்கங்கள் மற்றும் மதிப்பீட்டுக்குப் பிறகு, மூன்று பேர் கொண்ட நடுவர் குழு 12 அணிகளை இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்தது.

12 அணிகள்

இறுதிப்போட்டி இன்று (ஜூலை 3) நடைபெற்று வருகிறது. இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன் சிறப்பு நடுவராக இணைந்துள்ளார். இறுதிப்போட்டிக்குத் தேர்வான 12 அணிகளின் புத்தாக்கத் திட்டங்களை மதிப்பீடு செய்து, சிறந்த 5 அணிகளைத் தேர்வு செய்ய உள்ளார்.

ஆவலுடன் இருக்கிறேன்

போட்டி குறித்து டாக்டர் நம்பி நாராயணன் கூறுகையில், "இதுபோன்ற போட்டிகள் மாணவர்களை நடைமுறை சிந்தனைக்கு வழிநடத்துவதோடு, சமூகத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கின்றன. மாணவர்கள் உருவாக்கியுள்ள புத்தாக்க யோசனைகளை நேரில் காணவும், அவற்றை மதிப்பீடு செய்யவும் ஆவலுடன் இருக்கிறேன்" என்றார்.

வெற்றியாளர்கள் நாளை அறிவிப்பு

நடுவர் குழுவில் டாக்டர் நம்பி நாராயணன் இடம்பெற்றது போட்டியில் பங்கேற்ற மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை நேரில் சந்தித்து, தங்களது திட்டங்களை விளக்குவதில் பெருமிதம் அடைவதாகவும், தங்களது புத்தாக்கங்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.இந்தப் போட்டியில் தேர்வாகும் சிறந்த 5 அணிகள் இன்று இரவு அறிவிக்கப்பட உள்ளன. அவர்களுக்கான இறுதி தரவரிசை மற்றும் பரிசு வெற்றியாளர்கள் நாளை (ஜூலை 4) நடைபெறும் ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்படவுள்ளனர். அந்த விழாவில் திரைப்படத்தின் நாயகன் நடிகர் ஆர். மாதவன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையை வழங்க உள்ளார்.

இன்று பிளாஸ்டிக் பை இல்லா தினம்...! தடை விதித்தாலும் தலைதூக்கும் விற்பனை
ஜூலை 3... இன்று ‘சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், நாகரீக உலகில் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்டது. விலை மலிவு, எளிமையான பயன்பாடு போன்ற காரணங்களால் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மட்டுமின்றி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய டீ கப், தட்டுகள், உறிஞ்சுகுழல் என அடுக்கி கொண்டே செல்லலாம். டீ வாங்குவதில் இருந்து மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்து இடங்களிலும் இந்த பிளாஸ்டிக் தடம்பதித்து உள்ளது.

பிளாஸ்டிக் பை இல்லாத தினம்

இவ்வளவு வேகத்தில் நம்முடன் பயணிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தீமையானது என்று தெரிந்தும் தொடர்ந்து அந்த ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறோம்.

இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மட்குவதற்கு 100 முதல் 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இது பூமிக்கு நிரந்தர ஆபத்தானது.

எனவே, பிளாஸ்டிக் பைகளின் தீமைகளை உலகிற்கு உணர்த்தவும், அவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3-ந் தேதி "சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்" கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ‘பிளாஸ்டிக் பை இல்லா தினம்’ இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஒற்றைப்பயன்பாடு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், காகிதப் பைகள் மற்றும் சணல் பைகளின் பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிப்பதும் இதன் இலக்காகும்.

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் பாதிப்புகள்

குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை உணவென்று நினைத்து உண்ணும் பசுக்கள், பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. சாக்கடை கால்வாய்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் பிளாஸ்டிக் பைகள் தேங்குவதால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் வெளியாகும் நச்சுப்புகையானது மனிதர்களுக்கு புற்றுநோய் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இதில் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், உறிஞ்சு குழாய்கள், அனைத்து மைக்ரான் அளவிலான பிளாஸ்டிக் கைப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

தடையை மீறிய புழக்கம்

தடை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், தற்போது சந்தைகளில் பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. மளிகைக் கடைகள், பேக்கரிகள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி சந்தைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாக பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றுக்கு சீல் வைக்கின்றனர். டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதுதவிர பிளாஸ்டிக் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தமிழக அரசு 'மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடங்கியது.

இருப்பினும், அந்த தடை உத்தரவு காற்றில் பறந்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை முழுமையாக வெற்றிகரமாக மாற்றுவதில் அரசுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கை மட்டுமே தீர்வல்ல, பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். தயாரிப்பை நிறுத்திவிட்டால், அத்தகைய பிளாஸ்டிக் பைகளின் புழக்கமும் படிப்படியாக நின்றுபோகும்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லை என்று இந்த நாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம்!

பளபளப்பான கூந்தல் வேண்டுமா..? இந்த உணவுகள் நிச்சயம் கைகொடுக்கும்
பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல்தான். கூந்தல் அடர்த்தியாகவும், வலிமையாகவும் பளபளப்பாகவும் இருப்பதையே பெண்கள் விரும்புவார்கள். இதற்கு சத்தான உணவுகள் அவசியம் தேவை. முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள், சத்தான உணவுகளுடன் ஒரு சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம்.

பளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள்  மற்றும் அந்த ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை பார்ப்போம்.

நோய் நொடியின்றி வாழ.. கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்
வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு, அன்றாட வாழ்வியலில் ஒருசில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை தக்கவைப்பதாக அவை இருக்க வேண்டும்.

இத்தகைய நல்ல பழக்கவழக்கங்களையும், அவை ஏற்படுத்தும் மாற்றங்களையும் பார்ப்போம்.

சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:-

புழுங்கல் அரிசி - ¾ கப்

துவரம் பருப்பு - ½ கப்

தண்ணீர் - தேவையான அளவு

கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 7

காஷ்மீர் மிளகாய் - 5

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்

காயப்பொடி - ¼ டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 10

கேரட் - 2

பீன்ஸ் - 10

வெள்ளரிக்காய் - பாதி

கத்தரிக்காய் - 2

முருங்கைக்காய் - 4 துண்டு

வாழைக்காய் - 1

உருளைக்கிழங்கு - 1

தக்காளி - 2

பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி

புளி - நெல்லிக்காய் அளவு

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 15

கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:-

முதலில், சாதம் தயார் செய்துகொள்ள வேண்டும். அதற்கு, புழுங்கல் அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்கு தண்ணீரில் கழுவி, அதை வடிகட்டி ஒரு குக்கரில் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 4 கப் தண்ணீரை சேர்த்து, குக்கரை மூடி கேஸ் அடுப்பில் வைத்து,  4 விசில் வரும் வரை வேகவிடவும்.

மற்றொரு புறம் மசாலா தயாரிக்க, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடாகியதும் கடலை பருப்பு, கொத்தமல்லி, மிளகு, உளுந்தம் பருப்பு, பெருஞ்சீரகம், சீரகம், காய்ந்த மிளகாய் 4, காஷ்மீர் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.

கரிந்துவிடக்கூடாது. எனவே, அடுப்பில் தீயை குறைத்துக்கொள்ளவும். அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்துக்கொள்ளவும். நன்கு வதங்கிய பிறகு, ஆறவைத்து மிக்சி ஜாரில் போட்டு பவுடராக அரைக்கவும். சாம்பார் சாதத்திற்கான மசாலா தயார். அதை தனியாக வைத்துக்கொள்ளவும்.

அடுத்து சாம்பார் சாதம் செய்த ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை சேர்க்கவும். எண்ணெய் சூடாகியதும் மஞ்சள் பொடி, காயப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிட்டு, வெட்டி வைத்த பச்சை மிளகாய், தோல் உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்து கிளறவும்.

அடுத்து வெட்டி வைத்த கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அடுத்து, அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். காய்கறி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.

காய்கறி நன்கு வெந்தவுடன் புளி தண்ணீரை சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து, நன்கு கலந்துவிடவும். அதன்பிறகு, வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டி விழாத அளவுக்கு கிளறிவிடவும். அதன்பிறகு, 5 நிமிடம் வேகவிடவும். ரொம்ப கெட்டியாகிவிடக்கூடாது. சிறிது கொள கொளப்பாக இருக்க வேண்டும்.

அதன்பிறகு தாளிக்க, ஒரு பாத்திரத்தில் நெய்யை உருக்கவும். அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். சிறிது பொன் நிறமானதும், அதை வெளியே எடுத்துவைத்துவிட்டு, அதே நெய்யில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் 3, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். அதன்பின்னர், சாம்பார் சாதத்துடன் வறுத்து வைத்த முந்திரி, தாளிப்பை சேர்க்கவும். நிறைவாக, கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறிவிடவும். சுவையான, மணமான சாம்பார் சாதம் ரெடி.

வேலை-குடும்பம் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் எளிய மாற்றங்கள் என்னென்ன பார்ப்போமா....?
இன்றைய வேகமான உலகில், அலுவலகக் கெடுபிடிகளுக்கும் குழந்தைகளின் உணர்வுப்பூர்வமான தேவைகளுக்கும் இடையே சமநிலையைப் பேணுவது என்பது பெற்றோருக்கு ஒரு பெரும் போராட்டமாகவே உள்ளது. வேலை, பள்ளி, வீட்டுப் பொறுப்புகள் என ஓடிக்கொண்டே இருப்பதால், நாள் முடிவில் அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வடைந்து விடுகிறார்கள்.

இதனால் குழந்தைகளுடன் போதிய நேரத்தைச் செலவிட முடிவதில்லை. இது தொடர்ந்தால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியை அதிகரிப்பதோடு, மன மற்றும் உடல் நலத்தையும் பாதிக்கும். இதிலிருந்து விடுபட பெரிய மாற்றங்கள் தேவையில்லை. அன்றாட வாழ்வில் செய்யும் சிறிய மாற்றங்களே போதுமானது.

பணி-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த பெற்றோர்கள் மேற் கொள்ள வேண்டிய மாற்றங்களை பார்ப்போமா..

1. பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

வீட்டின் அனைத்து வேலைகளையும் ஒருவரே சுமப்பது தேவையற்ற அழுத்தத்தையும் மனக்கசப்பையும் உருவாக்கும். இதற்குப்பதிலாக, தம்பதிகள் தங்களுக்குள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற சிறிய வேலைகளைக் கொடுப்பது பெற்றோரின் சுமையைக் குறைக்கும். குழந்தைகளை பொறுப்பு உள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் மாற்றும்.

2. குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாவிட்டாலும், தினமும் சில மணி நேரங்களாவது அவர்களுக்காக ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் பகிரப்படும் சிறிய தருணங்களே போதுமானது. காலையில் ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்பது அல்லது இரவில் தூங்கும் முன் கதை சொல்வது போன்ற எளிய விஷயங்கள் உங்கள் பிணைப்பை வலுப்படுத்தும். இது பெற்றோர்-குழந்தை இடையிலான உறவை வலுப்படுத்தும். பெற்றோர்கள் தங்கள் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று இளைப்பாற வாய்ப்பாக அமையும்.

3. 'இல்லை' என்று சொல்ல பழகுங்கள்

அலுவலகத்தில் கூடுதல் வேலைகள் அல்லது வீட்டில் நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகள் போன்றவற்றுக்கு 'சரி' என்று சொல்வது உங்களை அதிக சோர்வடைய செய்யும். அளவுக்கு அதிகமான அர்ப்பணிப்பு ஒருவரின் நல்வாழ்வையும் பாதிக்கும். எல்லைகளை நிர்ணயிப்பதும், உங்களால் முடியாத விஷயங்களுக்கு 'இல்லை' என்று சொல்ல பழகுவது மன அழுத்தத்தை தவிர்க்க உதவும்.

4. ஓய்விற்கு முன்னுரிமை

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பல பெற்றோர்கள் சோர்வையும் இடைவிடாத உழைப்பையும் ஒரு இயல்பான விஷயமாக மாற்றிக்கொள்கிறார்கள். எப்போதும் பரபரப்பாக இருப்பதையே பெருமையாக கருதாமல், போதிய ஓய்வு எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஓய்வில்லாத வாழ்க்கை பொறுமையையும், உற்பத்தி திறனையும் பாதிக்கும். நன்கு ஓய்வெடுக்கும் பெற்றோர்கள் அதிக நிதானத்துடனும், மகிழ்ச்சியுடனும் குழந்தைகளை வளர்க்க முடியும்.

இந்த மாற்றங்கள் மிகச்சரியான சமநிலையை உடனடியாக உருவாக்கிவிடாது என்றாலும், பணிச்சுமையால் தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வியல் முறையை உருவாக்க இவை நிச்சயம் உதவும். உங்கள் நல்வாழ்வே உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி என்பதை நினைவில் கொண்டு, இச்சிறு மாற்றங்களை இன்றே தொடங்குங்கள்!

அயல்நாட்டினருக்கு No... இந்தியருக்கு இலவசம் அறிவித்த ஜி.டி.நாயுடு
அரிய பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதிசயத்தை நிகழ்த்தி கோவைக்கு பெருமை தேடித்தந்தவர் ஜி.டி.நாயுடு. இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டமில்லாதவராக இருந்த அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். ஆனால் அவரின் அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு திறன் மற்றும் செயலாற்றல் திறன் பல ஆசிரியர்களுக்கு சமமாக இருந்தது.

ஆரம்பத்தில் தோட்ட வேலைக்கு சென்றார். அப்போது ஒருநாள் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அந்த காலத்து மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றார். அந்த பிரமாண்டமான மோட்டார் சைக்கிளை ஜி.டி.நாயுடு பார்த்து வியந்தார். அந்த மோட்டார் சைக்கிள் பழுதானது. அதனை ஆங்கிலேய அதிகாரி ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அங்கு சென்ற ஜி.டி.நாயுடு ஆங்கிலேய அதிகாரிக்கு கழிவு துணி மற்றும் மண்எண்ணெய் கொடுத்து உதவினார். இதனால் ஆங்கிலேய அதிகாரி அவரை வெகுவாக பாராட்டினார். அப்போது ஜி.டி.நாயுடுவுக்கு அந்த மோட்டார் சைக்கிளை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதனால் அவர் தோட்ட வேலையில் இருந்து விலகி ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதில் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு ஆங்கிலேய அதிகாரியை சந்தித்து அந்த மோட்டார் சைக்கிளை வாங்கினார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை அக்கு வேறு, ஆணி வேராக அவர் பிரித்தார். அங்குதான் அவருக்கு ஆட்டோ மொபைல் பற்றிய ஆர்வம் தொடங்கியது.

ரேடியேட்டருக்கு மாற்று சாதனம்

பின்னர் அவர் பருத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார். மும்பையிலும் தன்னுடைய பருத்தி தொழிலை விரிவுபடுத்தினார். ஆனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயரான ஸ்டேன்ஸ் துரை என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அதில் ஒரு பஸ்சை கடனாக பெற்று முதலாளியாக மட்டுமல்லாமல் தொழிலாளியாகவும் செயல்பட்டு பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு பஸ்சை இயக்கினார்.

பின்னர் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக பஸ் நிறுத்தத்துக்கு பஸ் வரும் நேரத்தையும், புறப்படும் நேரத்தையும் காட்டும் கருவியை கண்டுபிடித்தார். குறைந்த விலை காரை தயாரித்தார். அந்த காலத்திலேயே பயணச்சீட்டு வழங்குவதற்கான ஒரு எந்திரத்தையும் கண்டுபிடித்து தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். அப்போதெல்லாம் என்ஜின் சூடாகாமல் இருக்க ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றவேண்டும், மோட்டார் ரேடியேட்டருக்கு இணையாக ஒரு எந்திரத்தை கண்டுபிடித்து அந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டார்.

காப்புரிமை

முன்காலத்தில் புகைப்படத்துறையில் மிகவும் உதவிகரமாக இருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்ட்டர் என்ற புகைப்பட கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்கும் கருவி, எந்தவிதமான வெட்டுக்காயமும் இன்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என இவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

இவர் கண்டுபிடித்த பிளேடை தானே தயாரித்துக்கொள்ள விரும்பிய ஒரு அமெரிக்க நிறுவனம் அதன் காப்புரிமையை வாங்க விலை பேசியது. தாய் நாட்டிற்கே தன்னுடைய கண்டுபிடிப்புகள் பயன்படவேண்டும் என்று எண்ணிய ஜி.டி.நாயுடு, தமிழ்நாட்டிலேயே அதை தயாரிக்க முடிவெடுத்து நார்வே நாட்டிலிருந்து அதன் மூலப்பொருளை இறக்குமதி செய்ய விரும்பினார். அந்த முயற்சிகள் கை கூடாமல் போகவே காப்புரிமையும் கை நழுவிப்போனது. இவருக்கு ஆறுதலாக ஜெர்மனியில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் இவருடைய கண்டுபிடிப்பான பிளேடுக்கு பரிசு கிடைத்தது.

இந்தியர்களுக்கு இலவசம்

பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற விரும்பியும் தர மறுத்தார் ஜி.டி.நாயுடு. என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்துமே நம் தேசத்திற்குதான் பயன்பட வேண்டும், அதனால்தான் காப்புரிமை கோராமல் வைத்திருக்கிறேன். இந்தியர் யாராக இருந்தாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையும் சாதனைகளும் ‘ஜி.டி.என்.’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடிக்கிறார். 2026 ஜூலை மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு...  https://events-dailythanthi.com/gdn/

ஜி.டி. நாயுடு - அறிவியலில் ஓர் அறப் போராளி!
கண்டுபிடிப்பாளர், பொறியாளர் மற்றும் தொழிலதிபர் என பல பரிணாமங்கள் கொண்ட ஜிடி நாயுடுவின் முதன்மையான நோக்கம் சமூக சேவை.

பல அறிவியல் சாதனைகளுக்கு சொந்தக்காரர், இந்தியாவின் எடிசன் என்றெல்லாம் புகழப்பட்டாலும், அவரது பணிகள் சமூகத்தின் பயன்படும் ஒன்றாகவே இருந்துள்ளன, இருந்து வருகின்றன.

என்ன செய்தார் ஜிடி நாயுடு எனக் கேட்போருக்கு பல பதில்கள் தயாராக உள்ளன. ஆனால் ஏன் செய்தார் எனக் கேட்போருக்கு அது அவரின் சமூக அக்கறை என்ற பதிலே கிடைக்கும்.

சமூக அக்கறையே வல்லோரை நல்லோராக காலம் கடந்தும் வாழ வைக்கிறது. அந்த வகையில் ஜிடி நாயுடுவின் அழியாப்புகழ் மாலைக்கு அவரின் சமூக சேவை அணி சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது.

எலெக்ட்ரிக் ரேஸர், தமிழ் டயல் கொண்ட ரேடியோ, சுவர் கடிகாரம், ஸ்பிரிங் ஜூஸர், கிழங்கு தோல் எடுக்கும் கருவி, தானியங்கி ஒளிப்பட கருவி, ரேடியோகிராம், மின்சார பம்ப் என அவரின் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆக்கப்பூர்வமான தொழில் முன்னெடுப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, ஜிடி நாயுடு அதை எந்த நோக்கத்திற்கு மேற்கொண்டார் என்பதே முக்கியம்.

தனது கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதாலேயே, அவற்றை பதிவு செய்யாமல் வைத்திருந்தார்.

ஜி.டி.நாயுடுவின் முதன்மை நோக்கம்

அதிலும் அவர் தொழில்முனைவோராக மாறிய பின் இது தெளிவாக வெளிப்பட்டு நின்றது. லாபம் பார்க்கும் நோக்கத்தில் தொழில் தொடங்கிய தொழிலதிபர்கள் மத்தியில், ஜிடி நாயுடு மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதையே தன் முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட்டார். அதற்காக அவர் சந்தித்த தொழில் தோல்விகளை துச்சமென எண்ணி அடுத்த முயற்சி, அதற்கடுத்த முயற்சி என துவளாமல் தன் பயணத்தை தொடர்ந்தார்.

கட்டுமானப் பொருட்களை உருவாக்கிய பிரபல நிறுவனம் அதிக லாபத்திற்கு விற்றபோது, ஜிடி நாயுடு ஏழைகளுக்கான  சாணம் கலந்து உருவாக்கப்பட்ட மலிவுவிலை சிமெண்ட் கலவையை அறிமுகப்படுத்தினார்.

யுனைடெட் மோட்டார் சர்வீஸ்

இன்று கோவை தொழில் நகரமாக மாறி பலதரப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாகவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள மூலாதாரமாகவும் இருக்கிறதென்றால் அதற்கு பின்னால் ஜிடி நாயுடு என்ற தீர்க்கதரிசியின் உழைப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

கோவையில் அவர் உருவாக்கிய லட்சுமி மெஷின்ஸ், யுனைடெட் மோட்டார் சர்வீஸ் ஆகியன இன்றும் பலருக்கு பலனளித்து வருகின்றன.

அவர் தொடங்கிய போக்குவரத்து நிறுவனமான யுனைடெட் மோட்டார் சர்வீஸ் மூலம் 1938ல் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தனது பேருந்துகளை கோவை வட்டாரக் கழகத்திற்கு இலவசமாகவே வழங்கினார்.

ஜிடி நாயுடுவின் தொண்டு நிறுவனம்

ஏழை இளைஞர்களை தொழில் நிபுணர்களாக ஆக்கும் நோக்கில் 1945ல் ஜிடி நாயுடு உருவாக்கிய ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் கல்லூரி இன்று தொழில்நுட்ப கல்லூரியாக மேம்பட்டு இளம் தலைமுறையினருக்கு ஒளியூட்டிக்கொண்டிருக்கிறது.

தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் நல சங்கத்தை கட்டியெழுப்பினார் ஜிடி நாயுடு. தான் வாழ்ந்த காலத்திலேயே 1950ல்  தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் பல நற்காரியங்களை நடத்தி வந்தார். இந்நிறுவனம் இன்றளவும் அவர் கனவுகண்ட சமூக வீச்சோடு சீரிய முறையில் இயங்கி வருகிறது.

இந்த தொண்டு நிறுவனத்தின் கீழ் ஜி.டி. டெக்னிகல் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், ஜி.டி. கார் மியூசியம் மற்றும் எக்ஸ்பெரிமென்டா அறிவியல் மையம் ஆகியவை  நடத்தப்பட்டு வருகின்றன.

படித்தறிந்த மேதை

அவரை படிக்காத மேதை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் பள்ளிக்கூடம் செல்லாத மேதை என்று வேண்டுமானால் சொல்லாம். அந்த அளவுக்கு அனைத்தையும் தேடித் தேடி படித்தறிந்து அவற்றின் மூலம் சமூகத்திற்கு அழியாக் கொடைகளை அள்ளித் தந்தவர். ஜிடி நாயுடு ஓர் அறப் போராளி!

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையும் சாதனைகளும் ‘ஜி.டி.என்.’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடிக்கிறார். 2026 ஜூலை மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு... https://events-dailythanthi.com/gdn/

‘கோடியில் ஒருவன்’: ஜி.டி.நாயுடுவை பாராட்டிய சர் சி.வி.ராமன்!
ஒரு மனிதரின் சாதனையை அளவிட பல வழிகள் உள்ளன. அவர் பெற்ற விருதுகள், பதக்கங்கள், பட்டங்களை அதற்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவற்றை விட உயர்ந்த ஒரு அங்கீகாரம் இருக்கிறது. அதுதான், அந்த மனிதரை பிரபலங்களே நேரில் வந்து பார்ப்பது.

இந்தியாவின் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற ஆளுமைகள், கோவையில் இருந்த ஜி.டி. நாயுடுவின் பட்டறை, தொழிற்சாலை மற்றும் தொழில்துறை கண்காட்சியை நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். இது ஜி.டி.நாயுடுவின் திறமைக்கு கிடைத்த முக்கிய சான்றாக கருதப்படுகின்றது.

சர் சி.வி.ராமனின் பாராட்டு

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன், ஜி.டி. நாயுடுவின் பணிகளைப் பார்வையிட்டதாக பல வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அப்போது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநராக இருந்த சர் சி.வி.ராமன், ஜி.டி.நாயுடுவின் தொழில்நுட்ப திறமையையும், கண்டுபிடிப்புகளையும் நேரில் வந்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

ஜி.டி. நாயுடுவை “ஒரு கோடியில் ஒருவன்” என சர் சி.வி.ராமன் பாராட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் தொடர்ந்தாலும், ஜி.டி.நாயுடுவின் திறமையை சர் சி.வி.ராமன் உயர்வாக மதித்தது குறித்து பல்வேறு வாழ்க்கை வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஜி.டி.நாயுடுவை பாராட்டிய சர் சி.வி.ராமன்

விஸ்வேஸ்வரய்யாவின் வருகை

இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான எம்.விஸ்வேஸ்வரய்யாவும் ஜி.டி.நாயுடுவின் தொழிற்சாலை மற்றும் தொழில்துறை அமைப்புகளைப் நேரில் வந்து பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

மைசூருவின் தொழில்துறை வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்த விஸ்வேஸ்வரய்யாவுக்கும், கோவையின் தொழில்துறை கலாசாரத்தை உருவாக்கிய ஜி.டி.நாயுடுவுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் உழைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தியவர்கள்.

அந்தக் காலத்தில் இந்தியாவின் முக்கிய பொறியியல் ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய விஸ்வேஸ்வரய்யாவின் வருகை, ஜி.டி.நாயுடுவின் பணிகளுக்கு கிடைத்த மரியாதையாக பார்க்கப்படுகிறது.

அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த தொழில்துறை கண்காட்சி

ஜி.டி. நாயுடுவின் தொழில்துறை கண்காட்சி, பல ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காமராஜர் மற்றும் ராஜாஜி.

காமராஜர், கல்வி வளர்ச்சிக்காக அறியப்பட்ட தமிழகத்தின் முக்கிய தலைவராக விளங்கினார். ராஜாஜி, இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாகவும், அரசியல் சிந்தனையாளராகவும் மதிக்கப்பட்டவர்.

இவர்களுடன் பல அமைச்சர்கள், கவர்னர்கள் மற்றும் உயரதிகாரிகளும் ஜி.டி. நாயுடுவின் தொழில்துறை கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். அந்த வருகைகளின் பதிவுகள் இன்றும் பல்வேறு ஆவணங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

திரைப்படம்

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையும் சாதனைகளும் ‘ஜி.டி.என்.’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடிக்கிறார். அடுத்த  மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு... https://events-dailythanthi.com/gdn/

சண்டே ஸ்பெஷல்: சுவையான, தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:-

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

முந்திரி - ஒரு கைப்பிடி

உலர் திராட்சை - ஒரு கைப்பிடி

சேமியா - 1 கப்

தண்ணீர் - 2 கப்

சர்க்கரை - 1 கப்

உப்பு - ஒரு சிட்டிகை

கேசரி பவுடர் - சிறிதளவு

ஏலக்காய் பொடி - சிறிதளவு

செய்முறை:-

முதலில் கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும், அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றவும். நெய் உருகியதும் அதில் முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து வறுக்கவும். முந்திரி பொன் நிறமாகவும், உலர் திராட்சை உப்பிக்கொண்டு பலூன் போல் வந்தவுடன், அதை வெளியே எடுத்து வைக்கவும். பின்னர், அதே நெய்யில் சேமியாவை போட்டு பொன் நிறமாக வறுக்கவும். பிறகு அதை வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து வாய் அகன்ற மற்றொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் வறுத்து வைத்த சேமியாவை சேர்க்கவும். சேமியா நன்கு வெந்த பிறகு, சர்க்கரை சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு, உப்பை சேர்க்கவும். கெட்டியான பதத்திற்கு வரும்போது, கேசரி பவுடரை சிறிதளவு தண்ணீர் கலக்கி சேர்க்கவும்.

நன்கு கெட்டியானதும் வாசனைக்காக ஏலக்காய் பொடி, வறுத்து வைத்த முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும். நிறைவாக, ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். சுவையான, தித்திப்பான சேமியா கேசரி ரெடி.

இன்று சர்வதேச யோகா தினம்.. “ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா”
உலக அளவில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

மக்களின் தற்போதைய வாழ்க்கை முறை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நகர வாழ்க்கை மட்டுமல்ல, கிராமப்புற வாழ்க்கையும்கூட இயந்திரத்தனமாக மாறிபோய்விட்டது. இதன் விளைவு ஆரம்பத்தில் தெரிவதில்லை. நாளடைவில் இதன் தாக்கத்தை உணரத் தொடங்குகிறார்கள்.

யோகா அவசியம் ஏன்?

நெருக்கடியான வாழ்க்கை முறையால், தூக்கமின்மை, மனஅழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாலானோர் ஆளாகிறார்கள். இப்படி மன ரீதியில் ஏற்படும் பிரச்சினைகள் நாளடைவில் உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

இன்று இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவதற்கு இதுபோன்ற அசாதாரண வாழ்க்கை முறையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

உடல் ரீதியிலான பிரச்சினைக்கு மருந்துகள் பல இருக்கின்றன. ஆனால், மன ரீதியிலான பிரச்சினைக்கு இறை வழிவாடும், யோகாவும் தீர்வாக அமையும். இதில் யோகா என்பது இந்தியாவின் பழமையான கலைகளில் ஒன்று. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது.

சர்வதேச யோகா தினம் 2026

உலக அளவில் இதன் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் 12-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெளிநாடுகளில் உள்ள 210 இந்தியத் தூதரகங்கள் மற்றும் தூதரக அலுவலகங்கள் சார்பில் உலகம் முழுவதும் சுமார் 2,500 இடங்களில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பிரதான யோகா நிகழ்ச்சி, கொல்கத்தாவில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் சுமார் 30,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோகா தின கருப்பொருள்

இந்த ஆண்டின் யோகா தினத்திற்கான கருப்பொருள் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" (Yoga for Healthy Ageing) என்பதாகும். அனைத்து வயதினருக்கும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நீண்ட ஆயுள், சிறப்பான உடல் இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகா வகிக்கும் பங்கை இந்த கருப்பொருள் உணர்த்துகிறது.

உலகம் முழுவதும் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், வழக்கமான யோகா பயிற்சி எவ்வாறு ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு துணைபுரியும் என்பதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

கோவை தொழில்துறையின் அடையாளம் ஜி.டி.நாயுடு!
கோவை என்ற பெயர் இன்று தொழில்துறை வளர்ச்சியின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. ஆனால், அந்த அடையாளத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் ஜி.டி. நாயுடு.

கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர், ஆசிரியர், கனவாளி என்று பன்முகங்களை கொண்ட அவர், இந்தியா தன்னிறைவு குறித்து பேசுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அதை நடைமுறையில் செய்து காட்டியவர்.

கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு தொழில் துறை கண்காட்சியில் இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறிய பொருள், அவரது சிந்தனையின் ஆழத்தை வெளிப்படுத்தும் “ரசன்ட்” ரேசர். சாதாரணமாக இந்த ரேசர் தோன்றினாலும், “இந்தியாவில் தயாரிக்க முடியாதது எதுவுமில்லை” என்ற ஜி.டி.நாயுடுவின் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது.

1937-ல் உருவான உள்நாட்டு மின்மோட்டார்

1937-ம் ஆண்டு, தனது கோவை பட்டறையில், முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மின்மோட்டாரை ஜி.டி.நாயுடு உருவாக்கினார். அப்போது, இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ்தான் இருந்தது. தொழில்துறையில் வெளிநாட்டு ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில், இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மோட்டார் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இது வெறும் மாதிரி வடிவமைப்பு அல்ல. தொழில்துறையில் பயன்படுத்தக்கூடிய, முழுமையான பொறியியல் சாதனையாக உருவாக்கப்பட்டது.

மண்ணெண்ணெயில் இயங்கிய விசிறி

1940 மற்றும் 1950-ம் ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வசதி குறைவாக இருந்தது. இதை புரிந்துகொண்ட ஜி.டி. நாயுடு, மண்ணெண்ணெயில் இயங்கக்கூடிய விசிறியை வடிவமைத்தார்.

சாதாரண மக்களின் தேவையை உணர்ந்து உருவாக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் என்பது நகரங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ மட்டுமல்ல; மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான கருவி என்பதையும் எடுத்துக்காட்டியது.

உலகின் கவனத்தை ஈர்த்த “ரசன்ட்” ரேசர்

ஜி.டி. நாயுடுவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்றாக ரசன்ட் ரேசர் கருதப்படுகிறது. அவரின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ரேசர், தரம் மற்றும் வடிவமைப்பில் சர்வதேச தரத்தை எட்டியதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய வர்த்தக கண்காட்சிகளில் இந்த தயாரிப்பு கவனத்தை ஈர்த்தது. பின்னர் உலக அளவில் அங்கீகாரம் பெற்ற இந்த ரேசர், கோவையில் உருவானது என்பது அந்நாளில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தகவலை மக்களிடம் கொண்டு சென்ற யு.எம்.எஸ். வானொலி

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் தகவல் பரிமாற்றம் முக்கிய தேவையாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் ஜி.டி. நாயுடு தயாரித்த யு.எம்.எஸ். வானொலி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முக்கிய வானொலிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெளிநாட்டு வானொலிகளை வாங்க முடியாத குடும்பங்களுக்கு இது ஒரு மலிவான மாற்றாக அமைந்தது. தகவல் மற்றும் மக்களுக்கிடையேயான இடைவெளியை குறைப்பதில் இது முக்கிய பங்காற்றியது.

அன்றே உருவான வாக்குப்பதிவு இயந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்றைக்கு செயல்பாட்டில் இருந்தாலும் பல தசாப்தங்களுக்கு முன்பே, ஜி.டி. நாயுடு வாக்குகளை பதிவு செய்யும் ஒரு கருவியை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தார்.

அந்தக் காலத்தில் இது ஒரு புதுமையான முயற்சியாகக் கருதப்பட்டாலும், இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது தேர்தல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப சிந்தனைகளில் ஒன்றாக அது பார்க்கப்படுகிறது. அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் அந்த காலகட்டத்திலேயே யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கெனவே பிரத்யேகமாக நோட்டாவையும் அறிமுகப்படுத்தியிருந்தது தான்.

கோவையின் ஜவுளித் தொழிலுக்கு ஆதாரமாக இருந்த கருவிகள்

கோவை தொழில்துறை வளர்ச்சியில் ஜவுளித் துறை முக்கிய பங்கு வகித்தது. அந்தத் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் பல உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரக் கூறுகள் ஜி.டி. நாயுடுவின் பட்டறைகளில் உருவானவைதான்.

பெரிய தொழிற்சாலைகளின் வெற்றிக்குப் பின்னால் இருந்த சிறிய கியர்கள், போல்டுகள் மற்றும் இயந்திரப் பகுதிகளில் பல அவரது பட்டறைகளில் தயாரிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி.டி.நாயுடு

சிந்தனை ஒன்று… கண்டுபிடிப்புகள் பல..

ஜி.டி. நாயுடுவின் அனைத்து கண்டுபிடிப்புகளிலும் ஒரு பொதுவான சிந்தனை இருந்தது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை ஆராய்ந்து, அவற்றை இந்தியாவில் தயாரிக்க முடியுமா? என்பதை அவர் தொடர்ந்து சோதித்து பார்த்தார்.

அவரது நோக்கம் வெறும் தொழில் வளர்ச்சி அல்ல. “இந்தியாவில் உருவாக்க முடியும்” என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதே. அதனால்தான், ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளான மோட்டார், ரேசர் ஒன்றும் பெரிதல்ல என்று பலர் கருதுகின்றனர்.

ஜி.டி.நாயுடுவின் சிந்தனை

“ஒரு பொருளைப் பாருங்கள். அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை அறியுங்கள். பின்னர் அதை நாமே உருவாக்க முடியுமா? என்று முயற்சி செய்யுங்கள்.” அதுவே ஜி.டி.நாயுடுவின் சிந்தனை. அந்த சிந்தனையே இன்று வரை கோவையின் தொழில்துறை அடையாளமாக இருந்து வருகிறது.

ஜி.டி. நாயுடு போட்டி

ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடும் வகையில் ஜிடிஎன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், தந்தி குழுமத்துடன் (Thanthi Media) இணைந்து "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?"  என்ற பெயரில் Innovation போட்டியை நடத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் தகவல்களுக்கு..  https://events-dailythanthi.com/gdn/

காலத்தை வென்ற பாரம்பரியம்: ஜி.டி. நாயுடுவின் அழியாத தடம்
ஜி.டி,நாயுடு மறைந்து அரை நூற்றாண்டு கடந்த பின்னரும் கோயம்புத்தூர் நகரம் அவர் உருவாக்கிய சிந்தனைகள், தொழில்நுட்ப பார்வையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் எடிசன்

“இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்” என்ற சொல்லாடலுக்கு ஏற்ப பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதைவிட்டு மறையவில்லை. அவர்கள் வாழ்ந்த இடத்தின் ஒவ்வொரு கட்டிடத்திலும், தொழிற்சாலையிலும், கல்வி நிறுவனத்திலும், அடுத்த தலைமுறை மாணவர்கள் படிக்கும் ஒவ்வொரு பாடப்புத்தகப் பக்கத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அரிய மனிதர்களில் ஒருவர்தான் இந்தியாவின் “எடிசன்” என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடு.  1974ஆம் ஆண்டு ஜி.டி. நாயுடு மறைந்தார். ஆனால் அரை நூற்றாண்டு கடந்த பின்னரும் கோயம்புத்தூர் நகரம் அவர் உருவாக்கிய சிந்தனைகள், தொழில்நுட்ப பார்வை மற்றும் தொழில் கலாச்சாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி:

தென்னிந்தியாவின் முக்கியமான பொறியியல் கல்வி மையமாக கோயம்புத்தூரை உருவாக்கிய நிறுவனங்களில் மிக முக்கியமானது பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி. பி.எஸ்.ஜி. கல்விக் குழுமத்தின் வளர்ச்சிக்கும் அதன் பொறியியல் நோக்கத்திற்கும் ஜி.டி. நாயுடுவின் சிந்தனைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத ஒரு மனிதர், “ஒரு இளைஞன் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் பொறியியல்” என்று நம்பினார்.

அந்த நம்பிக்கையே ஆயிரக்கணக்கான மாணவர்களை பொறியாளர்களாக மாற்றிய கல்வி மரபை உருவாக்கியது. இன்று பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள் பி.எஸ்.ஜி. வளாகத்தின் வழியாக உலகின் பல்வேறு துறைகளில் சாதித்து வருவதற்கு ஜி.டி.நாயுடுவின் பார்வையும் காரணமாகக் கருதப்படுகிறது.

ஜி.டி.நாயுடு தொழில்துறை கண்காட்சி :

கோயம்புத்தூரில் உள்ள ஜி.டி.நாயுடு தொழில்துறை கண்காட்சி இந்தியாவின் மிகவும் தனித்துவமான பொது அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழ்கிறது. இது வெறும் அருங்காட்சியகம் அல்ல, கண்டுபிடிப்புகளின் வரலாறு, தனிப்பட்ட ஆவணங்கள், சிக்கனமான பொறியியல் சிந்தனைகளின் தொகுப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமாக உள்ளது.

அங்கு ஜி.டி. நாயுடுவின் புகழ்பெற்ற “ரசன்ட்” சேவிங் ரேசர், 1937ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மின்மோட்டார், மண்ணெண்ணெய் விசிறி, வாக்குப்பதிவு இயந்திரம், ஜவுளித் தொழிலுக்கான கருவிகள் உள்ளிட்ட பல அரிய கண்டுபிடிப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி இன்று வரை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக மாற்றப்படாத காட்சிப்பெட்டிகளும், அக்கால தலைமுறையின் துல்லியமான விளக்கக் குறிப்புகளும் ஜி.டி.நாயுடுவின் பணியை வரலாற்றுச் சாட்சியாக பதிவு செய்து வருகின்றன.

ஜி.டி.நாயுடு அரங்கம்:

கோயம்புத்தூரில் உள்ள ஜி.டி. நாயுடு ஹால் பல தசாப்தங்களாக முக்கிய சொற்பொழிவுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான முக்கிய அரங்கமாக இருந்து வருகிறது. இந்த அரங்கிற்கு ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டது வெறும் நினைவுச் சின்னமாக அல்ல, ஒரு நகரம் தன்னைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும்போது உருவாகும் பொதுத் தளங்களின் அடையாளமாகவே அது பார்க்கப்படுகிறது.

ஜி.டி.நாயுடு அறக்கட்டளை:

ஜி.டி. நாயுடு வாழ்ந்த காலத்திலேயே தொடங்கப்பட்ட ஜி.டி.நாயுடு சாரிட்டீஸ் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி, அறிவியல் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. குடும்பத்தினரும் அறங்காவலர்களும் நிர்வகித்து வரும் இந்த அறக்கட்டளை தன்னுடைய பணிகளை விளம்பரப்படுத்தாமல் அமைதியாக செய்து வருகிறது. பாராட்டுகளுக்காக அல்ல, பணிக்காகவே செயல்பட வேண்டும் என்ற ஜி.டி. நாயுடுவின் எண்ணமே இதன் அடிப்படையாக உள்ளது.

கோயம்புத்தூரின் தொழில் கலாசாரம்:

ஜி.டி.நாயுடுவின் மிகப் பெரிய பாரம்பரியம் ஒரு கட்டிடம் அல்ல, ஒரு நிறுவனம் அல்ல, அது கோயம்புத்தூரின் தொழில் கலாச்சாரமே. பீளமேடு தொழிற்பகுதிகள், திருப்பூரின் ஜவுளித் தொழில்கள், ஒண்டிப்புதூரின் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் என கோயம்புத்தூரின் தொழில்துறை அமைப்புகள் அனைத்திலும் ஜி.டி.நாயுடுவின் சிந்தனைகளின் தாக்கம் காணப்படுகிறது.

“ஒரு பவேரியன் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கருவியைப் போலவே கோயம்புத்தூரிலும் தரமான இயந்திரங்களை உருவாக்க முடியும்” என்ற நம்பிக்கையை அவர் மக்களிடம் விதைத்தார். “ஒரு இந்திய பொறியாளருக்கு தேவையானது ஒரு பணிமனை மற்றும் சுதந்திரம் மட்டுமே, அவர் நாட்டுக்குத் தேவையான பொருளை உருவாக்கிவிடுவார்” என்ற எண்ணத்தை வாழ்நாள் முழுவதும் அவர் வலியுறுத்தினார். இன்று இந்தியாவின் மிகவும் தன்னிறைவு கொண்ட தொழில்துறை மையங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் திகழ்வதற்கு ஜி.டி. நாயுடுவின் பார்வை முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

திரைப்படமாக ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை

ஜி.டி.நாயுடுவின் மறைவு அரை நூற்றாண்டு கடந்த நிலையில், அவரது வாழ்க்கையும் சாதனைகளும் தற்போது ஒரு திரைப்படத்தின் மூலம் புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடிக்கிறார். 2026 ஜூலை மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை வாரியத்தின் இறுதி அனுமதிகளுக்கு உட்பட்டு வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படும்.

ஒரு பாடப்புத்தகம் செய்ய முடியாத ஒன்றை ஒரு திரைப்படம் செய்யக்கூடும். பல ஆண்டுகளாக மறக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பாளரின் முகம், குரல், பணிமனை மற்றும் கனவுகளை இந்திய மக்களின் முன் மீண்டும் கொண்டு வர முடியும். இந்த திரைப்படம் ஜி.டி. நாயுடுவின் கதையின் முடிவு அல்ல, மாறாக அவரது பாரம்பரியத்தை நாடு முழுவதும் மீண்டும் அறிமுகப்படுத்தும் புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

ஜி.டி. நாயுடு இன்று இல்லை. ஆனால் அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், தொழில்துறை கலாச்சாரம், அறக்கட்டளைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் சிந்தனைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. கோயம்புத்தூரின் தெருக்களில் நடந்து சென்றாலும், தொழிற்சாலைகளில் நுழைந்தாலும், பொறியியல் கல்லூரி வகுப்பறைகளில் அமர்ந்தாலும், ஒரு மனிதனின் பாரம்பரியம் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதை உணர முடியும். மனிதர் மறைந்தார். ஆனால் அவர் செய்த வேலை இன்னும் வாழ்கிறது. கோயம்புத்தூரின் ஒவ்வொரு இயந்திரத்தின் ஓசையிலும், ஒவ்வொரு தொழிற்சாலையின் சக்கரச் சுழற்சியிலும், ஜி.டி. நாயுடுவின் கனவு இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஜி.டி. நாயுடு போட்டி

ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடும் வகையில் ஜிடிஎன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், தந்தி குழுமத்துடன் (Thanthi Media) இணைந்து "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?"  என்ற பெயரில் Innovation போட்டியை நடத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் தகவல்களுக்கு..  https://events-dailythanthi.com/gdn/

சுயமரியாதையை வளர்க்க 6 முக்கிய வழிமுறைகள்
சுயமரியாதை என்பது மனிதன் தன்னைப் பற்றிய நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான உணர்வை வளர்ப்பதை உள்ளடக்கியது. மேலும் தன்னை சமூகத்தில் நிலைப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியாகும். இந்த சுயமரியாதையை வளர்ப்பது என்பது படிப்படியான செயல்முறையாகும். சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.

கவனம் செலுத்த வேண்டிய விஷயம்

மனதில் எழக்கூடிய எண்ணங்களுக்கு கவனம் செலுத்துங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் அல்லது சுய விமர்சனங்களை அடையாளம் காணுங்கள். நேர்மறையான மற்றும் யதார்த்தமான உறுதிமொழிகளுடன் அவற்றை மாற்றுவதன் மூலம் அந்த எதிர்மறை நம்பிக்கைகளுக்கு சவால் விடுங்கள். உங்கள் பலம், சாதனைகள் மற்றும் தனித்துவமான குணங்களில் கவனம் செலுத்துங்கள். முடிவுகளை எடுக்கும்போது உங்கள் உணர்வுகளையும் தேவைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.

இலக்குகள்

குறுகிய கால மற்றும் நீண்ட கால இரண்டிலும் உங்களுக்காக அடையக்கூடிய இலக்குகளை அமைத்து செயல்படுங்கள். அந்த இலக்குகளை படிப்படியாக எட்டும்போது உங்கள் முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள். இலக்குகளை அடைவது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் சாதனை படைத்ததுபோன்ற உணர்வை வழங்குகிறது.

உடல் நலன்-மன நலன்

உங்கள் உடல் நலன் மற்றும் மன நலனை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் மற்றும் உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணரக்கூடிய செயல்களில் ஈடுபடுங்கள்.

இதில் உடற்பயிற்சி, சத்தான உணவு, போதுமான தூக்கம், அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுதல், ஓய்வெடுக்கும் நுட்பங்களைப் பயிற்சி செய்தல் மற்றும் பொழுதுபோக்குகள் அல்லது பிடித்தமான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும்.

சுய மரியாதை, மகிழ்ச்சியான குடும்பம்

நேர்மறையான நண்பர்கள்

உங்களை மேம்படுத்தி ஊக்குவிக்கும் நபர்களிடம் நட்பு கொள்ளுங்கள். உங்களை நேர்மறையாக வழிநடத்தும் நபர்களுடன் உறவுகளை உருவாக்குங்கள்.

உங்களைப் பற்றி புறம்பேசும் அல்லது மறைமுகமாக உங்களை வீழ்த்த நினைக்கும் நச்சு உறவுகள் அல்லது சூழல்களைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நேர்மறையான தாக்கங்களுடன் உங்களைச் சூழ்ந்துகொள்வது உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கும்.

தோல்விகளில் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்

தோல்விகளின்போது அதையே நினைத்து வருந்துவதற்கு பதிலாக, அவற்றை வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளாகக் கருதுங்கள். பின்னடைவுகள் வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதை புரிந்து கொள்ளுங்கள். தவறு நடந்ததை பகுப்பாய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்து, புதிய அறிவு மற்றும் உத்வேகத்துடன் முன்னேற முயற்சி செய்யுங்கள்.

சுய மரியாதை

சுய இரக்கம்

மற்றவர்களிடமிருந்தும் உயர்ந்த பண்பை எதிர்பார்ப்பதுபோல் நீங்களும் அந்த உயர்ந்த நடத்தையுடன் இருங்கள். கருணை, புரிதல் மற்றும் இரக்கத்துடன் உங்களை நடத்துங்கள். சுயவிமர்சனத்தைத் தவிர்க்கவும். ஒவ்வொருவரும் தவறு செய்கிறார்கள் மற்றும் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொள்வதன் மூலம் சுய இரக்கத்தை பயிற்சி செய்யுங்கள்.

தோல்வி அல்லது துயரத்தின்போது ஒரு நல்ல நண்பரை நடத்துவது போல், உங்களை நீங்களே அன்பாகவும், கனிவாகவும் நடத்துங்கள். இந்த உளவியல் பழக்கமானது, உங்களின் சுய மரியாதையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லும்.

ஜி.டி.நாயுடு.. காலத்தை வென்ற மாமேதை- இந்தியா ஒதுக்கியதை ஜெர்மனி வணங்கியது!
ஜெர்மனியின் லீப்ஜிக் கண்காட்சியில் ஜி.டி. நாயுடுவின் ‘ரசாண்ட்’ சவரக்கத்தி அங்கீகரிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டது.

நம் நாட்டில் ஒரு நீண்டநால வழக்கம் உள்ளது. அதாவது உலக நாடுகள் பாராட்டிய பிறகுதான், சொந்த நாடு நம்மை அங்கீகரிக்கும். இந்த வழக்கத்திற்கு அப்போதே பலியானவர்தான் ஜி.டி.நாயுடு. ஆரம்பத்தில் அவருக்கு ஒரு கார் தயாரிப்பதற்கான உரிமத்தைக்கூட இந்தியா வழங்கவில்லை. ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் காரைத் தயாரித்த நாடு,  அவருக்கு முக்கியத்துவத்தையும், மரியாதையையும் கொடுத்தது.

லீப்ஜிக் வர்த்தகக் கண்காட்சி

இருபதாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் லீப்ஜிக் வர்த்தகக் கண்காட்சி மத்திய ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூடாரமாகத் திகழ்ந்தது. இது ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தின் உற்பத்தியாளர்களும் தங்களின் சிறந்த தயாரிப்புகளை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தும் ஒரு தளமாக இருந்தது.

ஜி.டி.நாயுடுவுக்கு கௌரவம்

இந்த லீப்ஜிக் கண்காட்சியில்தான் ஜி.டி. நாயுடுவின் ‘ரசாண்ட்’ சவரக்கத்தி கவனிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டது. ஜெர்மனியின் துல்லியத்தன்மை மட்டுமே அளவுகோலாகக் கருதப்பட்ட அந்த கண்காட்சி அரங்கில், மெல்லிய – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, அதுவரை ஐரோப்பியர்கள் கேள்விப்பட்டிராத கோவை நகரத்தில் செய்யப்பட்ட சவரக்கத்தி  பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது.

லீப்ஜிக் கண்காட்சி மட்டும் இந்த அங்கீகாரத்திற்கு காரணமல்ல. ஜெர்மனியுடனான ஜி.டி. நாயுடுவின் தொடர்பு இன்னும் ஆழமானதாக இருந்தது. ஜெர்மனி நாட்டு பொறியாளர்களையும்,  தொழிலதிபர்களையும் அவர் சந்தித்தார். அங்கு சென்றதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்து புதிய யுத்திகளைக் கொண்டுவந்து, பவேரியாவிடமிருந்து கோயம்புத்தூர் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்திய உற்பத்தியாளர்களுக்குக் காட்டினார்.

ஜெர்மனியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலான ஒரு இந்தியப் பொறியியலாளராக நாயுடு திகழ்ந்தார். கைகளால் வேலை செய்வது, அளவீடுகளில் துல்லியம், ஆடம்பரமின்மை மற்றும் இயந்திரங்களை சுத்தமாகப் பராமரிப்பது போன்ற ஜெர்மனியப் பண்புகளை அவர் இயற்கையிலேயே கொண்டிருந்தார். அதாவது ஒரு ஜெர்மன் பட்டறையில், தனது சொந்த வீட்டில் இருப்பதுபோலவே இருந்தார்.

முதல் கார் மாடல்

ஆனால் 1952-இல், இந்த முரண்பாடு தாங்க முடியாததாக மாறியது. ஜி.டி. நாயுடுவின் நிறுவனம் இரண்டு இருக்கைகள் கொண்ட பெட்ரோல் காரை உருவாக்கியிருந்தது. அது ஓடக்கூடிய தகுதியுடன் உருவாக்கப்பட்ட முதல் கார் மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

மாருதி கார் இந்தியர்களின் போக்குவரத்து அடையாளமாக உருவெடுப்பதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பும், டாடா மோட்டார்ஸ் தனது முதல் பயணிகள் காரை உருவாக்குவதற்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்தது.

ஜி.டி.நாயுடு

உரிமம் மறுத்த இந்தியா

1952-லேயே இந்தியா தனது சொந்த காரைக் கொண்டு உலகளாவிய வாகன வரைபடத்தில் நுழைவதற்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு அது – முழுமையாக வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு, வணிகரீதியாகப் பெருமளவில் உற்பத்தி செய்யத் தயாராக இருந்த கார் அது.

ஆனால் இந்திய அரசு அதற்கு உரிமம் வழங்க மறுத்தது. 1950-களில் இந்தியாவில் இருந்த கடுமையான தொழில்துறை சட்டங்கள், (லைசென்ஸ் ராஜ்) ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே உற்பத்தி உரிமங்களை வழங்கின. இந்த முட்டுக்கட்டையான அரசு நடைமுறைகளால், ஜி.டி. நாயுடுவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பான அந்த மலிவு விலை கார் அங்கீகரிக்கப்படாமலேயே போனது.

அதன்பின் அந்த கார் உற்பத்திக்கு செல்லவில்லை. மாதிரி வாகனம் ஒருபுறம் ஒதுக்கி வைக்கப்பட்டது. இந்த வரலாறு பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பாகவே,  மறைந்து போனது.

ஒருபுறம் பொறியியல் துறைக்காக நாம் இன்றும் வியந்து பாராட்டும் ஜெர்மனி நாடு, கோயம்புத்தூரில் வடிவமைக்கப்பட்ட ஒரு சவரக்கத்தியைப் பாராட்டியிருக்கிறது. மறுபுறம் இந்திய அரசு, கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்ட ஒரு காருக்கு உற்பத்தி உரிமம் வழங்க மறுத்திருக்கிறது. கடந்த எழுபது ஆண்டுகளாகத் தமிழ்நாடு இந்த வரலாற்றைச் சுமந்து கொண்டுதான் வருகிறது.

ஜி.டி. நாயுடு போட்டி

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் நடிப்பில் ஜி.டி.என் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர்கள், தந்தி குழுமத்துடன் (Thanthi Media) இணைந்து "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?"  என்ற பெயரில் Innovation போட்டியை நடத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் தகவல்களுக்கு..  https://events-dailythanthi.com/gdn/

ஜி.டி.நாயுடு: பஸ் கண்டக்டர் டூ இந்தியாவின் எடிசன்.. ஒரு நெகிழ்ச்சிப் பயணம்!
கோவையின் கலங்கல் பகுதியைச் சேர்ந்த பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திய ஒருவர், கோவை மாவட்டத்தின் தொழிற்புரட்சிக்கு எப்படி அடித்தளமிட்டார் தெரியுமா?

ஜி.டி.நாயுடு - ஆரம்ப வாழ்க்கை

கோவையிலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் இருக்கும் கலங்கல் எனும் சிறு கிராமத்தில் தான் ஜி.டி.நாயுடு பிறந்தார். அவரின் இயற்பெயர் கோபால்சாமி. தந்தையின் பெயரான துரைசாமி நாயுடுவையும் சேர்த்து கோபால்சாமி துரைசாமி நாயுடு, சுருக்கமாக ஜி.டி.நாயுடு என்று அறியப்பட்டார். சிறுவயதில் கேள்விகளின் நாயகனாக விளங்கிய அவருக்குக் கிடைத்ததென்னவோ ஒரு சில கேள்விகளுக்கான விடைகளே. அவரால் ஓரிடத்திலேயே அமர்ந்திருக்க முடியவில்லை அதேநேரம் ஏற்கனவே இருக்கும் இந்த அமைப்பு அவரோட சேர்ந்து ஓடவும் தயாராக இல்லை. அதனால், பள்ளிப் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், அதன்பின்னர் அவர் செய்த செயல்கள் இன்றைய அத்தனை வகுப்பறைகளிலும் இருக்க வேண்டிய வாழ்க்கைப் பாடம். ஆனால் அந்தக் கதை எங்குமே இடம்பெறவில்லை. அப்படி என்ன செய்தார் என்று தானே கேட்கிறீர்கள்?

யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ்

இளம் வயதில் சொந்தமாக புத்தகங்கள் படித்து பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொண்டவர், ஒரு கட்டத்தில் கடன் வாங்கி ஒரு பேருந்தை விலைக்கு வாங்கினார். அந்தப் பேருந்தில் அத்தனை வேலைகளையும் அவரே செய்கிறார். பேருந்து நடத்துனராகவும், பேருந்தை இயக்கும் ஓட்டுநராகவும் செயல்பட்டதோடு, எப்போதெல்லாம் பழுதாகி நிற்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு மெக்கானிக்காகி அதைப் பழுதும் பார்க்கிறார். இரவு – பகல் பாராது உழைத்து பேருந்து எப்படி இயங்குகிறது என்பதையும் அறிந்துகொண்டார். ஒரு பேருந்து – இரண்டு பேருந்துகளானது. இரண்டு பேருந்துகள் மொத்தமாக ஒரு போக்குவரத்து குழுமமாக மாறியது. அந்தக் குழுமம் தான் மெட்ராஸ் மாகாணத்தில் முதல் மோட்டார் டிரான்ஸ்போர்ட் நிறுவனமாக கோவையில் தொடங்கப்பட்ட யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ் (Universal Motor Service) மாறியது. அதன் நடத்துநராக இருந்த ஜி.டி.நாயுடு, தனது முப்பது வயதை எட்டுவதற்குள்ளேயே அதன் உரிமையாளரானார்.

வகுப்பறையில் அவரால் முழுமையாக அமர்ந்திருக்க முடியவில்லை. அதனால், அவர் தனக்கான வகுப்பறையை வெளியே கட்டமைத்தார்.

மனதளவில் போக்குவரத்துத் துறையோடு ஜி.டி.நாயுடு நின்றுவிடவில்லை. அடிப்படையில் ஒரு பொருள் எப்படி செயல்படுகிறது, அது எவ்வாறு இயங்குகிறது என்ற இயங்கியலின் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்ட ஒரு சிந்தனையாளர். என்ஜின் அவரை லேத் பட்டறையை நோக்கியும் லேத் பட்டறை வொர்க்‌ஷாப்பை நோக்கியும், அந்தப் பயணம் அவரை அங்கிருந்து புது கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை நோக்கியும் கொண்டு சென்றது.

மின்சார மோட்டார்

1930-களின் இறுதியில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார மோட்டாரை முழுமையாக உருவாக்கியிருந்தார் ஜி.டி.நாயுடு. இது அப்போதைய பாலிடெக்னிக் படிப்பை முடித்த பொறியாளர்களால் கூட சாத்தியமில்லாதது. அந்த மோட்டாரில் பயன்படுத்தப்பட்ட மொத்த பாகங்களும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை; அவை அனைத்தும் அவரின் கோவை வொர்க்‌ஷாப்பிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை ஜி.டி.நாயுடு 1937-ம் ஆண்டு நிறைவேற்றிக் காட்டினார். அந்த மின் மோட்டாரின் பின்னணியில் எந்தவொரு அரசின் உதவியோ அதேபோல் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்போ இல்லை. தற்சார்பு என்று நம் நாட்டின் உணர்வைப் பெயரிட்டு பின்னாட்களில் அறிமுகப்படுத்தும் முன்பே ஜி.டி.நாயுடு அந்த உணர்விலேயே வாழ்ந்தவர்.

ஜி.டி.நாயுடு

ஜி.டி.நாயுடு - கால் நூற்றாண்டு கண்டுபிடிப்புகள்

அதைத் தொடர்ந்து ஜி.டி.நாயுடுவால் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தப்பட்ட கால் நூற்றாண்டு கண்டுபிடிப்புகள் எந்தவொரு நாட்டையும் குறிப்பாக காலனி ஆதிக்கத்தில் இருந்த மற்றும் சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் வியப்பூட்டுபவை. அதன் பட்டியலும் மிக நீளமானது. மண்ணெண்ணெயில் இயங்கும் மின்விசிறி. மெல்லிய சவரக்கத்தியான ரசண்ட்.  அது பிற்காலத்தில் ஐரோப்பாவிற்குப் பயணம் செய்து, தமிழ்நாட்டைத் தவிர வேறு எதையும் அறியாத ஒரு கண்டத்தில் அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்தது. வானொலி -வாக்குப்பதிவு இயந்திரம் தொடங்கி கோயம்புத்தூரின் முதுகெலும்பாக விளங்கிய ஜவுளி ஆலைகளுக்கான உபகரணங்கள் என அவர் காப்புரிமைகள் பெற்றிருந்த கண்டுபிடிப்புகளும் ஏராளம். இந்தக் கண்டுபிடிப்புகளுக்காக அவர் பரிசுகளை வென்றார்; பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தார். நகரமயமாக்கலின் தொடக்கப்புள்ளியில் நகரின் மத்தியில் இருந்த தனது வொர்க்‌ஷாப்பில் இருந்து தொடர்ச்சியாகத் தனது பணிகளை கிரீஸ் தோய்ந்த கைகளோடு தொய்வின்றி மேற்கொண்டு வந்தார் ஜி.டி.நாயுடு.

ஜி.டி.நாயுடுவைப் பொறுத்தவரையில் என்றுமே, தனது இலக்கை அடைந்துவிட்டதாக நினைத்து ஓரிடத்திலேயே நின்றதில்லை. அவர் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கட்டமைத்துக் கொண்டே இருந்தார். நிறுவனங்களுக்கு நிதியளித்து, ஆதரவுக்  கரம் நீட்டிக் கொண்டே இருந்தார். அன்றைய நாட்களில் அவருக்கு இணையான இருந்த மற்றவர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் நேரம் செலவழித்துக் கொண்டிருந்த நிலையில், ஜி.டி.நாயுடு எளிமையான ஆடையில் தனது பட்டறையில் அடுத்த கண்டுபிடிப்புக்கான பணியில் ஈடுபட்டிருந்தார். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருந்தார்.

கோவையின் செல்வத்தை உருவாக்கியவர் என்கிற சொற்றொடர் இன்றளவும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது. ஜி.டி.நாயுடுவின் அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய உழைப்பால் கிடைத்த பெருமை அது. ஆனால், அந்த சொற்றொடர் அவரின்  முழுமையான பங்களிப்பைப் பறைசாற்றவில்லை என்றே சொல்லலாம். ஒரு நகரின் அடையாளத்தை, அதன் முகத்தை நாடு தழுவிய அளவில் கொண்டு சேர்த்தவர். உள்ளூர் மனிதவளத்தைப் பயன்படுத்தி, உள்ளூர் பொருட்களைக் கொண்டே உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டவர் ஜி.டி.நாயுடு என்கிற மாமேதை. சொந்த நாட்டின் கொடியையே ஏற்ற முடியாத கடும் கட்டுப்பாட்டில் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாட்டுக்கு இந்தப் பெருமையைத் தேடித் தந்தவர் ஜி.டி.நாயுடு. கோவைக்கு அந்தப் பெருமை நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னரே கிடைத்ததன் ஒரே காரணம் ஜி.டி.நாயுடு.

ஜி.டி. நாயுடு போட்டி- ரூ.10 லட்சம் பரிசு

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் நடிப்பில் ஜி.டி.என் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர்கள், தந்தி குழுமத்துடன் (Thanthi Media) இணைந்து "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?"  என்ற பெயரில் Innovation போட்டியை நடத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் தகவல்களுக்கு..  https://events-dailythanthi.com/gdn/

ஜி.டி. நாயுடு: இந்தியாவின் எடிசன்
எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்து அரிய பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதிசயத்தை நிகழ்த்தி கோவைக்கு பெருமை தேடித்தந்தவர் ஜி.டி.நாயுடு.

ஆரம்பகால வாழ்க்கை

கோவையை அடுத்த சூலூர் அருகே கலங்கல் என்ற இடத்தில் கடந்த 1893-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தார் ஜி.டி.நாயுடு. அவருடைய இயற்பெயர் துரைசாமி நாயுடு. தந்தை பெயருடன் சேர்த்து கோபால்சாமி துரைசாமி என்பதைத்தான் சுருக்கமாக ஜி.டி.நாயுடு என்று அன்பாக அழைக்கப்பட்டார். இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டமில்லாதவராக இருந்த அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். ஆனால் அவரின் அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு திறன் மற்றும் செயலாற்றல் திறன் பல ஆசிரியர்களுக்கு சமமாக இருந்தது.

ஆரம்பத்தில் அவர் தனது மாமாவின் தோட்டத்தில் வேலைக்கு சென்றார். அப்போது ஒருநாள் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அந்த காலத்து மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றார். அந்த பிரமாண்டமான மோட்டார் சைக்கிளை ஜி.டி.நாயுடு வியந்து பார்த்தார். அந்த மோட்டார் சைக்கிள் பழுதானது. அதனை ஆங்கிலேய அதிகாரி ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அங்கு சென்ற ஜி.டி.நாயுடு ஆங்கிலேய அதிகாரிக்கு கழிவு துணி மற்றும் மண்எண்ணெய் கொடுத்து உதவினார். இதனால் ஆங்கிலேய அதிகாரி அவரை வெகுவாக பாராட்டினார்.

முதல் மோட்டார் சைக்கிள்

அந்த மோட்டார் சைக்கிளை எப்படியாவது நாம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. இதையடுத்து அவர் தோட்ட வேலையில் இருந்து விலகி ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதில் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு ஆங்கிலேய அதிகாரியை சந்தித்து அந்த மோட்டார் சைக்கிளை வாங்கினா. பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை அவர் அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்தார். அங்குதான் அவருக்கு ஆட்டோ மொபைல் பற்றிய ஆர்வம் தொடங்கியது. பின்னர் அவர் பருத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார். மும்பையிலும் தன்னுடைய பருத்தி தொழிலை விரிவுபடுத்தினார். ஆனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.

யுனைட்டெட் மோட்டார் சர்வீஸ்

அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயரான ஸ்டேன்ஸ் துரை என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அதில் ஒரு பஸ்சை கடனாக பெற்று முதலாளியாக மட்டுமல்லாமல் தொழிலாளியாகவும் செயல்பட்டு பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு பஸ்சை இயக்கினார். பின்னர் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக பஸ் நிறுத்தத்துக்கு பஸ் வரும் நேரத்தையும், புறப்படும் நேரத்தையும் காட்டும் கருவியை கண்டுபிடித்தார்.

குறைந்த விலை காரை தயாரித்தார். அந்த காலத்திலேயே பயணச்சீட்டு வழங்குவதற்கான ஒரு எந்திரத்தையும் கண்டுபிடித்து தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். அப்போதெல்லாம் என்ஜின் சூடாகாமல் இருக்க ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றவேண்டும், மோட்டார் ரேடியேட்டருக்கு இணையாக ஒரு எந்திரத்தை கண்டுபிடித்து அந்த பிரச்சினைக்கும் தீர்வு கண்டார்.

ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள்

முன்காலத்தில் புகைப்படத்துறையில் மிகவும் உதவிகரமாக இருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்ட்டர் என்ற புகைப்பட கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்கும் கருவி, எந்தவிதமான வெட்டுக்காயமும் இன்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என இவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. இவர் கண்டுபிடித்த பிளேடை தானே தயாரித்துக்கொள்ள விரும்பிய ஒரு அமெரிக்க நிறுவனம் அதன் காப்புரிமையை வாங்க விலை பேசியது. தாய் நாட்டிற்கே தன்னுடைய கண்டுபிடிப்புகள் பயன்படவேண்டும் என்று எண்ணிய அவர், தமிழ் நாட்டிலேயே அதை தயாரிக்க முடிவெடுத்து நார்வே நாட்டிலிருந்து அதன் மூலப்பொருளை இறக்குமதி செய்ய விரும்பினார். அந்த முயற்சிகள் கை கூடாமல் போகவே காப்புரிமையும் கை நழுவிப்போனது. இவருக்கு ஆறுதலாக ஜெர்மனியில் நடைபெற்ற பொருட்காட்சியில் இவருடைய கண்டுபிடிப்பான பிளேடுக்கு பரிசு கிடைத்தது.

பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற விரும்பியும் தர மறுத்தார் ஜி.டி.நாயுடு. என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்துமே நம் தேசத்திற்குதான் பயன்பட வேண்டும், அதனால்தான் காப்புரிமை கோராமல் வைத்திருக்கிறேன். இந்தியர் யாராக இருந்தாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

நாயுடு காட்டன்

அரியவகை கருவிகள் மட்டுமின்றி விவசாயத்திலும் கால்பதித்த அவர் சோள செடிக்கு மருந்து மூலம் குறுகிய காலத்திலேயே 26 கிளைகளுடன் பதினெட்டரை அடி உயரத்திற்கு வளரச்செய்தார். சாதாரண சோள செடியில் 3 அல்லது 4 கதிர்கள்தான் இருந்தன. ஆனால் இவருடைய கண்டுபிடிப்பில் உருவான செடிகளில் 39 கதிர்கள் வரை உருவாகின. தொடர்ந்து பருத்திசெடி, துவரை செடி என அவருடைய ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.

ஜெர்மானியர்கள் அவருடைய அதிசய பருத்தி செடிக்கு 'நாயுடு காட்டன்' என்று பெயரிட்டு கவுரவித்தனர். மேலும் இவர் சித்த வைத்தியத்திலும் சிறந்து விளங்கினார். ஒருநாள் ஆங்கிலேயர்கள் வீதியில் போட்டுச்சென்ற வலி நிவாரணி பாட்டிலை எடுத்து பார்த்தார். அதை எடுத்து அதுபோன்று வலி நிவாரணி மருந்து தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தார். சலவை செய்யும் எந்திரம், காபி தயாரிக்கும் கருவி, சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும் கருவி, உருளைக்கிழங்கு தோல் உறிக்கும் கருவி, சாவி கொடுக்கும் சுவர் கடிகாரம், ரேடியோ கிராம், தமிழ் டயல் ரேடியோ, எலெக்ட்ரிக் மோட்டார், கால்குலேட்டர் என அவர் கண்டுபிடிப்புகளை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம்.

இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் உற்பத்தித் தொழிற்சாலை

தன்னுடைய சுய முயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கினார். இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்திசெய்யும் தொழிற்சாலை கோவையில் அமைந்ததற்கான பெருமை அவரை சேரும். அவருடைய திறமைகளுக்கு அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருந்தால் 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்பட்டவர், உலகம் முழுவதும் எடிசனுக்கு நிகராக போற்றப்பட்டிருப்பார். இருந்தபோதிலும் இவருடைய வாழ்க்கை வரலாறு இப்போதும் இந்திய இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது

ஜி.டி.நாயுடு 1974-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி காலமானார். கோவை அவினாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி மற்றும் அருங்காட்சியகம் இவரது அறிவாற்றலை தற்போதும் பறைசாற்றுகிறது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் கூட தினமும் ஏராளமானவர்கள் வந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

ஜி.டி. நாயுடு போட்டி- ரூ.10 லட்சம் பரிசு

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் நடிப்பில் ஜி.டி.என் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாளர்கள், தந்தி குழுமத்துடன் (Thanthi Media) இணைந்து "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?"  என்ற பெயரில் Innovation போட்டியை நடத்துகிறார்கள். மொத்த பரிசுத்தொகை ரூ.10 லட்சம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் தகவல்களுக்கு..  https://events-dailythanthi.com/gdn/

சண்டே ஸ்பெஷல்: சுவையான முட்டை சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-

பாஸ்மதி அரிசி - ½ கப்

முட்டை - 6

கடலை எண்ணெய் - 1½ டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1 (பெரியது)

இஞ்சி-பூண்டு விழுது - ½ டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மிளகாய் பொடி - ½ டீஸ்பூன்

மல்லிப்பொடி - ½ டீஸ்பூன்

கரம் மசாலா - ½ டீஸ்பூன்

சீரகப்பொடி - ¼ டீஸ்பூன்

பெருஞ்சீரகப் பொடி - ¼ டீஸ்பூன்

மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

மிளகுப்பொடி - ½ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:-

முதலில் பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்து ஆறவைத்துக்கொள்ளவும். சாதம்  குழைந்துவிடக்கூடாது. அடுத்து, கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். அதில், எண்ணெயை ஊற்றி சூடாகியதும், வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். வெங்காயம் சிவந்துவிடக்கூடாது. சிறிதளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கிய உடன், சிறிது கருவேப்பிலை, இஞ்சி-பூண்டு பேஸ்ட், வெட்டி வைத்த பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் வதக்கவும்.

அடுத்து, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலா, சீரகப்பொடி, பெருஞ்சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறிவிடவும். அடுப்பில் தீயை குறைத்து நன்கு வதக்கவும். வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து, நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும். தேவைக்கு ஏற்ப உப்பை சேர்த்துக்கொள்ளவும்.

மசாலா எல்லாம் நன்கு சேர்ந்து, தொக்கு பக்குவத்திற்கு வந்தவுடன், பாத்திரத்தில் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, முட்டைகளை உடைத்து ஊற்றி, தனியாக வதக்கவும். திட்டு திட்டாக முட்டை வதங்கியவுடன், மசாலா தொக்குடன் சேர்த்து கிண்டிவிடவும்.

பின்னர், ஆறவைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். தொடர்ந்து, கொத்தமல்லி இலை மற்றும் மிளகுப்பொடியை சேர்த்து நன்கு கிளறிவிடவும். சுவையான முட்டை சாதம் ரெடி. இதற்கு சைடு டிஸ் எதுவும் தேவையில்லை. பள்ளி செல்லும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
கையில் புத்தகப் பையோடும், முகத்தில் புன்னகையோடும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில், வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பல சிறுவர்-சிறுமிகள் வேலைக்குச் சென்று தங்களின் எதிர்காலத்தை இழக்கிறார்கள். இந்த அவல நிலையை மாற்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு உருவானதே 'உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்' ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 2002 ஜூன் 12-ம் தேதி இத்தினத்தை முதன் முதலில் உலக தொழிலாளர் சங்கம் அறிவித்தது.

அவ்வகையில் இன்று (12.6.2026) குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுகரிக்கப்படுகிறது. வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர், சிறுமிகளை மீட்டெடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய இந்த நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதி மொழி ஏற்கப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

குழந்தை தொழிலாளர் சட்டம்

குடும்பச் சூழ்நிலை, வறுமை, கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் பெற்றோர்களின் போதிய விழிப்புணர்வின்மை ஆகியவற்றின் காரணமாகவே பல சிறுவர்கள் மிகச் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் சட்டம் கடுமையாகப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட சிறார்களை வேலையில் அமர்த்தக்கூடாது. இருப்பினும் பல்வேறு தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை காண முடிகிறது.

மத்திய அரசு வேண்டுகோள்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான இந்த நாளில், குழந்தைகளைச் சுரண்டுவதற்கு எதிராகத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒன்றிணைந்து நிற்கிறது. அத்துடன் ஒவ்வொரு குழந்தையின் கல்வி, பாதுகாப்பு மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

எந்த இடத்திலாவது குழந்தைத் தொழிலாளர் தொடர்பான ஏதேனும் நிகழ்வை நீங்கள் கண்டால், navjivan.labour.gov.in என்ற இணையதளத்தில் உள்ள 'நவஜீவன்' (Navjivan) போர்ட்டல் வாயிலாக அது குறித்து தகவல் தெரிவிக்கவும். ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கவும், முன்னேறவும், சிறந்து விளங்கவும் வாய்ப்பு கிடைப்பதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்

எந்த இடத்திலாவது குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்.