மழைக்கால சுற்றுலாவில் மனதில் கொள்ள வேண்டிய 08 விஷயங்கள்.!!

all photo using freepik
மழைக்காலம் இன்ப சுற்றுலாவிற்கு இனிமை சேர்ப்பதாக அமைய வேண்டும். அசவுகரியமான பயண அனுபவத்தை கொடுத்துவிடக்கூடாது.
மழைக்கால சுற்றுப்பயணம் செய்யும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தேவையற்ற சிரமங்களை தவிர்க்க முடியும். அதற்கான டிப்ஸ்கள் உங்கள் கவனத்திற்கு.
வானிலையை கவனிக்கவும்: நீங்கள் செல்லும் இடத்தின் வானிலையை கருத்தில் கொண்டு சுற்றுப்பயணத்தை திட்டமிடுவது முக்கியமானது. குறிப்பாக அந்த சமயத்தில் புயலோ, கன மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் ஏதும் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்வது அவசியமானது.
ஆடைகள் தேர்வு: மழைக்காலம் என்பதால் ஈரப்பதமான வானிலையே அதிக நேரம் நீடிக்கும். அதனால் விரைவாக உலரும் தன்மை கொண்ட ஆடைகளை அணிந்து செல்வது நல்லது. திடீர் மழை பெய்தால் அதனை அணுகுவதற்கு ஏதுவான 'ரெயின் கோட்'டையும் மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.
உடமையை பாதுகாத்தல்: செல்போன், ஹெட்செட், பவர் பேங்க் உள்ளிட்ட எலெக்ட்ரிக் சாதனங்கள், பயண டிக்கெட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் ஈரப்பதமாகாமல் இருப்பதற்கு ஏதுவாக நீர்புகாதன்மை கொண்ட கவர்களையும் மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.
கொசு விரட்டியை பயன்படுத்துங்கள்: மழைக்காலத்தில் கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளின் ஆதிக்கம் மிகுந்திருக்கும். கொசுக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள கொசுவிரட்டிகளை கைவசம் வைத்திருங்கள். தேவைப்பட்டால் கொசு வலைகளையும் உடன் எடுத்துச்செல்லுங்கள்.
நீர் மூலம் பரவும் நோய்கள்: மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நீர்வழி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரை பருகாதீர்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராகவே இருந்தாலும் அதனை சூடுபடுத்தி பருகுங்கள்.
நடையில் கவனம் தேவை: மழைக்காலத்தில் சில இடங்களில் தரைகள் வழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதனால் படிக்கட்டுகள், குறுகலான பாதைகளில் நடக்கும்போது கவனம் தேவை.
கவனத்தில் கொள்ளுங்கள் நீங்கள் பயணம் செய்யும் இடத்தில் இருக்கும் சாலைகளின் தன்மை நிலைமை, நிலச்சரிவு உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். உள்ளூர் செய்திகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.
போக்குவரத்தை திட்டமிடுங்கள்: அதிக மழை அல்லது வெள்ளம் காரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே புறப்படும் வகையில் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
Explore