வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும், புத்துணர்வையும் தரக்கூடியது.
credit: freepik
பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்
credit: freepik
வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியை தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும்.
credit: freepik
கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றை போக்கும்.
credit: freepik
கேரட்: கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் கண்களுக்கு பார்வை திறனை அளிக்கிறது. உடலுக்கு உறுதியைக் கொடுக்கும்.
credit: freepik
குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
credit: freepik
அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்தும். மலச்சிக்கலை போக்கக்கூடியது.
credit: freepik
புரோக்கோலி: கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்க உதவுகின்றன.
credit: freepik
கீரைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, இதய ஆரோக்கியம் போன்ற பல பலன்களை கீரை சாப்பிடுவது மூலம் பெறலாம்.