இதய நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் 7 அறிகுறிகள்!

credit: freepik
மார்பு வலி: இதய நோய்க்கான பொதுவான அறி குறிகளில் இதுவும் ஒன்றாகும். மார்பில் அழுத்தம், இறுக்கம் அல்லது மார்பு முழுவதும் சில நிமிடங்கள் வலி நீடிக்கும். அடிக்கடி இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.
credit: freepik
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு: ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது பட படப்பு இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் படபடப்பது அல்லது துடிப்பதை தவிர்ப்பது போல் உணரலாம்.
credit: freepik
வீக்கம்: இதய நோய் அறி குறியை வெளிப்படுத்தும் மற்றொரு காரணி வீக்கம். கால்கள், கணுக்கால் அல்லது பாதங்களில் வீக்கம் ஏற்படக்கூடும்.
credit: freepik
அசவுகரியம்: உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு சார்ந்த கடினமான வேலைகளில் ஈடுபடும்போது மார்பில் அசவுகரியம் உண்டாவது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
credit: freepik
அஜீரணம், நெஞ்செரிச்சல்: குமட்டல், அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்சினைகள் கூட இதய நோய்க்கான அறிகுறிகளாக அமையக்கூடும்.
credit: freepik
தலைச்சுற்றல்: தூக்கத்தில் இருந்து எழும்போதோ, அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து நிற்கும்போதோ, வேலை பார்க்கும்போதோ தலைச்சுற்றல் உணர்வை அனுபவிப்பதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
credit: freepik
முதுகு வலி: கழுத்து, தாடை அல்லது முதுகில் வலி ஏற்படுவதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக மார்பு வலி அல்லது மூச்சுத்திணறல் போன்ற பிற அறிகுறிகளும் சேர்ந்து வெளிப்படுவது இதய நோய்க்கு வித்திடலாம்.
credit: freepik
Explore