வித்தியாசமான 'வில்லேஜ்'!

இத்தாலியில் இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கில் உள்ளது விகனெல்லா (Viganella) கிராமம்.
மலையின் உயரம் காரணமாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை பனிக்காலத்தில் இந்தக் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக சூரிய ஒளி விழுவதில்லை.
'நெதர்லாந்தின் வெனிஸ்' என்றழைக்கப்படும் கீத்தூர்ன் (Giethoorn) கிராமம்.
இந்தக் கிராமத்தில் சாலைகளே கிடையாது. சிறிய படகுகள் மூலம் மட்டுமே இந்தக் கிராமத்தில் பயணிக்க முடியும்.
மத்திய சீனாவில் உள்ள தியான்சு மலைப்பகுதியில் உள்ளது கங்ஷி டாங்க் (Ganxi Dong) கிராமம்.
இந்தக் கிராமத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே அனைவரும் தற்காப்புக்கலை கற்பது காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகில் மிக அதிகமாக மழை பெய்யும் இடமாக மேகாலயாவில் உள்ள மாசின்ரம் (Mawsynram) கிராமம் திகழ்கிறது.
வருடம் முழுவதும் மழை பொழிவதால், இங்குள்ள காசி இனமக்கள் மூங்கில் மற்றும் வாழையிலையைப் பயன்படுத்தி ஆளுயரக் குடையுடன் வலம் வருகின்றனர்.
Explore