ஒரு சில சமையல் டிப்ஸ்..!

அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கருகி போனால் உப்பு நீரில் ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் அழுத்தி தேய்க்க சுத்தமாகி விடும்.

தயிர் புளித்துப்போனால் அதில் 4 டம்ளர் நீர் ஊற்றி அரைமணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட்டால் தயிர் புளிக்காது.

பாட்டில் மூடியை திறக்க முடியாமல் போனால் ஈரத்துணியால் மூடியை இறுகப்பற்றி கொண்டு திருகினால் சுலபமாக கழன்று விடும்.

மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.

சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.

அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது.

தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

பூண்டுவை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதன் மேல் தோலை எளிதாக நீக்கி விடலாம்.

துவரம் பருப்பை வேகவைக்கும் பொழுது தண்ணீரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பொங்காது.

மேலும் படிக்க