மாதத்திற்கு ஒரு முறை உப்பை போட்டு மிக்ஸியை சுழலச் செய்தால் மிக்ஸியின் பிளேடுகள் கூர்மையாக இருக்கும்.
metaAI
பிஸ்கட் இருக்கும் டப்பாவின் அடியில் சிறிது சர்க்கரையைத் தூவி காற்று புகாமல் இறுக மூடி வைத்தால் பிஸ்கெட் நமத்துப் போகாமல் மொரமொரப்பாக இருக்கும்.
metaAI
முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையானபோது உடைத்துக் கொள்ளலாம். தேங்காய் கெடாமல் இருக்கும்.
metaAI
எண்ணெய்ப் பிசுக்கான பாத்திரங்களைக் கழுவுவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் கடுகுத்தூளைப் போட்டு கழுவினால் பாத்திரங்கள் சுத்தமாக எந்தவித வாடையும் இல்லாமல் இருக்கும்.
வெந்தயக் குழம்பு தயார் செய்யும்போது ஒரு டீ ஸ்பூன் எள்ளுப் பொடியை தூவினால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
சூடான எண்ணெய்யில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு எதை பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.
metaAI
தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.