லட்சத்தீவு தேனிலவுக்கு ஒரு சிறந்த இடமாகும், ஏனெனில் இது தனிமை, அமைதி மற்றும் அழகான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. இங்கு தேனிலவு தங்கும் இடங்கள், நீர் விளையாட்டுகள் (scuba diving, kayaking போன்றவை) மற்றும் கடற்கரை உலாவல் போன்ற பல விஷயங்கள் உள்ளன.
கவரட்டி தீவு: இங்கு மெய்சிலிர்க்க வைக்கும் சூரிய உதயத்தை கண்டுகளிக்கலாம்.
கத்மத் தீவு: பயணிகள் சுவையான உள்ளூர் உணவை ருசித்து மகிழ்வதற்கு ஏற்ற சுற்றுலாத்தலமாகும்.
பங்காரம் அட்டோல்: கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள வீடுகளில் பொழுதை களிக்கலாம்.
கல்பேனி தீவு: நிதானமாக உட்கார்ந்து அமைதியாக ஓய்வு எடுக்கும் சுற்றுலாத்தலமாகும்.
அகத்தி தீவு: இது ஒரு அழகிய இயற்கை வளம் சூழ்ந்த கடற்கரைகளை கொண்டது.
அமினி தீவு : இங்கு ஸ்கூபா டைவிங் மூலம் நீருக்கடியில் உள்ள வண்ணமயமான பவளப்பாறைகள் மற்றும் கடல் உயிரினங்களை காணலாம்.
பிட்டி பறவைகள் சரணாலயம்: இங்கு பல விதமான பறவைகள் வருவதை பார்த்து மகிழலாம்.