தமிழ்நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் மிக முக்கியமான இடங்களில் ஒன்று கொடைக்கானல். எந்த அளவிற்கு இயற்கை அலைகிறதோ, அதே அளவுக்கு ஆபத்தும் நிறைந்த இடமாக இந்த கொடைக்கானல் பார்க்கப்படுகிறது.
கொடைக்கானலின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவதில் 'குணா குகை'யும் ஒன்று, Green Valley View Point-ற்கும், pillar rocks-க்கும் மத்தியில்தான் அமைந்துள்ளது இந்த 'குணா குகை.
1821 ஆம் வெளிநாட்டவர் பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது.
மிகவும் திகிலூட்டப்படும் இந்த இடத்திற்கு டெவில்ஸ் கிச்சன் அதாவது பேய்களின் சமையலறை என்ற பெயரும் உள்ளது.
கடல் மட்டத்திரிலிருந்து 2,230 மீட்டர் உயரத்தில் இந்த குகை அமைந்துள்ளது. ஷோலா மரங்களாலும் , அடர்ந்த தாவரங்களாலும் இந்த குகை சூழ்ந்திருக்கும்.
1900 ஆம் ஆண்டுகளிலேயே பலரும் சாகசத்திற்காக இந்த குகைக்கு வருவார்களாம் , இதில் பல மர்ம மரணங்களும் நிகழ்ந்துள்ளது. உள்ளே சென்ற பலரும் காணாமலேயே போயிருக்கின்றனர், என்று இந்த குகைக்கு பல திகில் கதைகளும் உண்டு.
கமல் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான குணா படத்திற்குப் பிறகு இந்த பேய்களின் சமையலறை, குணா குகை என்றே அழைக்கப்பட்டது.