நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களில் முக்கியமானது அமுக்கரா கிழங்கு.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை.
நரம்புதளர்ச்சி பிரச்சினை இருப்பவர்கள் அமுக்கரா கிழங்கை எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் அமுக்கரா கிழங்கு பொடியில் மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து பசும்பாலில் கலந்து குடித்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.
வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா கிழங்கு சிறந்த மருந்து.
மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.
பெண்கள் அமுக்கரா கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளை சீராக்கும்.
ஹார்மோன் சமச்சீரின்மையால் மாதவிடாய் கோளாறுகள், குழந்தை பேறின்மை போன்றவை ஏற்படும். அதையும் இந்த கிழங்கு சீர்செய்யும்.